- Prep
- 20 min
- Cook
- 20 min
- Total
- 40 min
- Serves
- 7
- Cuisine
- Indian, TAMIL
- Course
- Thokku
ஒரு 15 ஆண்டுகளுக்கு முன்பெல்லாம் நாம் வீட்டில் நீண்ட நாட்கள் கெடாத ஊறுகாய் ஒன்று ஏதாவது எப்பொழுதும் இருந்து கொண்டே இருக்கும். நாம் உணவுகள் சாப்பிடும் பொழுது கூட்டு எதுவும் இல்லாத சமயத்தில் இந்த ஊறுகாயை சைடிஷ் ஆக எடுத்துக் கொள்வோம். ஆனால் இப்போதெல்லாம் பெரும்பாலான வீடுகளில் ஊறுகாய் இருப்பதை அரிதான ஒன்றாக மாறி வருகிறது. அந்த வகையில் இன்று நாம் பூண்டு ஊறுகாய் பற்றி தான் பார்க்க இருக்கிறோம்.
இதையும் படியுங்கள் : மணமணக்கும் சுவையான தக்காளி ரவா தோசை எப்படி செய்வது ?
இதில் குறிப்பிட்டுள்ள பொருட்களின் அளவில் இதுபோன்று நீங்கள் பூண்டு ஊறுகாய் செய்தால் கண்டிப்பாக நீண்ட நாட்களுக்கு கெடாமல் இருக்கும். பின் நீங்கள் எப்போது வேண்டுமானாலும் பயன்படுத்திக் கொள்ளலாம் மேலும் இதன் சுவையும் அட்டகாசமாக இருக்கும் வீட்டில் உள்ள அனைவருக்கும் பிடித்த சுவையில் இருக்கும். அதனால் இன்று பூண்டு ஊறுகாய் எப்படி செய்வது, தேவையான பொருட்கள், செய்முறைகள் என அனைத்தையும் நாம் இந்த சமையல் குறித்த தொகுப்பில் காணலாம் வாருங்கள்.
English Overview : garlic pickle is one of the most important dishes in india. garlic pickle recipe or garlic pickle seivathu eppadi or garlic pickle in Tamil are a few important terms to describe this recipe in the tamil language
Ingredients
Method
முதலில் ஒரு பாத்திரத்தை அடுப்பில் வைத்து அதில் பாதி அளவு தண்ணீர் ஊற்றி நன்கு கொதிக்க வைத்துக் கொள்ளுங்கள். பின்பு தண்ணீர் நன்கு கொதித்ததும் கீழே இறக்கி அதில் நாம் தோலுரித்து வைத்திருக்கும் 150 கிராம் பூண்டை சேர்த்து பத்து நிமிடங்கள் அங்கு ஊற வைத்துக் கொள்ளுங்கள்.
பின்பு ஒரு பவுளில் நாம் வைத்திருக்கும் இரண்டு டீஸ்பூன் அளவு மல்லித்தூள், ஒரு டீஸ்பூன் சீரகத்தூள், ஒரு டீஸ்பூன் மிளகாய்த்தூள், கால் டீஸ்பூன் காயம், அரை டீஸ்பூன் மஞ்சள் தூள் மற்றும் கடைசியாக ஒரு டீஸ்பூன் உப்பு சேர்த்து கலந்து வைத்துக் கொள்ளுங்கள்.
பின்பு ஒரு கடாயை அடுப்பில் வைத்து அதில் கால் கப் அளவு எண்ணெய் ஊற்றி எண்ணெய் நன்கு காய்ந்ததும் அதில் கால் டீஸ்பூன் வெந்தயம் மற்றும் கால் டீஸ்பூன் கடுகு சேர்த்து தாளித்துக் கொள்ளுங்கள் கடுகு நன்கு பொரிந்து வந்தவுடன் நாம் வைத்திருக்கும் கருவேப்பிலை மற்றும் இஞ்சி பூண்டு பேஸ்ட் சேர்த்து வதக்கி விடவும்.
பின் இஞ்சி பூண்டு பேஸ்ட் நன்கு வழங்கியதும் நம் கலந்து வைத்திருக்கும் மசாலாவை இதனுடன் சேர்த்து கிளறி விடுங்கள். மசாலா பொருட்கள் கருகாமல் இருக்க தீயை மிதமான சூட்டில் ஏரிய விடுங்கள். பின்பு நாம் ஊற வைத்த பூண்டை ஒரு சிறிய துணியில் சேர்த்து ஈரப்பதம் இல்லாமல் நன்றாக துடைத்து கொள்ளுங்கள்.
பின்பு இந்த பூண்டையும் கடாயில் சேர்த்து நான்கு கிளறி விடுங்கள் பின் ஒரு துண்டு வெல்லம் மற்றும் இரண்டு டீஸ்பூன் எலுமிச்சை சாறு சேர்த்து நன்றாக ஒரு மூன்று நிமிடம் வதக்கி கொள்ளவும். அவ்வளவு தான் சுவையான பூண்டு ஊறுகாய் தயாராகிவிட்டது.






