காரசாரமான முருங்கைகாய் ஊறுகாய் செய்வது எப்படி ?

- Advertisement -

ஒரு 15 ஆண்டுகளுக்கு முன்பெல்லாம் நாம் வீட்டில் நீண்ட நாட்கள் கெடாத ஊறுகாய் ஒன்று ஏதாவது எப்பொழுதும் இருந்து கொண்டே இருக்கும். நாம் உணவுகள் சாப்பிடும் போது பொரியல் கூட்டு எதுவும் இல்லாத சமயத்தில் அந்த ஊறுகாயை சைடிஷ் ஆக எடுத்துக் கொள்வோம். ஆனால் இப்போதெல்லாம் பெரும்பாலான வீடுகளில் ஊறுகாய் இருப்பதை அரிதான ஒன்றாக மாறி வருகிறது. அந்த வகையில் இன்று நாம் முருங்கைகாய் ஊறுகாய் பற்றி தான் பார்க்க இருக்கிறோம்.

-விளம்பரம்-

இதையும் படியுங்கள் : கல்யாண பந்தி மாங்காய் ஊறுகாய் செய்வது எப்படி ?

- Advertisement -

இதில் குறிப்பிட்டுள்ள பொருட்களின் அளவில் இதுபோன்று நீங்கள் முருங்கைகாய் ஊறுகாய் செய்தால் கண்டிப்பாக உங்களுக்கு பிடிக்கும். பின் நீங்கள் எப்போது வேண்டுமானாலும் பயன்படுத்திக் கொள்ளலாம் மேலும் இதன் சுவையும் அட்டகாசமாக இருக்கும் வீட்டில் உள்ள அனைவருக்கும் பிடித்த சுவையில் இருக்கும். அதனால் இன்று முருங்கைகாய் ஊறுகாய் எப்படி செய்வது, தேவையான பொருட்கள், செய்முறைகள் என அனைத்தையும் நாம் இந்த சமையல் குறித்த தொகுப்பில் காணலாம் வாருங்கள்.

Print
5 from 1 vote

முருங்கைகாய் ஊறுகாய் | Murungakkai Pickle Recipe in Tamil

இப்போதெல்லாம் பெரும்பாலான வீடுகளில் ஊறுகாய் இருப்பதை அரிதான ஒன்றாக மாறி வருகிறது. அந்த வகையில் இன்று நாம் முருங்கைகாய் ஊறுகாய் பற்றி தான் பார்க்க இருக்கிறோம். இதில் குறிப்பிட்டுள்ள பொருட்களின் அளவில் இதுபோன்று நீங்கள் முருங்கைகாய் ஊறுகாய் செய்தால் கண்டிப்பாக உங்களுக்கு பிடிக்கும். பின் நீங்கள் எப்போது வேண்டுமானாலும் பயன்படுத்திக் கொள்ளலாம் மேலும் இதன் சுவையும் அட்டகாசமாக இருக்கும் வீட்டில் உள்ள அனைவருக்கும் பிடித்த சுவையில் இருக்கும்.
Prep Time20 minutes
Active Time20 minutes
Total Time40 minutes
Course: Side Dish
Cuisine: Indian, TAMIL
Keyword: Murungakkai, முருங்கைகாய்
Yield: 4 People

Equipment

  • 1 கடாய்
  • 1 மிக்ஸி

தேவையான பொருட்கள்

  • 125 கிராம் புளி
  • 3 மேசை கரண்டி எண்ணெய்
  • 500 கிராம் முருங்கைகாய் நறுக்கியது
  • 100 கிராம் மிளகாய் தூள்
  • ½ tbsp மஞ்சள் தூள்
  • 40 கிராம் பூண்டு விழுது
  • ½ tbsp வெந்தய பொடி
  • உப்பு தேவையான அளவு

தாளிக்க

  • 2 tbsp எண்ணெய்
  • 1 tbsp கடுகு உளுந்த பருப்பு
  • ½ tbsp சீரகம்
  • 2 வர மிளகாய்
  • 1 கொத்து கருவேப்பிலை

செய்முறை

  • முதலில் எடுத்து கொண்ட 125 கிராம் புளியை ஒரு பவுலில் சேர்த்து அதனுடன் தேவையான அளவு தண்ணீர் ஊற்றி கரைத்து புளியை தனியாக எடுத்து வைத்து கொள்ளவும். அதன் பின்பு கடாயில் மூன்று மேசை கரண்டி அளவிற்கு எண்ணெய் ஊற்றி கொள்ளவும்.
  • பின் அதில் 500 கிராம் அளவிலான நறுக்கிய முருங்கைக்காய் துண்டுகளை சேர்த்து ஒரு ஏழு நிமிடங்கள் நன்கு வறுத்து எடுத்துக் கொள்ளுங்கள். பின் முருங்கைக்காய் நன்கு வறுபட்டு நிறம் மாறியதும் ஒரு பவுலில் தனியாக எடுத்து வைத்துக் கொள்ளவும்.
  • அதன் பின்பு ஒரு பாத்திரத்தில் வறுத்த முருங்கைக்காய், 125 கிராம் புளி விழுது, 100 கிராம் மிளகாய்த்தூள், அரை டீஸ்பூன் மஞ்சள் தூள், 40 கிராம் பூண்டு விழுது, அரை டீஸ்பூன் வெந்தய பொடி மற்றும் தேவையான அளவு உப்பு சேர்த்து நன்றாக கலந்து கொள்ளவும்.
  • பின் ஒரு கடாயை அடுப்பில் வைத்து அதில் ஏற்கனவே வறுத்த மீதமுள்ள எண்ணெயை ஊற்றி எண்ணெய் நன்கு காய்ந்ததும் அதில் ஒரு டீஸ்பூன் கடுகு உளுந்த பருப்பு, அரை டீஸ்பூன் சீரகம், இரண்டு வரமிளகாய் மற்றும் ஒரு கொத்து கருவேப்பிலை சேர்த்து தாளித்து முருங்கக்காய் ஊறுகாயுடன் சேர்த்து நன்றாக கலந்து கொள்ளுங்கள்.
  • பின்பு ஒரு காற்று புகாத டப்பாவில் இந்த முருங்கைகாய் ஊறுகாயை சேர்த்து ஒரு நான்கு நாட்கள் நன்றாக ஊற விட்டு அதன் பின் எடுத்து பயன்படுத்தினால் அட்டகாசமான சுவையில் முருங்கைக்காய் ஊறுகாய் இனிதே தயாராகிவிட்டது.

LEAVE A REPLY

Recipe Rating




Please enter your comment!
Please enter your name here