15 வருடங்களுக்கு முன்பல்லாம் நமது வீடுகளில் எப்பொழுதுமே ஊறுகாய் அல்லது தொக்கு ஒன்று ஏதாவது இருந்து கொண்டே இருக்கும். காலை நேரங்களில் கஞ்சி குடிக்கும் பொழுது, அல்லது சோறுடன் சாப்பிட கூட்டு, பொரியல் எனது இதுவும் இல்லாத சமயங்களில் இந்த ஊறுகாய் அல்லது தொக்கை சைடிஷ் ஆக நாம் உணவை சாப்பிட்டு முடிப்போம். ஆனால் இப்போதெல்லாம் பெருபாலான வீடுகளில் ஊறுகாய் இருப்பதே அறிதாகிவிட்டது. ஆனாலும் இன்னும் நிறைய பேருக்கு ஊறுகாய் வைத்து சாப்பிடுவது பிடிக்கும் ஆனால் அவர்களுக்கு செய்யத் தெரியாது.
அதனால் இன்று நாம் மாங்காய் செய்வது பற்றி தான் பார்க்க போகிறோம் அதுவும் உங்களில் நிறைய பேருக்கு கல்யாண பந்தியில் வைக்கப்படும் மாங்காய் ஊறுகாய் பிடித்திருக்கும். இன்று நாமும் அதே கல்யாண பந்தியில் வைக்கும் மாங்காய் ஊறுகாய் செய்வது பற்றி தான் பார்க்க போகிறோம் இது அட்டகாசமான சுவையில் இருக்கும். ஆகையால் இன்று இந்த கல்யாண பந்தி மாங்காய் ஊறுகாய் எப்படி செய்வது, தேவையான பொருள்கள், செய்முறைகள் என அனைத்தையும் இந்த சமையல் குறித்த தொகுப்பில் நாம் காணலாம் வாருங்கள்.
கல்யாண பந்தி மங்காய் ஊறுகாய் | Kalyana Panthi Mango Pickle Recipe in Tamil
Equipment
- 1 கடாய்
- 1 பெரிய பாத்திரம்
- 1 பெரிய பவுள்
தேவையான பொருட்கள்
வறுத்து பொடி செய்ய
- ½ கப் கடுகு
- ¼ கப் வெந்தயம்
ஊறுகாய் செய்ய
- ½ KG மாங்காய்
- ½ கப் உப்பு
- 2 tbsp நல்லெண்ணெய்
- ¼ tbsp மஞ்சள் துள்
- ¼ tbsp பெருங்காய தூள்
- ½ கப் மிளகாய் தூள்
- 1 கப் எண்ணெய்
- 1 tbsp காஷ்மீர் மிளகாய் தூள்
- 1 tbsp கடுகு
செய்முறை
- முதலில் ஒரு அரை கிலோ மாங்காய்களை எடுத்துக் கொண்டு தண்ணீரை வைத்து நன்கு கழுவி கொள்ளுங்கள். பின்பு மாங்காயின் மேற்புறம் மற்றும் கீழ்புற காம்புகளை வெட்டி எடுத்துவிட்டு ஒரு அரை மணி நேரம் தண்ணீரில் ஊற வைத்துக் கொள்ளுங்கள்.
- பின்பு தண்ணீரில் ஊறிய மாங்காயை ஒரு சொட்டு தண்ணீர் இல்லாமல் ஒரு துணியை வைத்து தொடைத்து எடுத்துக் கொள்ளுங்கள் பின் கொட்டையை நீக்கி சிறு சிறு துண்டுகளாக நறுக்கி ஒரு பெரிய தட்டில் வைத்து ஒரு மணி நேரம் வெயிலில் வைத்து எடுத்துக் கொள்ளுங்கள்.
- பின்பு வெயிலில் உலர்த்திய மாங்காயை ஒரு பாத்திரத்தில் சேர்த்து இதனுடன் அரை கப் அளவிற்கு உப்பு சேர்த்து கைகளால் நன்கு பிசைந்து ஒரு மணி நேரங்கள் ஊற வைத்துக் கொள்ளுங்கள். பின்பு ஒரு கடாயை அடுப்பில் வைத்து அதனுடன் கால் கப் கடுகு மற்றும் கால் கப் வெந்தயம் சேர்த்து நன்றாக வறுத்து கொள்ளுங்கள்.
- பின் கடுகு பொரிந்து வந்தவுடன் கடாயை கீழ் இறக்கி குளிர வைத்து பின்பு ஒரு மிக்ஸி ஜாரில் சேர்த்து பொடியாக அமைத்துக் கொள்ளுங்கள். பின் உப்பு சேர்த்து ஊற வைத்த மாங்காயுடன் ஒரு கால் டீஸ்பூன் மஞ்சள் தூள் மற்றும் இரண்டு டீஸ்பூன் அளவு நல்லெண்ணெய் ஊற்றி நன்றாக கிளறி விடுங்கள்.
- பின்பு மாங்காயுடன் கால் டீஸ்பூன் பெருங்காயத்தூள், அரை கப் மிளகாய் தூள் சேர்த்து நன்கு கிளறி விட்டுக் கொள்ளுங்கள். அதன் பின்பு கடாயை அடுப்பில் வைத்து அதில் ஒரு கப் எண்ணெய் ஊற்றி என்னை நன்கு காய்ந்ததும் இரண்டு டீஸ்பூன் கடுகு சேர்த்து கொள்ளவும்.
- பின் கடுகு பொரிந்து வந்தவுடன் இரண்டு டீஸ்பூன் காஷ்மீரி மிளகாய் தூள் சேர்த்து கடாயை இறக்கி. எண்ணெய் சூடாக இருக்கும் போதே மாங்காயுடன் சேர்த்து நன்றாக கிளறி விடுங்கள். பின் பாத்திரத்தை மூடி நான்கு நாள் கழித்து பாருங்கள் கல்யாண பந்தி மாங்காய் ஊறுகாய் தயாராகிவிட்டது.
Nutrition
இதையும் படியுங்கள் : நீண்ட நாட்கள் கெடாத பூண்டு ஊறுகாய் செய்வது எப்படி ?