சண்டே என்றாலே நமக்கு ஞாபகம் வருவது ரெண்டே விஷயம் தான். ஒன்று விடுமுறை இன்னொன்று அசைவ சமையல். ஞாயிற்றுக்கிழமையானாலே அசைவம் சமைத்தே ஆக வேண்டும் என்பது போல சூழ்நிலை மாறி விட்டது. அசைவம் சமைப்பவர்களுக்கு சிக்கன், மட்டன் என எத்தனையோ வெரைட்டி இருக்கிறது. சைவம் சாப்பிடுபவர்கள் கொஞ்சம் வித்தியாசமாக காரசாரமாக சமைத்து சாப்பிட வேண்டும் என நினைத்தால் இந்த கடாய் காளான் ட்ரை பண்ணலாம்.
அசைவம் என்றாலே அனைவருக்கும் அலாதி பிரியம் தான். ஏனென்றால் இவற்றில் சேர்க்கப்படும் மசாலாக்களின் சுவை ஒருவித நறுமணத்தை ஏற்படுத்துகிறது. இந்த வாசனை வந்து விட்டாலே வீட்டில் உள்ள குழந்தைகள் அம்மா இன்று என்ன சிக்கன் குழம்பா? மட்டன் குழம்பா? என்று கேட்க ஆரம்பித்து விடுவார்கள். அதிலும் பக்கத்து வீட்டுக்காரர்கள் கூட இன்று என்ன கறி குழம்பா? என்று கேட்பார்கள்.
அந்த அளவிற்கு இவற்றில் சேர்க்கப்படும் மசாலாக்கள் மிகவும் அருமையான நறுமணத்தை கொடுக்கின்றன. அவ்வாறு மசாலா சுவையில் இப்படி காளான் சேர்த்து ஒருமுறை கடாய் காளான் செய்து பாருங்கள், வாசனை மட்டுமல்ல சாப்பிடவும் அசைவம் சாப்பிடுவது போல் தான் இருக்கும். எனவே குழந்தைகள் இதனை விருப்பமாக சாப்பிடுவார்கள். வாருங்கள் இந்த கடாய் காளான் எவ்வாறு செய்ய வேண்டும் என்பதை பற்றி இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்வோம்.
கடாய் காளான் | Kadai Mushroom Recipe In Tamil
Equipment
- 1 கடாய்
தேவையான பொருட்கள்
- 200 கிராம் காளான்
- 100 கிராம் வெங்காயம்
- 100 கிராம் தக்காளி
- 2 மேசைக்கரண்டி எண்ணெய்
- 1 மேசைக்கரண்டி இஞ்சி பூண்டு விழுது
- 1 மேசைக்கரண்டி கறித்தூள்
- 1/2 மேசைக்கரண்டி கரம் மசாலா தூள்
- 2 கொத்து கறிவேப்பிலை
- 2 தேக்கரண்டி உப்பு
செய்முறை
- கடாய் காளான் செய்ய தேவையான பொருட்கள் அனைத்தையும் தயாராக எடுத்து வைத்துக் கொள்ளவும். காளானை, கொதிநீர்விட்டுப் பத்து நிமிடங்கள் மூடி வைக்கவும்.
- காளானை நான்காக நறுக்கி வைத்துக் கொள்ளவும். வெங்காயம் மற்றும் தக்காளியை பொடியாக நறுக்கி வைத்துக்கொள்ளவும். அடுப்பில் வாணலியை வைத்து எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் வெங்காயம், கறிவேப்பிலைபோட்டு வதக்கவும்.
- வெங்காயம் வதங்கியதும் மற்ற அனைத்து பொருட்களையும் போட்டு வதக்கவும். அதில் 25 மி.லி தண்ணீர் சேர்த்து நன்கு பிரட்டி விட்டு மூடி வைத்து வேக விடவும்.
- எல்லாம் சேர்ந்து நன்றாக வெந்ததும் திறந்து ஒரு முறை கிளறி விட்டு இறக்கி வைக்கவும். சுவையான கடாய் காளான் கறி ரெடி
Nutrition
இதையும் படியுங்கள் : காளான் சமோசாவை சாப்பிட்டு இருக்கீங்களா? இப்படி ஒரு தரம் ருசியான காளான் சமோசாவை சுலபமாக வீட்டிலயே செஞ்சி பாருங்க!