அடுத்தமுறை காளான் வாங்கினால் ஒரு தடவை இந்த காளான் மிளகு வறுவல் செஞ்சு பாருங்க!

- Advertisement -

காளான் இப்போ நிறைய பேர் வீட்ல அடிக்கடி செய்யக்கூடிய ஒன்னு தான் இந்த காளான். காளான் பிரியாணி காளான் தொக்கு காளான் 65 காளான் மசாலா அப்படின்னு காளான் வச்சு எக்கச்சக்கமா உணவுகள் நம்ம செஞ்சுட்டு சாப்பிட்டு இருக்கோம். இப்ப எல்லாம் நான் வெஜ் எடுக்க முடியலன்னா எல்லாரும் வீட்லயும் காளான் பிரியாணி தான் இருக்கும். ஃபர்ஸ்ட் தான் நான் வெஜ் எடுக்க முடியல அப்படின்னா வெஜிடபிள் பிரியாணி குஸ்கா அப்படின்னு செய்வோம் ஆனா இப்போ நான் எல்லார் வீட்லயும் காளான் பிரியாணி செய்றத வழக்கமாவே வச்சிருக்கோம் காளானில் பிரியாணி செய்வதும் ரொம்ப டேஸ்ட்டா இருக்கு.

-விளம்பரம்-

கல்யாண வீடுகளிலும் லஞ்சுக்கு டின்னருக்கு எதுக்குனாலும் இப்பலாம் காளான் பிரியாணி கொஞ்சம் வைக்கிறாங்க அந்த அளவுக்கு எல்லாருமே காளான் பிரியாணிய விரும்ப ஆரம்பிச்சுட்டோம். அந்த வகையில் காளான் வச்சு செய்யக்கூடிய ஒரு சூப்பரான காளான் மிளகு வறுவல் தான் இப்ப நம்ம பாக்க போறோம். பிரெஷா மசாலா அரச்சு வைக்கக்கூடிய இந்த காளான் மிளகு வறுவல் சாப்பிடுவதற்கு ரொம்பவே டேஸ்டா இருக்கும்.

- Advertisement -

அதுமட்டுமில்லாம இந்த காளான் மிளகு வறுவல தயிர் சாதத்துக்கும் ரசம் சாதத்துக்கும் சேர்த்து வைத்து சாப்பிட்டால் டேஸ்ட் சொல்லவே தேவையில்லை அவ்வளவு அருமையா இருக்கும். ரொம்பவே சிம்பிளா அதே நேரத்தில் ரொம்ப டேஸ்டா செய்யக்கூடிய இந்த காளான் மிளகு வறுவல் சின்ன குழந்தைகள் இருந்து பெரியவங்க வரைக்கும் எல்லாருக்குமே ரொம்ப பிடிக்கும். இப்ப வாங்க இந்த சூப்பரான காளான் மிளகு வறுவல் எப்படி செய்வது என்று பார்க்கலாம்.

Print
No ratings yet

காளான் மிளகு வறுவல் | Mushroom Pepper Fry In Tamil

காளான் பிரியாணி காளான் தொக்கு காளான் 65 காளான் மசாலா அப்படின்னு காளான் வச்சு எக்கச்சக்கமா உணவுகள் நம்ம செஞ்சுட்டு சாப்பிட்டு இருக்கோம். இப்ப எல்லாம் நான் வெஜ் எடுக்க முடியலன்னா எல்லாரும் வீட்லயும் காளான் பிரியாணி தான் இருக்கும். ஃபர்ஸ்ட் தான் நான் வெஜ் எடுக்க முடியல அப்படின்னா வெஜிடபிள் பிரியாணி குஸ்கா அப்படின்னு செய்வோம் ஆனா இப்போ நான் எல்லார் வீட்லயும் காளான் பிரியாணி செய்றத வழக்கமாவே வச்சிருக்கோம் காளானில் பிரியாணி செய்வதும் ரொம்ப டேஸ்ட்டா இருக்கு.
Prep Time5 minutes
Active Time10 minutes
Course: Fry
Cuisine: tamil nadu
Keyword: Mushroom Pepper Fry
Yield: 4
Calories: 112kcal

Equipment

  • 1 கடாய்

தேவையான பொருட்கள்

  • 1 கப் காளான்
  • 2 பெரிய வெங்காயம்
  • 1 பட்டை
  • 1 கிராம்பு
  • 1 டீஸ்பூன் இஞ்சி பூண்டு விழுது
  • 1 டீஸ்பூன் மிளகு
  • 1 டீஸ்பூன் சீரகம்
  • 1 டீஸ்பூன் சோம்பு
  • 1 பச்சை மிளகாய்
  • 1 டீஸ்பூன் மஞ்சள் தூள்
  • உப்பு தேவையான அளவு
  • எண்ணெய் தேவையான அளவு
  • கொத்தமல்லி இலைகள் சிறிதளவு

செய்முறை

  • முதலில் காளான் ஓடு அரிசி மாவு சேர்த்து தண்ணீர் ஊற்றி கழுவி சுத்தம் செய்து எடுத்துக் கொள்ளவும்
  • ஒரு கடாயில் எண்ணெய் சேர்க்காமல் மிளகு சீரகம் சோம்பு சேர்த்து அடுத்த மிதமான தீயில் வைத்து நன்றாக வறுத்து ஆற வைத்து பொடியாக்கி எடுத்துக் கொள்ளவும்
  • அதே கடாயில் எண்ணெய் சேர்த்து பட்டை கிராம்பு வெங்காயம் சேர்த்து தாளித்துக் கொள்ளவும்
  • பிறகு இஞ்சி பூண்டு விழுது சேர்த்து பச்சை வாசனை போகும் வரை நன்றாக வதக்கிக் கொள்ளவும். காளானை சேர்த்து மஞ்சள் தூள் உப்பு சேர்த்து நன்றாக வேக வைக்கவும்
  • தண்ணீர் சேர்க்க தேவையில்லை. காளானில் இருந்தே நிறைய தண்ணீர் வெளிவரும்.கலர் நன்றாக வேண்டும் பிறகு இறுதியாக அரைத்து வைத்துள்ள மசாலா மற்றும் கொத்தமல்லி இலைகள் தூவி எடுத்தால் சுவையான காளான் மிளகு வறுவல் தயார்

Nutrition

Serving: 500g | Calories: 112kcal | Carbohydrates: 48g | Protein: 21g | Fat: 1.2g | Potassium: 66mg | Fiber: 2g

இதையும் படியுங்கள் : மதிய உணவுக்கு ருசியான காளான் புலாவ் ஒரு தரம் இப்மடி செஞ்சி பாருங்க! ஒரு பருக்கை சோறு கூட மிஞ்சாது!