குக் வித் கோமாளியில் சிருஷ்டி செய்து முக்ந்த் வாடி இப்படி வீட்டிலயே செஞ்சி பாருங்க!

- Advertisement -

பஞ்சாபி ரெசிபிக்கள் பெரும்பாலும் காரமாகவும், சுவையானதாகவும் இருக்கும். அதிலும் கிரேவி ரெசிபிக்களை பற்றி சொல்லவே வேண்டாம். சுவை ஆள மயக்கும். அதிலும் சிக்கன் கிரேவி, வெஜ் கிரேவி, கடாய் சிக்கன் போன்றவை குறிப்பிடத்தக்கவை. அந்த வகையில் இப்போது பஞ்சாபி ஸ்டைல் முக்ந்த் வாடி மசாலாவை எப்படி செய்வதென்று இந்த பதிவில் நாம் காண்போம்.

-விளம்பரம்-

இந்த டிஷ் உண்மையில் மிகவும் எளிமையானது. மேலும் இது மழைக் காலங்களில் வீட்டில் செய்து சாப்பிட்டால், சூப்பராக இருக்கும். சப்பாத்தி, நாண், சாதம், இட்லி, தோசைக்கு தொட்டுக்கொள்ள அருமையாக இருக்கும் இந்த பஞ்சாபி முக்ந்த் வாடி. இந்த கிரேவி குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி சாப்பிடும் வகையில் இருப்பதோடு, நாவிற்கு விருந்தளிக்கும் வகையில் அட்டகாசமான ருசியில் இருக்கும்.

- Advertisement -

நம்ம ஊர் கிரேவிக்கும்‌ பஞ்சாபி ஸ்டைல் கிரேவிக்கும் இருக்கும் பெரிய வித்தியாசம் காரம் தான். நம்ம ஊர் கிரேவியை சுவைத்து அலுத்து போனவர்களுக்கு பஞ்சாபி ஸ்டைல் முக்ந்த் வாடி கிரேவி ஒரு நல்ல மாற்று. சரி, இப்போது அந்த பஞ்சாபி முக்ந்த் வாடி மசாலாவை எப்படி செய்வதென்று பார்க்கலாம்.

Print
No ratings yet

முக்ந்த் வாடி | Mukund wadi recipe in tamil

பஞ்சாபி ரெசிபிக்கள் பெரும்பாலும் காரமாகவும், சுவையானதாகவும் இருக்கும். அதிலும் கிரேவி ரெசிபிக்களை பற்றி சொல்லவே வேண்டாம். சுவை ஆள மயக்கும். அதிலும் சிக்கன் கிரேவி, வெஜ் கிரேவி, கடாய் சிக்கன் போன்றவை குறிப்பிடத்தக்கவை. அந்த வகையில் இப்போது பஞ்சாபி ஸ்டைல் முக்ந்த் வாடி மசாலாவை எப்படி செய்வதென்று இந்த பதிவில் நாம் காண்போம். இந்த டிஷ் உண்மையில் மிகவும் எளிமையானது. மேலும் இது மழைக் காலங்களில் வீட்டில் செய்து சாப்பிட்டால், சூப்பராக இருக்கும். சப்பாத்தி, நாண், சாதம், இட்லி, தோசைக்கு தொட்டுக்கொள்ள அருமையாக இருக்கும் இந்த பஞ்சாபி முக்ந்த் வாடி.
Prep Time15 minutes
Active Time15 minutes
Total Time30 minutes
Course: dinner
Cuisine: punjabi
Keyword: mukund wadi
Yield: 4 People
Calories: 366kcal

Equipment

  • 1 கடாய்
  • 1 பவுள்

தேவையான பொருட்கள்

வாடி தயார் செய்ய

  • 2 1/2 கப் கோதுமை மாவு
  • உப்பு தேவையான அளவு
  • தண்ணீர் தேவையான அளவு

கிரேவி செய்ய

  • 2 பெரிய வெங்காயம்
  • 5 டேபிள் ஸ்பூன் எண்ணெய்
  • 1 பட்டை, கிராம்பு, ஏலக்காய்
  • 1 பிரியாணி இலை
  • 1 டீஸ்பூன் சீரகம்
  • 1 பச்சை மிளகாய்
  • 1 டீஸ்பூன் இஞ்சி பூண்டு விழுது
  • 1 டீஸ்பூன் மிளகாய்த்தூள்
  • 1/2 டீஸ்பூன் மஞ்சள் தூள்  
  • 1/4 டீஸ்பூன் கரம் மசாலா
  • 1/4 டீஸ்பூன் சீரகத்தூள்
  • உப்பு தேவையான அளவு
  • 2 டேபிள் ஸ்பூன் தயிர்
  • 1 டேபிள் ஸ்பூன் கஸ்தூரி மேத்தி

செய்முறை

  • முதலில் ஒரு பவுளில் கோதுமை மாவு மற்றும் உப்பு, தேவையான அளவு தண்ணீர் விட்டு நன்கு சப்பாத்தி மாவு பதத்திற்கு நன்கு பிசைந்து கொள்ளவும்.
  • பின்னர் இதனை தண்ணீரில் ஊற‌ வைத்து, 5 நிமிடங்கள் வரை நன்கு கழுவி இறுதியில் இருக்கும் மாவை எடுத்து வைத்துக் கொள்ளுங்கள்.
  • பின்னர் இந்த மாவினை துண்டுகளாக வெட்டி 10 நிமிடங்கள் வரை வேகவைத்து தனியே எடுத்து வைத்துக் கொள்ளவும். சிறிது நேரம் கழித்து இதனை எண்ணெயில் போட்டு பொரித்து எடுத்துக் கொள்ளவும்.
  • பின்னர் ஒரு மிக்ஸியில் வெங்காயத்தை சேர்த்து சிறிதளவு தண்ணீர் விட்டு நன்கு அரைத்து கொள்ளவும்.
  • ஒரு கடாயை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் பட்டை, ஏலக்காய், கிராம்பு, பிரியாணி இலை, சீரகம், பச்சை மிளகாய் சேர்த்து தாளித்து நாம் அரைத்து வைத்துள்ள வெங்காயத்தை சேர்த்து நன்கு கலந்து விடவும்.
  • பின் இஞ்சி பூண்டு விழுது, மிளகாய்த்தூள், கரம் மசாலா, மஞ்சள் தூள், சீரகத்தூள், உப்பு சேர்த்து நன்கு வதக்கவும்.
  • 2 நிமிடங்கள் கழித்து அதில் தயிர் மற்றும் தேவையான அளவு தண்ணீர் விட்டு நன்கு பச்சை வாசனை போக வதக்கவும்.
  • பச்சை வாசனை போனதும் நாம் பொரித்து வைத்துள்ள மாவினை கிரேவியில் சேர்த்து நன்கு கலந்து விட்டு சிறிது நேரம் வேக விடவும்.
  • தண்ணீர் நன்கு சுண்டி வந்ததும் அதன் மேல் கஸ்தூரி மேத்தியை தூவி அடுப்பை அணைத்து விடவும்.
  • அவ்வளவுதான் சுவையான முக்ந்த் வாடி தயார்.

Nutrition

Serving: 500g | Calories: 366kcal | Carbohydrates: 75g | Protein: 12.2g | Fat: 1.7g | Sodium: 5.26mg | Fiber: 14.62g | Calcium: 4.1mg | Iron: 24.7mg