காலிஃப்ளவர் மாதிரியே பச்சை நிறத்துல இருக்கக்கூடிய பிரக்கோலி நிறைய பேருக்கு பார்க்கிறதுக்கு சுத்தமா பிடிக்காது. ஆனா அந்த பிரக்கோலியில் நிறைய நிறைய சத்துக்கள் இருக்கு. கர்ப்பமா இருக்கக்கூடிய பெண்கள் அடிக்கடி உணவுல இந்த பிரக்கோலியை சேர்த்துக்கணும். அவங்க மட்டும் இல்லாம எல்லாருமே இதை அடிக்கடி உணவில் சேர்த்துக்கொள்வது மூலமா உடம்புக்கு நிறைய ஆரோக்கியம் கிடைக்கும். எப்பவுமே எவ்வளவு காய்கறிகள் இருந்தாலும் நம்ம வீட்ல ஏதாவது ஒன்னு ரெண்டு காய்கறியை தான் நம்ம அடிக்கடி பொரியல் செஞ்சு சாப்பிடுவோம். அது சாப்பிட்டு சாப்பிட்டு ஒரு சிலருக்கு ரொம்ப போர் அடிச்சு போயிருக்கும்.
அந்த மாதிரி இருக்கிறவங்க பிரக்கோலி வாங்கி அதுல இந்த மாதிரி காரசாரமா ஒரு பொரியல் மட்டும் செஞ்சு சாப்பிட்டு பாருங்க. அதுக்கப்புறமா பிரக்கோலிய ஒதுக்கவே மாட்டீங்க. இதைதான் அடிக்கடி செஞ்சு சாப்பிடுவீங்க. அதுவும் வீட்டில இருக்கக்கூடிய குழந்தைகளுக்கு இதை இப்போ இருந்தே கொடுத்து பழகணும். அப்பதான் குழந்தைகளுக்கு உடம்புக்கு ரொம்ப ரொம்ப நல்லது. டேஸ்டான இந்த பிரக்கோலி பொரியல் ரசம் சாதத்துக்கு சாம்பார் சாதத்துக்கு கார குழம்பு சாதத்துக்கு வெரைட்டி சாதங்களுக்கு எல்லாத்துக்குமே ஒரு சூப்பரான காம்பினேஷனா இருக்கும்.
கண்டிப்பா இதை பிடிக்காதவங்க யாருமே இருக்க மாட்டீங்க. ரொம்ப ரொம்ப டேஸ்டா இந்த பொரியல் இந்த மாதிரி செஞ்சு பாருங்க. பிரக்கோலியே பிடிக்காதவங்க கூட கண்டிப்பா இதை விரும்பி சாப்பிடுவாங்க. சுவையான இந்த மாதிரியான ரெசிபியை அடிக்கடி நம்ம வீட்ல செஞ்சு கொடுத்தாதான் வீட்ல இருக்குறவங்களும் எல்லா காய்கறிகளும் சாப்பிட முடியும். இனிமேல் சத்தான காய்கறிகளை ஒதுக்குவதை விட்டுட்டு அதை எப்படி செஞ்சா டேஸ்டா இருக்கும் அப்படின்னு பார்த்து பொறுமையா செய்யணும். இப்ப வாங்க இந்த சுவையான பிரக்கோலி பொரியல் எப்படி செய்வது என்று பார்க்கலாம்.
பிரக்கோலி பொரியல் | Broccoli Poriyal Recipe In Tamil
Equipment
- 1 பவுள்
- 1 கடாய்
தேவையான பொருட்கள்
- 1 கப் பிரக்கோலி
- 1 டீஸ்பூன் சோம்பு
- 1/2 டீஸ்பூன் கடுகு உளுத்தம்பருப்பு
- உப்பு தேவையான அளவு
- உப்பு தேவையான அளவு
- 1/2 டீஸ்பூன் கரம் மசாலா தூள்
- 1/2 டீஸ்பூன் மஞ்சள் தூள்
- 4 பல் பூண்டு
- 1 பெரிய வெங்காயம்
- 1 கொத்து கறிவேப்பிலை
செய்முறை
- ஒரு கடாயில் எண்ணெய் சேர்த்து கடுகு உளுந்து பருப்பு சோம்பு, கருவேப்பிலை போட்டு தாளித்துக் கொள்ளவும்.
- பொடியாக நறுக்கிய பூண்டு சேர்த்து நன்றாக கலர் மாறியதும் பெரிய வெங்காயம் சேர்த்து வதக்கவும்.
- பிறகு பிரக்கோலி சேர்த்து நன்றாக வதக்கியதும் மிளகாய் தூள் கரம் மசாலா மஞ்சள் தூள் உப்பு சேர்த்து எண்ணெயிலேயே வதக்கவும்.
- பிறகு லேசாக தண்ணீர் தெளித்து மூடி போட்டு 15 நிமிடம் வேகவைத்து இறக்கினால் சுவையான பிரக்கோலி பொரியல் தயார்.
Nutrition
இதனையும் படியுங்கள் : ருசியான ப்ரோக்கோலி டிக்கா இப்படி செய்து பாருங்க! ஆஹா இதன் ருசியே தனி தான்!