கிராமத்து மண் மனம் மாறாமல் மட்டன் எலும்பு குழம்பு ஒரு முறை இப்படி செய்து பாருங்க! ஒரு சட்டி குழம்பும் காலியாகும்!
மட்டன் குழம்பு தமிழகத்தில் மிகவும் பிரபலமான ஒரு உணவு. இவை சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்கும் மிகவும் பிடித்தமான உணவு. மட்டன் குழம்பு பரோட்டா, தோசை, மற்றும் இட்லிக்கு ஒரு அசத்தலான சைடிஷ் ஆக இருக்கும். ஆனால் பரோட்டா மட்டன் குழம்பு காம்பினேஷன்க்கு பலரின் மத்தியில் ஒரு தன
மட்டன் குழம்பு தமிழகத்தில் மிகவும் பிரபலமான ஒரு உணவு. இவை சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்கும் மிகவும் பிடித்தமான உணவு. மட்டன் குழம்பு பரோட்டா, தோசை, மற்றும் இட்லிக்கு ஒரு அசத்தலான சைடிஷ் ஆக இருக்கும். ஆனால் பரோட்டா மட்டன் குழம்பு காம்பினேஷன்க்கு பலரின் மத்தியில் ஒரு தனி வரவேற்பு இருக்கிறது என்றால் அது மிகையல்ல.
மட்டன் என்றாலே அசைவ ப்ரியர்களின் ஆதர்ஷ உணவு. அதிலும் எலும்பு குழம்பு என்றால் சொல்லவே வேண்டாம். மட்டனில் உள்ள சத்துக்கள் அனைத்துமே எலும்பில் தான் இருக்கும் என்பதால், எலும்பு குழம்பு ருசிக்கு மட்டுமல்லாது ஊட்டத்துக்கும் நல்லது.
மழையோ, குளிரோ, சளியோ, இருமலோ, மட்டன் எலும்பு குழப்பு சமைத்து சாப்பிட்டால் எல்லாம் தூரமாய் போகும் என்பார்கள். இறைச்சியை விட ஆட்டிறைச்சி எலும்பில் சுவை அதிகம் என்பது உங்களுக்குத் தெரியுமா? நீங்கள் சூப் அல்லது கறி குழம்பு தயாரிக்கும் போது, அதிகபட்ச சுவை மற்றும் சுவைக்காக எலும்புகளுடன் கூடிய ஆட்டிறைச்சியைப் பயன்படுத்தவும். இது கிராமத்து ஸ்டைல் ரெசிபி மற்றும் ஆப்பம், இடியாப்பம், சாதம், ரொட்டி, இட்லி அல்லது தோசை ஆகியவற்றுடன் மிகவும் நன்றாக செல்கிறது. இதோ சுவையான மட்டன் எலும்பு குழம்பு செய்வது எப்படி? என்பதை பார்க்கலாம்.