Advertisement
சட்னி

சுவையான முந்திரி பருப்பு சட்னியை செய்வது எப்படி ?

Advertisement

நாம் வீட்டில் காலை உணவு அல்லது இரவு உணவாக இட்லி, தோசை, சப்பாத்தி போன்ற உணவுகள் செய்யும் பொழுது. ஒரு சுழற்சி முறையில் தேங்காய் சட்னி, தங்காளி சட்னி என மாற்றி மாற்றி இந்த இரு சட்னிகளை வைத்து மட்டுமே சாப்பிட்டுக் கொண்டிருக்கிறோம். ஆனால் உங்களுக்கு புதியதாக ஏதேனும் சட்னி வைக்க வேண்டும் என விரும்புகிறீர்கள் என்றால் கண்டிப்பாக இந்த முந்திரி பருப்பு சட்னியை செய்து பாருங்கள்.

இதையும் படியுங்கள் : சுவையான முள்ளங்கி சட்னி செய்வது எப்படி ?

Advertisement

கண்டிப்பாக இந்த முந்திரி பருப்பு சட்னி உங்களுக்கு மிகவும் பிடிக்கும் ஏன் உங்கள் வீட்டில் உள்ள சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்கும் மிகவும் பிடித்த சட்னியாக இது மாறி போகும். ஆகையால் இன்று இந்த முந்திரி பருப்பு சட்னி எப்படி செய்வது, தேவையான பொருட்கள், செய்முறைகள் என அனைத்தையும் இந்த சமையல் தொகுப்பில் நாம் பார்க்கலாம்.

முந்திரி பருப்பு சட்னி | Munthiri Parupu Chutney Recipe in Tamil

Print Recipe
உங்களுக்கு புதியதாக ஏதேனும் சட்னி வைக்க வேண்டும் என விரும்புகிறீர்கள் என்றால் கண்டிப்பாக இந்த முந்திரி பருப்பு சட்னியை செய்து பாருங்கள். கண்டிப்பாக இந்த முந்திரி பருப்பு சட்னி உங்களுக்கு மிகவும் பிடிக்கும் ஏன் உங்கள் வீட்டில் உள்ள சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்கும் மிகவும் பிடித்த சட்னியாக இது மாறி போகும். ஆகையால் இன்று இந்த முந்திரி பருப்பு சட்னி எப்படி செய்வது, தேவையான பொருட்கள், செய்முறைகள் என அனைத்தையும் இந்த சமையல் குறித்த தொகுப்பில் நாம் பார்க்கலாம்.
Course Breakfast, dinner
Cuisine Indian, TAMIL
Keyword chutney, சட்னி
Prep Time 10 minutes
Cook Time 10 minutes
Total Time 20 minutes
Servings 4 people
Calories 260

Equipment

  • 1 கடாய்
  • 1 மிக்ஸி
  • 1 பெரிய பவுள்

Ingredients

வதக்கி அரைக்க

  • 1 கப் முந்திரி
  • 10 சின்ன வெங்காயம்
  • 2 வர மிளகாய்
  • 1 துண்டு புளி
  • உப்பு தேவையான அளவு
  • 2 tbsp எண்ணெய்

தாளிக்க

  • 2 tbsp எண்ணெய்
  • 1 tbsp கடுகு உளுந்த பருப்பு
  • 2 வர மிளகாய்
  • 1 கொத்து கருவேப்பிலை

Instructions

  • முதலில் கடாயை அடுப்பில் வைத்து அதில் இரண்டு டீஸ்பூன் அளவு எண்ணெய் ஊற்றி நாம் வைத்திருக்கும் ஒரு கப் முந்தரி பருப்பு சேர்த்து நன்கு வறுத்துக் கொள்ளவும், முந்திரி பருப்பு பொன்னிறமாக வரும் வரை வறுத்து கொள்ளவும்.
  • பின் இதனுடன் நாம் வைத்திருக்கும் மூன்று வர மிளகாய் மற்றும் ஒரு துண்டு புளி சேர்த்து நன்கு வதக்கிக் கொள்ளுங்கள். பின் இதனுடன் நாம் தோலுரித்து
    Advertisement
    வைத்திருக்கும் பத்து சின்ன வெங்காயங்களை சேர்த்து நன்கு வதக்கிக் கொள்ளுங்கள்.
  • அதன்பின் வெங்காயம் கண்ணாடி பதத்திற்கு வதங்கி வந்தவுடன், கடாயை கீழே இறக்கி வதக்கிய பொருள்கள் அனைத்தையும் சிறிது நேரம் குளிர வைத்துக் கொள்ளுங்கள். பின்பு நாம் வதக்கிய பொருட்கள் நன்கு குளிர்ந்த உடன் மிக்ஸி ஜாரில் சேர்த்து இதனுடன் தேவையான அளவிற்கு உப்பு சேர்த்து, சிறிது தண்ணீர் சேர்த்து ஆரைத்து கொள்ளுங்கள்.
  • பின்பு மறுபடியும் கடாயை அடுப்பில் வைத்து இரண்டு டீஸ்பூன் அளவு எண்ணெய் ஊற்றி எண்ணெய் நன்கு காய்ந்தவுடன் அதில் ஒரு டீஸ்பூன் கடுகு உளுந்தம் பருப்பு இரண்டு வரமிளகாய் மற்றும் ஒரு கொத்து கருவேப்பிலை சேர்த்து தாளிக்கவும்.
  • பின் இந்த தாளிப்பை நாம் அரைத்த முந்திரி சட்னியுடன் சேர்த்துக் கொள்ளுங்கள். அவ்வளவுதான் சுவையான முந்திரி பருப்பு சட்னி இனிதே தயாராகிவிட்டது.

Nutrition

Serving: 300கிராம் | Calories: 260kcal | Carbohydrates: 34g | Protein: 45g | Fat: 3.9g | Saturated Fat: 2.7g | Cholesterol: 18mg | Sodium: 22mg | Potassium: 182mg | Fiber: 3.7g | Sugar: 6.82g | Iron: 0.98mg

English Overview: munthiri parupu chutney is one of the most important dishes in india. munthiri parupu chutney recipe or munthiri parupu chutney seivathu eppadi or munthiri parupu chutney in Tamil are a few important terms to describe this recipe in the tamil language.

Advertisement
Prem Kumar

Recent Posts

கையில் கயிறை எத்தனை நாட்கள் வரை கட்ட வேண்டும்

பொதுவாகவே நாம் அனைவரும் வாழ்வில் மகிழ்ச்சியாகவும் மன நிம்மதியுடனும் வாழ வேண்டும் என்று தான் விரும்புகின்றோம். இதனை அடிப்படையாக வைத்தே…

2 மணி நேரங்கள் ago

குண்டாக சாப்டான பெங்கால் ரசகுல்லா எப்படி செய்வது தெரியுமா? நீங்களும் வீட்டில் செய்து பாருங்க!

கோடையில் குழந்தைகள் வீட்டில் இருக்கிறார்களா? எப்போதும் ஸ்நாக்ஸ் கேட்டு அடம் பிடித்து கொண்டிருக்கிறார்களா? முடிந்தவரை கடைகளில் வாங்கி தருவதை தவிர்த்து…

2 மணி நேரங்கள் ago

சப்போட்டா சாக்லேட் மில்க் ஷேக் இப்படி ஒரு தடவை செஞ்சு அசத்துங்க

ஆப்பிள் ஆரஞ்சு கொய்யா பழம் மாதுளை வாழைப்பழம் சப்போட்டா பழம் அப்படின்னு ஏராளமான பழங்கள் இருந்தாலும் கூட ஒவ்வொருதருக்கும் ஒவ்வொரு…

4 மணி நேரங்கள் ago

எவ்வளவு செய்தாலும் காலியாகும் அடுத்தமுறை மட்டன் வாங்கினால் ஆந்திரா மட்டன் கிரேவி இப்படி செய்யுங்க!

அசைவ வகைகளிலே ஆரோக்கியம் என்பதால் அடிக்கடி செய்வது இந்த மட்டன் தான். பலரும் இந்த மட்டனுக்கு அடிமையாகவே இருக்கிறார்கள். அந்த…

4 மணி நேரங்கள் ago

அட்சய திருதியை என்று தங்கம் வாங்க முடியாதவர்கள் வெள்ளி பொருட்களை வாங்கலாமா என்பதை பற்றி தெரிந்து கொள்ளலாம்

ஒவ்வொரு மாதத்திலும் திருதியை திதி வந்தாலும் சித்திரை மாதத்தில் வரக்கூடிய இந்த திதி மிகவும் சிறப்பு வாய்ந்தது. அட்சய என்பதற்கு…

6 மணி நேரங்கள் ago

இனி காலை உணவாக மொறு மொறுவென்று இந்த பாலக் கீரை அடை தோசை செய்து பாருங்கள் இதன்‌ சுவையை விவரிக்க வார்த்தைகளே இருக்காது!

இன்றைய காலகட்டத்தில் சாப்பிடும் உணவுப் பொருட்களில் உடலுக்கு தேவையான ஊட்டச்சத்து குறைவாகவே கிடைக்கிறது. எனவே உணவில் அதிகம் ஊட்டச்சத்துக்கள் நிறைந்த…

7 மணி நேரங்கள் ago