சப்பாத்தி பூரிக்கு சைடு டிஷ்ஷா காளான் ப்ரோக்கோலி மசாலா இப்படி ஒரு முறை செய்து பாருங்கள்!!

வழக்கமாக சப்பாத்தி, நாண் போன்றவற்றிக்கு நாம் உருளைக்கிழங்கு, பட்டாணி, காலிஃபிளவர் அல்லது வெஜ் குருமா என்று தான் செய்து சாப்பிட்டு இருப்போம். இதனையே மீண்டும் மீண்டும் செய்து சாப்பிட்டு விட்டதா? கொஞ்சம் வித்தியாசமாக எதையாவது செய்து சாப்பிடணும் என்று நினைக்கிறீர்களா? அப்போது இந்த பத

By Prem Kumar · 4/2/2026

வழக்கமாக சப்பாத்தி, நாண் போன்றவற்றிக்கு நாம் உருளைக்கிழங்கு, பட்டாணி, காலிஃபிளவர் அல்லது வெஜ் குருமா என்று தான் செய்து சாப்பிட்டு இருப்போம். இதனையே மீண்டும் மீண்டும் செய்து சாப்பிட்டு விட்டதா? கொஞ்சம் வித்தியாசமாக எதையாவது செய்து சாப்பிடணும் என்று நினைக்கிறீர்களா? அப்போது இந்த பதிவு உங்களுக்கு தான். இந்த பதிவில் காளான் மற்றும் ப்ரோக்கோலியை கொண்டு ரொம்பவே ஈசியாக டேஸ்டியான காளான் ப்ரோக்கோலி மசாலா எப்படி வீட்டிலேயே எளிமையான முறையில் செய்வது என்பதைப் பற்றி தான் பார்க்கப் போகிறோம்.

நாம் அனைவருமே ப்ராக்கோலியை மார்கெட்டில் பார்த்திருப்போம். நிறைய பேருக்கு ப்ராக்கோலியை எப்படி செய்வதென்று தெரியாமல் இருக்கலாம். ஆனால் ப்ராக்கோலியைக் கொண்டு எளிய முறையில் ஒரு ரெசிபியை செய்யலாம். அது தான் ப்ராக்கோலி மசாலா. இந்த காளான் ப்ரோக்கோலி மசாலா சப்பாத்தி, சாதம் போன்றவற்றுடன் சேர்த்து சாப்பிட அற்புதமாக இருக்கும். இந்த காயில் உடலுக்கு ஆரோக்கியமானவை என்பதால், அடிக்கடி இவற்றை உணவில் சேர்த்து வருவது நல்லது.

நீங்கள் உங்கள் உடல் எடையை குறைக்க வேண்டும், அதே நேரம் வயிறு பசியும் அடங்க வேண்டும் என்றால் ப்ரோக்கோலியை உணவில் சேர்த்து கொள்ளுங்கள். இதனை சாப்பிடும் பொழுது நீங்கள் அதிகமாக சாப்பிட்டாலும் அதனால் உங்கள் எடை கூடாது ஏனென்றால் அதில் குறைந்த அளவு கலோரிகளை இருக்கும். நம் வயிற்றில் உள்ள செரிமானப் பாதைகளை நன்றாக சுத்தப்படுத்துவதில் ப்ரோக்கோலி பெரும் பங்கு வகிக்கிறது. கால்சியம், வைட்டமின் கே இருப்பதால், எலும்புகள் உறுதியாகும்.

ப்ரோக்கோலியில் கால்சியம் சத்து அதிகம் காணப்படுகிறது. இவ்வளவு ஆரோக்கிய நன்மைகளை கொண்டுள்ள இந்த ப்ரோக்கோலியைக் கொண்டு சுவையான காளான் ப்ரோக்கோலி மசாலா செய்து பாருங்கள். பொதுவாக ப்ரோக்கோலியை பெரும்பாலும் குழந்தைகள் விரும்பி சாப்பிட மாட்டார்கள் ஆனால் ஒரு முறை இப்படி அசத்தலான முறையில் காளான் ப்ரோக்கோலி மசாலா செய்து கொடுங்கள் மிச்சம் வைக்காமல் சாப்பிடுவார்கள். இப்போது சுவையான காளான் ப்ரோக்கோலி மசாலா எப்படி செய்வதென்று பார்ப்போம்‌.

இதனையும் படியுங்கள் : .ஆரோக்கியமான பிரக்கோலி பணியாரம் இந்த மாதிரி ஒரு தடவை செஞ்சு பாருங்க!!

Recipes AMP · Quick view
View full