மதிய உணவிற்கு சுவையான காளான் சாதம் இப்படி செய்து பாருங்கள் கொஞ்சம் கூட மிச்சம் வைக்காமல் சாப்பிடுவார்கள்!!!
வேலைக்கு செல்கிறவர்களுக்கு மற்றும் பள்ளிக்கு செல்லும் குழந்தைகளுக்கு மதிய சாப்பாடு செய்து கொடுப்பார்கள். இதில் அதிகமாக செய்ய கூடிய உணவாக தயிர் சாதம், லெமன் சாதம், புளி சாதம் போன்றவை செய்து கொடுப்போம். ஆனால் இதையே சாப்பிட்டு வந்தால் போர் அடித்து விடும் அல்லவா. அதனால் அவ்வப்போது சற
வேலைக்கு செல்கிறவர்களுக்கு மற்றும் பள்ளிக்கு செல்லும் குழந்தைகளுக்கு மதிய சாப்பாடு செய்து கொடுப்பார்கள். இதில் அதிகமாக செய்ய கூடிய உணவாக தயிர் சாதம், லெமன் சாதம், புளி சாதம் போன்றவை செய்து கொடுப்போம். ஆனால் இதையே சாப்பிட்டு வந்தால் போர் அடித்து விடும் அல்லவா. அதனால் அவ்வப்போது சற்று வித்தியாசமாக அவர்களுக்கு ஏதேனும் செய்து கொடுக்கலாம். அந்த வவையில் சுவையான காளான் சாதம் எப்படி செய்வதென்று இந்த பதிவில் பார்க்கலாம்.
காளான் சாதம் ஒரு எளிதான, விரைவான மற்றும் சுவையான மதிய உணவுப்பெட்டி செய்முறையாகும், இது அரிசியை ஊறவைத்தால் வெறும் 20 நிமிடங்களில் செய்யலாம். ஒவ்வொருவரும் சமைப்பதற்கு நேரம் குறைவாக இருக்கின்ற நேரத்தில் காய்கறிகளை வைத்தோ அல்லது தக்காளி, வெங்காயம் வைத்து வெரைட்டி சாதம் செய்து விடலாம் என்று தான் யோசித்து முடிவு எடுப்பார்கள். அவ்வாறு குழம்பு வைக்க நேரம் இல்லாத போது இந்த காய்கறிகள் வைத்து சுவையான இந்த காளான் சாதத்தை செய்து விட முடியும். இதனை குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி சாப்பிடுவார்கள்.
காளானில் கலோரிகள் மற்றும் கொழுப்பு குறைவாக உள்ளன, அதோடு கூட அவை நிறைந்த அளவு நார்ச்சத்துக்களையும் கொண்டுள்ளன. புரதங்கள், வைட்டமின் C, B மற்றும் D, தாமிரம், பொட்டாசியம், பாஸ்பரஸ், செலினியம், பைட்டோ கெமிக்கல்கள் மற்றும் ஆக்ஸிஜனேற்றிகள் போன்ற பிற ஊட்டச்சத்துக்களும் காளான்களில் நிரம்பியுள்ளன. இத்தகைய நன்மைகளைப் பெற வேண்டுமானால், இதனை உணவில் அதிகம் சேர்த்துக் கொள்ள வேண்டும். ஒரு சுவையான சமையலை மதியம் சாப்பிட விரும்புகிறீர்கள் என்றால் இந்த காளான் சாதத்தை செய்து சாப்பிடுங்கள். முக்கியமாக இது பேச்சுலர்களுக்கான ரெசிபி என்றே கூறலாம்.
இதனையும் படியுங்கள் : பாரம்பரிய ருசியில் சூப்பரான காளான் வெள்ளை குழம்பு இப்படி ஒரு தரம் ட்ரை பண்ணி பாருங்கள்!