குக் வித் கோமாளியில் சிருஷ்டி செய்து முக்ந்த் வாடி இப்படி வீட்டிலயே செஞ்சி பாருங்க!
பஞ்சாபி ரெசிபிக்கள் பெரும்பாலும் காரமாகவும், சுவையானதாகவும் இருக்கும். அதிலும் கிரேவி ரெசிபிக்களை பற்றி சொல்லவே வேண்டாம். சுவை ஆள மயக்கும். அதிலும் சிக்கன் கிரேவி, வெஜ் கிரேவி, கடாய் சிக்கன் போன்றவை குறிப்பிடத்தக்கவை. அந்த வகையில் இப்போது பஞ்சாபி ஸ்டைல் முக்ந்த் வாடி மசாலாவை எப்ப
பஞ்சாபி ரெசிபிக்கள் பெரும்பாலும் காரமாகவும், சுவையானதாகவும் இருக்கும். அதிலும் கிரேவி ரெசிபிக்களை பற்றி சொல்லவே வேண்டாம். சுவை ஆள மயக்கும். அதிலும் சிக்கன் கிரேவி, வெஜ் கிரேவி, கடாய் சிக்கன் போன்றவை குறிப்பிடத்தக்கவை. அந்த வகையில் இப்போது பஞ்சாபி ஸ்டைல் முக்ந்த் வாடி மசாலாவை எப்படி செய்வதென்று இந்த பதிவில் நாம் காண்போம்.
இந்த டிஷ் உண்மையில் மிகவும் எளிமையானது. மேலும் இது மழைக் காலங்களில் வீட்டில் செய்து சாப்பிட்டால், சூப்பராக இருக்கும். சப்பாத்தி, நாண், சாதம், இட்லி, தோசைக்கு தொட்டுக்கொள்ள அருமையாக இருக்கும் இந்த பஞ்சாபி முக்ந்த் வாடி. இந்த கிரேவி குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி சாப்பிடும் வகையில் இருப்பதோடு, நாவிற்கு விருந்தளிக்கும் வகையில் அட்டகாசமான ருசியில் இருக்கும்.
நம்ம ஊர் கிரேவிக்கும் பஞ்சாபி ஸ்டைல் கிரேவிக்கும் இருக்கும் பெரிய வித்தியாசம் காரம் தான். நம்ம ஊர் கிரேவியை சுவைத்து அலுத்து போனவர்களுக்கு பஞ்சாபி ஸ்டைல் முக்ந்த் வாடி கிரேவி ஒரு நல்ல மாற்று. சரி, இப்போது அந்த பஞ்சாபி முக்ந்த் வாடி மசாலாவை எப்படி செய்வதென்று பார்க்கலாம்.