ருசியிலும் வாசத்திலும் அசைவ குழம்பு தோத்து போயிரும் ! அட்டகாசமான சுவையில் காளான் மீல் மேக்கர் கிரேவி!!!
இந்நாள் குழந்தைகளிடம் தங்களுக்கு பிடித்த உணவு என்னவென்று கேட்டால் நூடுல்ஸ், பீட்சா, பாஸ்தா, குல்ச்சா என்று ஒரு பெரிய பட்டியலே அடுக்குவார்கள். ஆனால், 80ஸ் கிட்ஸ் & 90ஸ் கிட்ஸிடம் பிடித்தமான உணவு பற்றிக் கேட்டால் முதலில் சொல்வது சப்பாத்தியும் மீல் மேக்கர் குருமாவும் தான். பெரும்பால
இந்நாள் குழந்தைகளிடம் தங்களுக்கு பிடித்த உணவு என்னவென்று கேட்டால் நூடுல்ஸ், பீட்சா, பாஸ்தா, குல்ச்சா என்று ஒரு பெரிய பட்டியலே அடுக்குவார்கள். ஆனால், 80ஸ் கிட்ஸ் & 90ஸ் கிட்ஸிடம் பிடித்தமான உணவு பற்றிக் கேட்டால் முதலில் சொல்வது சப்பாத்தியும் மீல் மேக்கர் குருமாவும் தான். பெரும்பாலும் வார இறுதி நாட்களில் நம் பலரது வீடுகளிலும் அம்மாக்கள் ஒரு காரணத்தோடு இந்த மீல் மேக்கர் குருமா, சப்பாத்தி செய்வார்கள். இந்த மீல்மேக்கர் வெஜ் பிரியாணி போன்றவற்றில் அதிகம் சேர்க்கப்படுவது உண்டு. அது போல இதை வைத்து 65, தொக்கு, குருமா, கிரேவி என்று பல விதங்களில் அசத்தலாக செய்து ரசித்து சாப்பிடலாம். அந்த வகையில் ரொம்ப சுவையான மற்றும் சுலபமாக செய்யக்கூடிய இந்த மீல்மேக்கர் கிரேவி எப்படி செய்வதென்று தான் நாம் பார்க்க இருக்கிறோம்.
பெரும்பாலும் இந்த மீல்மேக்கர் உணவு வகைகள் குழந்தைகள் அதிகம் உண்பதில்லை, ஆனாலும் சத்துக்கள் அதிகம் உள்ளது. இதை குழந்தைகளுக்கு பிடித்த உணவாக செய்து கொடுத்தால் நல்லது தானே. அசைவம் விரும்புபவர்களுக்கு சிக்கன், மட்டன், மீன் எனப் பல வெரைட்டி உணவுகள் உள்ளன. ஆனால் சைவம் சாப்பிடுபவர்களுக்கு காளான், மீல் மேக்கர் என குறிப்பிட்ட சில உணவுகள் மட்டுமே இருப்பதாக பலர் கூறி கேள்விபட்டது உண்டு. இதைப் பற்றின விவாதங்கள் பலவும் நாம் கேட்டிருப்போம். அந்தவகையில் சிக்கன் குழம்பு சுவையில் காளான் மீல் மேக்கர் கிரேவி சுலபமாக செய்யலாம். மேலும் இந்த கிரேவி சப்பாத்திக்கு மட்டுமின்றி, சாதத்திற்கும் அற்புதமாக இருக்கும். காளான் அசைவ உணவுகளின் சுவையைக் கொடுப்பதால், மதிய வேளையில் இந்த கிரேவி உங்கள் வீட்டில் உள்ளோருக்கு செய்து கொடுங்கள். நிச்சயம் விரும்பி சாப்பிடுவார்கள். உங்களுக்கு பாராட்டு நிச்சயம் !!
இதனையும் படியுங்கள் : ருசியான கடாய் காளான், காலையில் டிபனில் இருந்து நைட் டின்னர் வரைக்கும் சைட் டிஷ்க்கு வேற எதுவுமே வேண்டாம்!