பாரம்பரிய ருசியில் சூப்பரான காளான் வெள்ளை குழம்பு இப்படி ஒரு தரம் ட்ரை பண்ணி பாருங்கள்!

- Advertisement -

காளான் பிரியரா நீங்கள் அல்லது உங்கள் வீட்டில் உள்ளோர் காளானை விரும்பி சாப்பிடுவார்களா? அதனை ஒரே மாதிரி சமைத்து போர் அடித்துவிட்டதா? அப்படியானால் அடுத்த முறை 10 நிமிடத்தில் செய்யக்கூடிய ஒரு சுவையான மற்றும் காரசாரமான பாரம்பரிய சுவையில் காளான் குழம்பு செய்து பாருங்கள். சிலருக்கு அசைவ உணவுகள் பிடிக்காது. இருந்தாலும் அசைவ உணவில் இருக்கும் சுவையும் மனமும் சைவ உணவில் இருக்க வேண்டும் என்று நினைப்பார்கள். அந்த வகையில் காளான் சமைத்து சாப்பிடுங்கள். காளான்களில் கலோரிகள் மற்றும் கொழுப்பு குறைவாக உள்ளன, அதோடு கூட அவை நிறைந்த அளவு நார்ச்சத்துக்களையும் கொண்டுள்ளன.

-விளம்பரம்-

புரதங்கள், வைட்டமின் C, B மற்றும் D, தாமிரம், பொட்டாசியம், பாஸ்பரஸ், செலினியம், பைட்டோ கெமிக்கல்கள் மற்றும் ஆக்ஸிஜனேற்றிகள் போன்ற பிற ஊட்டச்சத்துக்களும் காளான்களில் நிரம்பியுள்ளன. இத்தகைய நன்மைகளைப் பெற வேண்டுமானால், இதனை உணவில் அதிகம் சேர்த்துக் கொள்ள வேண்டும். அதிலும் காளான் சூப், காளான் மசாலா, காளான் குழம்பு என்று பலவாறு காளானை சமைத்து சாப்பிடலாம். இப்போது காளானில் பாரம்பரிய முறையில் குழம்பு வைப்பது எப்படி என்பதை தெரிந்துக் கொள்வோம். சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி சாப்பிடும் அளவிற்கு இதன் சுவை அருமையாக இருக்கும். இந்த காளான் குழம்பு குழந்தைகளுக்கு மிகவும் பிடிக்கும். பூரி, சப்பாத்தி, நாண், புலாவ், சாதத்துடன் சேர்த்து சாப்பிட அருமையாக இருக்கும் இந்த காளான் குழம்பு.

- Advertisement -
Print
No ratings yet

பாரம்பரிய காளான் குழம்பு | Traditional Mushroom Curry Recipe In Tamil

காளான் பிரியரா நீங்கள் அல்லது உங்கள் வீட்டில் உள்ளோர் காளானை விரும்பி சாப்பிடுவார்களா? அதனை ஒரே மாதிரி சமைத்து போர் அடித்துவிட்டதா? அப்படியானால் அடுத்த முறை 10 நிமிடத்தில் செய்யக்கூடிய ஒரு சுவையான மற்றும் காரசாரமான பாரம்பரிய சுவையில் காளான் குழம்பு செய்து பாருங்கள். சிலருக்கு அசைவ உணவுகள் பிடிக்காது. இருந்தாலும் அசைவ உணவில் இருக்கும் சுவையும் மனமும் சைவ உணவில் இருக்க வேண்டும் என்று நினைப்பார்கள். அந்த வகையில் காளான் சமைத்து சாப்பிடுங்கள். காளான்களில் கலோரிகள் மற்றும் கொழுப்பு குறைவாக உள்ளன, அதோடு கூட அவை நிறைந்த அளவு நார்ச்சத்துக்களையும் கொண்டுள்ளன. இத்தகைய நன்மைகளைப் பெற வேண்டுமானால், இதனை உணவில் அதிகம் சேர்த்துக் கொள்ள வேண்டும்.
Prep Time10 minutes
Active Time15 minutes
Total Time25 minutes
Course: dinner, LUNCH
Cuisine: Indian
Keyword: Traditional Mushroom Curry
Yield: 4 People
Calories: 51kcal

Equipment

  • 1 பவுள்
  • 1 மிக்ஸி
  • 1 கடாய்

தேவையான பொருட்கள்

  • 1 பாக்கெட் காளான்
  • 1/2 கப் சின்ன வெங்காயம்
  • 2 தக்காளி
  • நல்லெண்ணெய் தேவையான அளவு
  • உப்பு தேவையான அளவு
  • 1/2 டீஸ்பூன் கடுகு
  • 1 கொத்து கறிவேப்பில்லை

அரைக்க :

  • 1 டேபிள் ஸ்பூன் தனியா தூள்
  • 1 டீஸ்பூன் மிளகாய்த்தூள்
  • 1/4 டீஸ்பூன் மஞ்சள் தூள்
  • 1 டீஸ்பூன் இஞ்சி பூண்டு விழுது
  • 1/2 டீஸ்பூன் மிளகு
  • 1/2 டீஸ்பூன் சோம்பு
  • 1/2 டீஸ்பூன் சீரகம்
  • 2 பட்டை, கிராம்பு
  • 6 சின்ன வெங்காயம்
  • 4 டேபிள் ஸ்பூன் தேங்காய் துருவல்

செய்முறை

  • முதலில் காளானை நன்கு கழுவி துண்டுகளாக நறுக்கி வைத்துக் கொள்ளவும். வெங்காயம், தக்காளி, மல்லி, கறிவேப்பிலை ஆகியவற்றை நறுக்கி வைத்துக் கொள்ளவும்.
  • ஒரு மிக்ஸி ஜாரில் அரைக்கக் கொடுத்துள்ள பொருட்களை சேர்த்து கொஞ்சமாக தண்ணீர் ஊற்றி விழுதாக அரைத்துக் கொள்ளவும்.
  • ஒரு வாணலியை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் கடுகு, கறிவேப்பிலை சேர்த்து பொரிந்ததும் நறுக்கி வைத்துள்ள வெங்காயம் சேர்த்து நன்கு வதக்கவும்.
  • வெங்காயம் வதங்கியதும் தக்காளி சேர்த்து நன்கு வதக்கவும். தக்காளி மசிந்ததும் அரைத்து வைத்துள்ள மசாலாவை சேர்த்து தேவையான அளவு தண்ணீர் மற்றும் உப்பு சேர்த்து மூடி போட்டு கொதிக்க விடவும்.
  • குழம்பு கொதிக்க தொடங்கியதும் நறுக்கி வைத்துள்ள காளானை சேர்த்து கலந்து சிறிதளவு தண்ணீர் விட்டு பத்து நிமிடங்கள் மூடி போட்டு கொதிக்க விடவும்.
  • பின் காளான் வெந்ததும் நறுக்கி வைத்துள்ள கொத்தமல்லி இலையை தூவி அடுப்பை அணைத்து விடவும். அவ்வளவுதான் சுவையான பாரம்பரிய காளான் குழம்பு தயார்.

Nutrition

Serving: 400g | Calories: 51kcal | Carbohydrates: 3.2g | Protein: 7.2g | Fat: 2g | Sodium: 6mg | Potassium: 448mg | Fiber: 1.7g | Vitamin A: 9.25IU | Vitamin C: 59mg | Calcium: 18mg | Iron: 9.1mg

இதனையும் படியுங்கள் : அடுத்தமுறை காளான் வாங்கினால் ஒரு தடவை இந்த காளான் மிளகு வறுவல் செஞ்சு பாருங்க!