Advertisement
சைவம்

முருங்கைக்காய் மசாலா கூட்டு இப்படி ஒரு தரம் செய்து பாருங்கள்!

Advertisement

முருங்கைக்காய் மசாலா • மணமணக்க முருங்கைக்காய் மசாலா இப்படி ஒருமுறை சமைத்து பாருங்கள்!!!!!முருங்கை மரத்தில் உள்ள அத்தனையும் மருத்துவ குணம் மிக்கது தான். முருங்கைக்காயை வைத்து சாம்பார் வைக்கலாம். குழம்பு வைக்கலாம். ஆனால் கொஞ்சம் வித்தியாசமான முறையில் மசாலா பொருட்களை வைத்து முருங்கைக்காய் மசாலா எப்படி வைப்பது என்பதை பற்றிதான் இந்த பதிவின் மூலம் நாம் தெரிந்து கொள்ளப் போகின்றோம்.

இப்படி முருங்கைக்காய் மசாலா செய்தால் இதை சுடச்சுட சாதம், சப்பாத்தி, தோசை, இட்லி, வெரைட்டி ரைஸ்க்கு தொட்டு சாப்பிட அருமையாக இருக்கும். வாங்க நேரத்தைக் கடத்தாமல் ரெசிபிக்குள் செல்வோம்.

Advertisement

முருங்கைக்காய் மசாலா | Murungakkaai Masala Recipe In Tamil

Print Recipe
முருங்கைக்காய் மசாலா, மணமணக்க முருங்கைக்காய் மசாலா இப்படி ஒருமுறை சமைத்து பாருங்கள்!!!!!முருங்கை மரத்தில் உள்ள அத்தனையும் மருத்துவ குணம் மிக்கது தான். முருங்கைக்காயை வைத்து சாம்பார் வைக்கலாம். குழம்பு வைக்கலாம். ஆனால் கொஞ்சம் வித்தியாசமான முறையில் மசாலா பொருட்களை வைத்து முருங்கைக்காய் மசாலா எப்படி வைப்பது என்பதை பற்றிதான் இந்த பதிவின் மூலம் நாம் தெரிந்து கொள்ளப் போகின்றோம். இப்படி முருங்கைக்காய் மசாலா செய்தால் இதை சுடச்சுட சாதம்,
Advertisement
சப்பாத்தி, தோசை, இட்லி, வெரைட்டி ரைஸ்க்கு தொட்டு சாப்பிட அருமையாக இருக்கும். வாங்க நேரத்தைக் கடத்தாமல் ரெசிபிக்குள் செல்வோம்.
Course LUNCH
Cuisine Indian, TAMIL
Keyword Murungakkai, முருங்கைக்காய்
Prep Time 15 minutes
Cook Time 20 minutes
Total Time 35 minutes
Servings 3 People
Calories 176
Advertisement

Equipment

  • 1 வாணலி
  • 1 பெரிய பவுல்

Ingredients

  • 5 முருங்கைக்காய்
  • 5 பூண்டு
  • 1 பெரிய வெங்காயம்
  • 1 tsp மிளகுத்தூள்
  • உப்பு தேவையான அளவு
  • தண்ணீர் தேவையான அளவு

அரைப்பதற்கு

  • 1/4 கப் தேங்காய்
  • 1/2 tsp சோம்பு

தாளிப்பதற்கு

  • 2 tsp எண்ணெய்
  • 1/2 இன்ச் பட்டை
  • 2 கிராம்பு
  • 2 ஏலக்காய்

Instructions

  • முதலில் முருங்கைக்காயை வெட்டி தனியாக வைத்துக் கொள்ள வேண்டும். பின்னர் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும்,தாளிப்பதற்கு கொடுத்துள்ள பொருட்களை சேர்த்து தாளிக்க வேண்டும்.
  • பின்பு அதில் பூண்டு, வெங்காயம் சேர்த்து பொன்னிறமாக வதக்கி, பின் முருங்கைக்காய், மிளகாய் தூள் மற்றும் தேவையான அளவு தண்ணீர் ஊற்றி நன்கு கொதிக்க விட வேண்டும். அதற்குள் மிக்ஸியில் தேங்காய் மற்றும் சோம்பு சேர்த்து, நண்ணீர் சிறிது ஊற்றி, பேஸ்ட் போல் அரைத்துக் கொள்ள வேண்டும்.
  • முருங்கைகாயானது நன்கு வெந்த பின், அதில் தேங்காய் பேஸ்ட், உப்பு மற்றும் 1/2 கப் தண்ணீர் ஊற்றி, தண்ணீர் வற்றும் வரை நன்கு கொதிக்க விட்டு இறக்கினால், முருங்கைக்காய் மசாலா ரெடி!!!

Nutrition

Serving: 400g | Calories: 176kcal | Carbohydrates: 13.2g | Protein: 2g | Fat: 12.8g

இதையும் படியுங்கள் : காரசாரமான முருங்கைகாய் ஊறுகாய் செய்வது எப்படி ?

Advertisement
Prem Kumar

Recent Posts

கிவி தர்பூசணி வாங்கி சூப்பரான கிவி தர்பூசணி மாக்டெயில் இப்படி செய்து கொடுத்து அசத்துங்கள்!

கோடைக்காலத்தில் அதிகமாக கிடைக்கும் பழங்களில் ஒன்று தர்பூசணி. ஆனால், நம்மில் பலர் தர்பூசணியை வெட்டியோ அல்லது ஜூஸ் செய்தோ குடிப்போம்.…

10 மணி நேரங்கள் ago

குருபகவான் மற்றும் சூரிய பகவானின் சேர்க்கை நடைபெறும் மே மாதத்திற்கான ராசி பலன்கள்

மே மாதத்தில் குரு பெயர்ச்சி பலன்கள் ஏற்கனவே பல ராசிகளுக்கு தாக்கம் ஏற்பட்டுக் கொண்டிருக்கிறது அந்த வகையில் மே மாதத்தில்…

11 மணி நேரங்கள் ago

ஈவினிங் ஸ்நாக்ஸ்க்கு இந்த சூப்பரான இட்லி மாவு போண்டா செஞ்சு சாப்பிடுங்க!

மாலை நேரத்தில் எப்பவுமே டீ காபியோட ஏதாவது ஒரு ஸ்னாக்ஸ் சாப்பிட்டால் நல்லா இருக்கும் அப்படின்னு தோணும் ஆனா கடைகள்ல…

12 மணி நேரங்கள் ago

வெறும் 11 நாட்களில் நீங்கள் நினைத்த பணம் கிடைக்க இந்த 1 பொருளை இந்த இடத்தில் மட்டும் வையுங்கள்!

பணக்கஷ்டம் நீங்கி பணம் பலமடங்கு அதிகரிப்பதற்கு என்ன பரிகாரம் செய்ய வேண்டும் என்பதை பற்றி தான் பார்க்க போகிறோம். கஷ்டப்பட்டு…

13 மணி நேரங்கள் ago

ஒரு தடவை இந்த கேரட் சௌசௌ மசாலா குழம்பு செஞ்சு சாப்பிட்டு பாருங்க!

கேரட், தமிழ் நாட்டில் மட்டுமல்லாமல் வடநாட்டிலும் பயன்படுத்தப்படுகிறது. உடலின் நோய் எதிர்ப்பு மண்டலத்தின் ஆற்றலை அதிகரிப்பது முதல், செரிமானக் கோளாறுகளை…

17 மணி நேரங்கள் ago

எப்பவும் ஒரே மாதிரியா மீன் ப்ரை பண்ணாம ஒரு தடவை இந்த மாதிரி ஆனியன் மீன் ரோஸ்ட் செஞ்சு சாப்பிட்டு பாருங்க

மீன் அப்படின்னு சொன்னாலே ஒரு சிலருக்கு நாக்குல எச்சில் வரும் அந்த அளவுக்கு மீன் பிரியர்கள் நிறைய பேர் இருக்காங்க…

17 மணி நேரங்கள் ago