- Prep
- 10 min
- Cook
- 10 min
- Total
- 20 min
- Serves
- 4
- Cuisine
- Indian, TAMIL
- Course
- Breakfast, dinner
நாம் வீட்டில் காலை உணவு அல்லது இரவு உணவாக இட்லி, தோசை, சப்பாத்தி போன்ற உணவுகள் செய்யும் பொழுது. ஒரு சுழற்சி முறையில் தேங்காய் சட்னி, தங்காளி சட்னி என மாற்றி மாற்றி இந்த இரு சட்னிகளை வைத்து மட்டுமே சாப்பிட்டுக் கொண்டிருக்கிறோம். ஆனால் உங்களுக்கு புதியதாக ஏதேனும் சட்னி வைக்க வேண்டும் என விரும்புகிறீர்கள் என்றால் கண்டிப்பாக இந்த முந்திரி பருப்பு சட்னியை செய்து பாருங்கள்.
இதையும் படியுங்கள் : சுவையான முள்ளங்கி சட்னி செய்வது எப்படி ?
கண்டிப்பாக இந்த முந்திரி பருப்பு சட்னி உங்களுக்கு மிகவும் பிடிக்கும் ஏன் உங்கள் வீட்டில் உள்ள சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்கும் மிகவும் பிடித்த சட்னியாக இது மாறி போகும். ஆகையால் இன்று இந்த முந்திரி பருப்பு சட்னி எப்படி செய்வது, தேவையான பொருட்கள், செய்முறைகள் என அனைத்தையும் இந்த சமையல் தொகுப்பில் நாம் பார்க்கலாம்.
English Overview: munthiri parupu chutney is one of the most important dishes in india. munthiri parupu chutney recipe or munthiri parupu chutney seivathu eppadi or munthiri parupu chutney in Tamil are a few important terms to describe this recipe in the tamil language.
Ingredients
Method
முதலில் கடாயை அடுப்பில் வைத்து அதில் இரண்டு டீஸ்பூன் அளவு எண்ணெய் ஊற்றி நாம் வைத்திருக்கும் ஒரு கப் முந்தரி பருப்பு சேர்த்து நன்கு வறுத்துக் கொள்ளவும், முந்திரி பருப்பு பொன்னிறமாக வரும் வரை வறுத்து கொள்ளவும்.
பின் இதனுடன் நாம் வைத்திருக்கும் மூன்று வர மிளகாய் மற்றும் ஒரு துண்டு புளி சேர்த்து நன்கு வதக்கிக் கொள்ளுங்கள். பின் இதனுடன் நாம் தோலுரித்து வைத்திருக்கும் பத்து சின்ன வெங்காயங்களை சேர்த்து நன்கு வதக்கிக் கொள்ளுங்கள்.
அதன்பின் வெங்காயம் கண்ணாடி பதத்திற்கு வதங்கி வந்தவுடன், கடாயை கீழே இறக்கி வதக்கிய பொருள்கள் அனைத்தையும் சிறிது நேரம் குளிர வைத்துக் கொள்ளுங்கள். பின்பு நாம் வதக்கிய பொருட்கள் நன்கு குளிர்ந்த உடன் மிக்ஸி ஜாரில் சேர்த்து இதனுடன் தேவையான அளவிற்கு உப்பு சேர்த்து, சிறிது தண்ணீர் சேர்த்து ஆரைத்து கொள்ளுங்கள்.
பின்பு மறுபடியும் கடாயை அடுப்பில் வைத்து இரண்டு டீஸ்பூன் அளவு எண்ணெய் ஊற்றி எண்ணெய் நன்கு காய்ந்தவுடன் அதில் ஒரு டீஸ்பூன் கடுகு உளுந்தம் பருப்பு இரண்டு வரமிளகாய் மற்றும் ஒரு கொத்து கருவேப்பிலை சேர்த்து தாளிக்கவும்.
பின் இந்த தாளிப்பை நாம் அரைத்த முந்திரி சட்னியுடன் சேர்த்துக் கொள்ளுங்கள். அவ்வளவுதான் சுவையான முந்திரி பருப்பு சட்னி இனிதே தயாராகிவிட்டது.






