- Prep
- 10 min
- Cook
- 10 min
- Total
- 20 min
- Serves
- 4
- Cuisine
- Indian, TAMIL
- Course
- evening, snacks
குழிப்பணியாரம், கார பணியாரம், நெய் பணியாரம், கருப்பட்டி பணியாரம், இனிப்பு பணியாரம் அப்படின்னு நிறைய பணியாரம் வகைகள் செஞ்சு சாப்பிட்டு இருப்பீங்க. ஆனா இன்னைக்கு நம்ம கொஞ்சம் வித்தியாசமா பிரக்கோலி பணியாரம் செய்ய போறோம். இந்த பிரக்கோலி பணியாரம் சாப்பிடுவதற்கு அவ்வளவு ருசியா இருக்கும். பிரக்கோலியில் நிறைய சத்துக்கள் இருக்கு. பிரக்கோலி சாப்பிடுவதால் உடல் எடை குறையும், கண்களுக்கு ரொம்ப ரொம்ப நல்லது, நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும். இன்னும் எக்கச்சக்கமான நன்மைகள் இருக்கு. அந்த பிரக்கோலி வச்சு ப்ராக்கோலி பொரியல் கூட்டு பிரக்கோலி ஆம்லெட் அப்படின்னு நிறைய ரெசிபிஸ் செய்யலாம்.
ஆனா இன்னைக்கு நம்ம இந்த பிரக்கோலியை வேகவைத்து அரைத்து ஒரு சூப்பரான ப்ரோக்கோலி பணியாரம் செய்ய போறோம். இந்த பணியாரம் ரொம்பவே வித்தியாசமான டேஸ்ட்ல சாப்பிடுறதுக்கு ரொம்ப சூப்பராவே இருக்கும். சுத்தமா இந்த மாதிரி காய்கறிகள் சாப்பிடாம அடம் பிடிக்கிற குழந்தைகளுக்கு பணியாரத்துல பிரக்கோலியை அரைத்து சேர்த்து பணியாரமா செஞ்சு கொடுத்துடுங்க. கண்டிப்பா அதுல என்ன சேர்த்து இருக்காங்கன்னு தெரியாம குழந்தைகளுக்கு விரும்பி சாப்பிடுவாங்க குழந்தைகள் மட்டுமல்லாமல் பெரியவங்களுமே இந்த மாதிரி காய்கறிகள் சாப்பிடாம இருந்தாங்கன்னா இது ஒரு சூப்பரான முறை.
இந்த மாதிரி பணியாரம் செஞ்சு கொடுத்துட்டா பணியாரமும் சாப்பிட்ட மாதிரி இருக்கும் சத்தான காயும் சாப்பிட்ட மாதிரி இருக்கும். அதனால கண்டிப்பா ப்ராக்கோலி வாங்குனா வீட்ல இருக்குறவங்க சாப்பிடாம இருக்காங்கண்ணா அவங்களுக்கு இந்த மாதிரி செஞ்சு கொடுத்திடுங்க இந்த சுவையான சூப்பரான ப்ரக்கோலி பணியாரம் ரெசிப்பிய காலைல டிபனுக்கு மதியம் லஞ்சுக்கு நைட்டு டின்னருக்குனு எதுக்கு வேணும்னாலும் செய்யலாம். இந்த சுவையான பணியாரம் சைடு டிஷ் இல்லாம கூட சாப்பிடலாம். உங்களுக்கு தேவைப்பட்டால் தக்காளி சட்னி தேங்காய் சட்னி வச்சு சாப்பிடலாம். எல்லாமே சூப்பரா இருக்கும் இப்ப வாங்க இந்த சுவையான பணியாரம் ரெசிபியை எப்படி செய்வது என்று பார்க்கலாம்.
இதனையும் படியுங்கள் : பிரக்கோலி சாப்பிட பிடிக்காதவங்க கூட இந்த மாதிரி சிம்பிளா ஒரு பொரியல் செஞ்சு கொடுத்தா விரும்பி சாப்பிடுவாங்க!!
Ingredients
Method
ஒரு பாத்திரத்தில் தண்ணீர் சேர்த்து பிரக்கோலியை சேர்த்து 10 நிமிடம் வேக வைத்து எடுக்கவும்.
ஆற வைத்து மிக்ஸி ஜாரில் சேர்த்து அரைத்து எடுத்துக் கொள்ளவும். அரைத்த விழுதை இட்லி மாவில் சேர்த்து கலந்து கொள்ளவும்.
ஒரு கடாயில் எண்ணெய் விட்டு கடுகு உளுத்தம்பருப்பு கடலைப்பருப்பு கருவேப்பிலை வெங்காயம் சேர்த்து நன்றாக வதக்கவும்.
இறுதியாக தேங்காய் துண்டுகள் சேர்த்து வதக்கி அதனையும் மாவில் சேர்த்து கொள்ளவும்.
பணியாரக் கல்லில் எண்ணெய் ஊற்றி மாவை ஊற்றி பணியாரமாக சுட்டு எடுத்தால் சுவையான பிரக்கோலி பணியாரம் தயார்.






