உடல் சூட்டை தணிக்க முலாம்பழம் வைத்து ஒரு ஜூஸ் இப்படி ஒரு முறை செய்து குடியுங்கள்!!

கோடைக்காலம் தொடங்கிவிட்டாலே நம் உடல் வெப்பம் அதிகரித்து, தாகம் தணிக்க எதையாவது தேடும். அந்த மாதிரி தோணும் போது கடைகளில் போய் ஜூஸ், ரஸ்னா, ஜிகர்தண்டா, பாதாம் பால், ரோஸ் மில்க், மிக்சர் ஜூஸ் அப்படின்னு ஏதாவது வாங்கி சாப்பிடுவோம். சந்தையில் கிடைக்கும் செயற்கை குளிர்பானங்களை விட, நம்

By Prem Kumar · 10/5/2026

கோடைக்காலம் தொடங்கிவிட்டாலே நம் உடல் வெப்பம் அதிகரித்து, தாகம் தணிக்க எதையாவது தேடும். அந்த மாதிரி தோணும் போது கடைகளில் போய் ஜூஸ், ரஸ்னா, ஜிகர்தண்டா, பாதாம் பால், ரோஸ் மில்க், மிக்சர் ஜூஸ் அப்படின்னு ஏதாவது வாங்கி சாப்பிடுவோம். சந்தையில் கிடைக்கும் செயற்கை குளிர்பானங்களை விட, நம் பாரம்பரிய முறையில் செய்யப்படும் பானங்களே உடலுக்கு மிகுந்த நன்மைகளைத் தரும். குழந்தைகளுக்கு வேற வீட்டில் இருந்தால் ஏதாவது கேட்டு அடம் பிடிச்சுக்கிட்டே இருப்பார்கள்.

அந்த மாதிரி கேக்குற குழந்தைகளுக்கு கடைகளில் போய் வாங்கி கொடுக்காமல் வீட்டிலேயே ஏதாவது செய்து கொடுக்க விரும்பினால் இந்த பதிவு உங்களுக்கு தான்!! இந்த பதிவில் கோடை காலத்தில் தாகத்தை தணிக்க கூடிய சுவையான முலாம்பழம் தேன் ஜூஸ் செய்து உங்கள் வீட்டில் உள்ளவர்களுக்கு கொடுங்கள். கோடைக்காலத்தில் பெரும்பாலும் மக்களால் அதிகம் விரும்பி உண்ணக் கூடிய பழங்களாக மாம்பழமும் தர்பூசணியும், இளநீரும் இருக்கின்றன.

அதே சமயத்தில் மிகவும் ஆரோக்கியம் தரும் ஒரு பழமாக முலாம்பழம் உள்ளது.‌ உடலில் உள்ள வெப்பத்தை தணிப்பதில் முலாம் பழம் மிகவும் சிறந்த ஒன்று. இது தாகத்தை தீர்க்கும் ஒரு மிகச்சிறந்த பழமாகும். இந்த பழத்தை அப்படியே சாப்பிட நன்றாக இருக்காது. அதனை சர்க்கரையில் தொட்டு தான் சாப்பிட முடியும். இல்லையெனில் அதன் கனிந்த பகுதியை எடுத்து, சர்க்கரை மற்றும் தண்ணீர் சேர்த்து கலந்து குடிக்கலாம் அல்லது மில்க் ஷேக் செய்து குடிக்கலாம்.

இது செய்வது மிகவும் எளிமையான செய்முறை தான். தற்போது குழந்தைகளுக்கு பள்ளி விடுமுறை என்பதால் அதிக நேரம் விளையாடி கொண்டு தான் இருப்பார்கள். அந்த வகையில் விளையாடி களைத்து போய் வரும் குழந்தைகளுக்கு முலாம்பழம் கொண்டு சத்தான, சுவையான மற்றும் வயிறு நிரம்பும்படியான இந்த முலாம்பழம் தேன் ஜூஸ் செய்து கொடுங்கள் கண்டிப்பாக விரும்பி குடிப்பார்கள். இப்போது சுவையான முலாம்பழம் தேன் ஜூஸ் எப்படி செய்வதென்று பார்ப்போம்‌.

இதனையும் படியுங்கள் : தித்திக்கும் சுவையில் முலாம்பழ கேசரி இப்படி செய்து பாருங்க! வாயில் வைத்தவுடன் கரையும்!

Recipes AMP · Quick view
View full