Advertisement
அசைவம்

நாவில் எச்சி ஊறும் முந்திரி சிக்கன் வறுவல் செய்வது எப்படி ?

Advertisement

நீங்கள் எப்பொழுதும் போல் சிக்கன் வாங்கி காரசாரமாக கிரேவி, வறுவல், குழம்பு என ஒரே மாதிரியாக செய்வதற்கு பதிலாக குழந்தைகளும் விரும்பி சாப்பிடும் வகையில் அவர்களுக்கு மிகவும் பிடித்த முந்திரி சிக்கன் வறுவல் இப்படி ஒரு முறை செஞ்சி கொடுத்து பாருங்கள் மீண்டும் மீண்டும் விரும்பி கேட்டு சாப்பிடுவார்கள். அவர்கள் மட்டுமல்ல உங்கள் வீட்டில் உள்ள குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும்

இதையும் படியுங்கள் : வீடே மணமணக்கும் மதுரை சிக்கன் கோலா உருண்டை குழம்பு செய்வது எப்படி ?

Advertisement

விரும்பி சாப்பிடுவார்கள். அடுத்த முறையும் உங்களை இது போல் செய்ய சொல்லி கேட்பார்கள். அந்த அளவிற்கு இந்த முந்திரி சிக்கன் வறுவல் அட்டகாசமான சுவையில் இருக்கும். அதனால் இன்று இந்த சுவையான முந்திரி சிக்கன் வறுவல் எப்படி செய்வது, தேவையான பொருட்கள், செய்முறைகள் என அனைத்தையும் இந்த சமையல் குறித்த தொகுப்பில் நாம் காணலாம் வாருங்கள்.

முந்திரி சிக்கன் வறுவல் | Cashew Chicken Fry Recipe In Tamil

Print Recipe
நீங்கள் எப்பொழுதும் போல் சிக்கன் வாங்கி காரசாரமாக கிரேவி, வறுவல், குழம்பு என ஒரே மாதிரியாக செய்வதற்கு பதிலாக குழந்தைகளும் விரும்பி சாப்பிடும் வகையில் அவர்களுக்கு மிகவும் பிடித்த முந்திரி சிக்கன் வறுவல் இப்படி ஒரு முறை செஞ்சி கொடுத்து பாருங்கள் மீண்டும் மீண்டும் விரும்பி கேட்டு சாப்பிடுவார்கள். அவர்கள் மட்டுமல்ல உங்கள் வீட்டில்
Advertisement
உள்ள குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி சாப்பிடுவார்கள். அடுத்த முறையும் உங்களை இது போல் செய்ய சொல்லி கேட்பார்கள்.
Course Breakfast, LUNCH
Cuisine Indian, TAMIL
Keyword chicken fry, சிக்கன் வறுவல்
Prep Time 10 minutes
Cook Time 25 minutes
Total Time 35 minutes
Servings 4 people
Calories 157

Equipment

  • 1 கடாய்

Ingredients

  • ¼ கிலோ சிக்கன்
  • 1 ஸ்பூன் இஞ்சி பூண்டு பேஸ்ட்
  • 1 ஸ்பூன் மிளகாய்த்தூள்
  • 1 ஸ்பூன் மல்லித்தூள்
  • கறிவேப்பிலை சிறிதளவு
  • 3 காய்ந்த மிளகாய்
  • 10 முந்திரி
  • 1 ஸ்பூன் மிளகுத்தூள்
  • 1 வெங்காயம் பொடியாக நறுக்கியது
  • 1 தக்காளி பொடியாக நறுக்கியது
  • கொத்தமல்லி நறுக்கியது கொஞ்சம்
  • 3 ஸ்பூன் எண்ணெய்
  • பட்டை, கிராம்பு, ஏலக்காய் சிறிதளவு
  • உப்பு தேவைக்கேற்ப

Instructions

  • முதலில் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி எண்ணெய் காய்ந்ததும் பட்டை, கிராம்பு, ஏலக்காய், காய்ந்த மிளகாய், சேர்த்து தாளிக்கவும்.
  • இதனுடன் பொடியாக நறுக்கிய வெங்காயம், இஞ்சி பூண்டு விழுது தக்காளி, சிக்கன் துண்டுகளை சேர்த்து நன்கு வதக்கவும்.
  • பிறகு மிளகாய் தூள், மல்லி தூள், தேவையான அளவு உப்பு சேர்த்து சிறிதளவு தண்ணீர்விட்டு வேக விடவும்.
  • சிக்கன் துண்டுகள் நன்கு வெந்ததும், தண்ணீர் வற்றிய பின் முந்திரி, கறிவேப்பிலை, மிளகுத்தூள் சேர்த்துக் கலந்து இறக்கவும்.
  • பிறகு அதன் மேல் கொத்தமல்லி இலைகளை தூவி விடவும். இபொழுது சுவையான முந்திரி சிக்கன் வறுவல் ரெடி.

Nutrition

Calories: 157kcal | Carbohydrates: 8.56g | Protein: 5.17g | Fat: 12.43g | Sodium: 3mg | Potassium: 187mg | Fiber: 0.9g | Calcium: 10mg | Iron: 1.8mg
Advertisement
swetha

Recent Posts

தித்திக்கு சுவையில் ஆப்பிள் கீர் இப்படி ட்ரை பண்ணி பாருங்க! பார்தாலே நாவில் எச்சி ஊறும்!

கீர் ஒரு சுவையான வட இந்திய ரெசிபி ஆகும். கீரில் பல வகைகள் உள்ளன. பாதாம் கீர், கேரட் கீர்,…

3 நிமிடங்கள் ago

முட்டை போண்டா இப்படி செஞ்சி குடுங்க நிமிசத்துல எல்லாமே காலி ஆகிவிடும்

என்னதான் வாழைக்காய் பஜ்ஜி வெங்காய பஜ்ஜி வெங்காய போண்டா உளுந்து வடை பருப்பு வடை மசால் போண்டா சாப்பிட்டாலும் முட்டை…

1 மணி நேரம் ago

சுவையான வெண்ணெய் புட்டு இப்படி வீட்டிலயே செஞ்சி பாருங்கள்! மீண்டும் செய்ய சொல்லி கேட்பார்கள்!

அது என்ன வெண்ணெய் புட்டு அப்படின்னு யோசிக்கிறீங்களா இது அரிசி மாவுல பண்ணக்கூடிய ஒரு சுவையான கேக் இந்த மாதிரியான…

4 மணி நேரங்கள் ago

அக்னி நட்சத்திரம் 2024 எப்போது? தேதி, நேரம்.. முழு விவரம் இதோ!

கோடை தொடங்கியதுமே பள்ளி விடுமுறை, மாம்பழம், தர்பூசணி என நினைவுக்கு வரும். அதோடு கத்திரி வெயில் காலம் சுட்டெரிக்குமே என்பதையும்…

5 மணி நேரங்கள் ago

வாயில வச்ச உடனே கரைந்து போற ரொம்பவே ஆரோக்கியமான தேன் ஐஸ்கிரீம் இப்படி ஒரு தடவை செஞ்சு பாருங்க!

சாக்லேட் ஐஸ்கிரீம் வெண்ணிலா ஐஸ்கிரீம் ஸ்ட்ராபெர்ரி ஐஸ்கிரீம் ஐஸ்கிரீம் பலாப்பழ ஐஸ்கிரீம்ல எக்கு சக்கமான ஐஸ்கிரீம் நம்ம சாப்பிட்டிருப்போம் ஆனா…

6 மணி நேரங்கள் ago

மதிய உணவுக்கு சுட சுட சர்க்கரை வள்ளி கிழங்கு சாதம் இப்படி செய்து பாருங்க! அஹா இதன் சுவையே தனி!

கிழங்கில் உருளைக்கிழங்கு, மரவல்லிக் கிழங்கு, சேனைக் கிழங்கு, சர்க்கரை வள்ளி கிழங்கு என பல வகையான கிழங்கு .ஒவ்வொரு வகையும்…

7 மணி நேரங்கள் ago