கிராமத்து மண் மனம் மாறாமல் மட்டன் எலும்பு குழம்பு ஒரு முறை இப்படி செய்து பாருங்க! ஒரு சட்டி குழம்பும் காலியாகும்!

- Advertisement -

மட்டன் குழம்பு தமிழகத்தில் மிகவும் பிரபலமான ஒரு உணவு. இவை சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்கும் மிகவும் பிடித்தமான உணவு. மட்டன் குழம்பு பரோட்டா, தோசை, மற்றும் இட்லிக்கு ஒரு அசத்தலான சைடிஷ் ஆக இருக்கும். ஆனால் பரோட்டா மட்டன் குழம்பு காம்பினேஷன்க்கு பலரின் மத்தியில் ஒரு தனி வரவேற்பு இருக்கிறது என்றால் அது மிகையல்ல.

-விளம்பரம்-

மட்டன் என்றாலே அசைவ ப்ரியர்களின் ஆதர்ஷ உணவு. அதிலும் எலும்பு குழம்பு என்றால் சொல்லவே வேண்டாம். மட்டனில் உள்ள சத்துக்கள் அனைத்துமே எலும்பில் தான் இருக்கும் என்பதால், எலும்பு குழம்பு ருசிக்கு மட்டுமல்லாது ஊட்டத்துக்கும் நல்லது.

- Advertisement -

மழையோ, குளிரோ, சளியோ, இருமலோ, மட்டன் எலும்பு குழப்பு சமைத்து சாப்பிட்டால் எல்லாம் தூரமாய் போகும் என்பார்கள்.  இறைச்சியை விட ஆட்டிறைச்சி எலும்பில் சுவை அதிகம் என்பது உங்களுக்குத் தெரியுமா? நீங்கள் சூப் அல்லது கறி குழம்பு தயாரிக்கும் போது, ​​அதிகபட்ச சுவை மற்றும் சுவைக்காக எலும்புகளுடன் கூடிய ஆட்டிறைச்சியைப் பயன்படுத்தவும். இது கிராமத்து ஸ்டைல் ரெசிபி மற்றும் ஆப்பம், இடியாப்பம், சாதம், ரொட்டி, இட்லி அல்லது தோசை ஆகியவற்றுடன் மிகவும் நன்றாக செல்கிறது. இதோ சுவையான மட்டன் எலும்பு குழம்பு செய்வது எப்படி? என்பதை பார்க்கலாம்.

Print
No ratings yet

கிராமத்து மட்டன் எலும்பு குழம்பு | Mutton Bone Gravy Recipe In Tamil

மட்டனில் உள்ள சத்துக்கள் அனைத்துமே எலும்பில் தான் இருக்கும் என்பதால், எலும்பு குழம்பு ருசிக்கு மட்டுமல்லாது ஊட்டத்துக்கும் நல்லது. மழையோ,குளிரோ, சளியோ, இருமலோ, மட்டன் எலும்பு குழப்பு சமைத்து சாப்பிட்டால் எல்லாம் தூரமாய் போகும் என்பார்கள்.  இறைச்சியைவிட ஆட்டிறைச்சி எலும்பில் சுவை அதிகம் என்பது உங்களுக்குத் தெரியுமா? நீங்கள் சூப் அல்லது கறி குழம்பு தயாரிக்கும் போது, ​​அதிகபட்ச சுவை மற்றும் சுவைக்காக எலும்புகளுடன் கூடிய ஆட்டிறைச்சியைப் பயன்படுத்தவும். இது கிராமத்து ஸ்டைல் ரெசிபி மற்றும் ஆப்பம், இடியாப்பம், சாதம், ரொட்டி, இட்லி அல்லது தோசை ஆகியவற்றுடன் மிகவும் நன்றாக செல்கிறது. இதோ சுவையான மட்டன் எலும்பு குழம்பு செய்வது எப்படி? என்பதை பார்க்கலாம்.
Prep Time10 minutes
Active Time10 minutes
Course: Gravy, Kulambu
Cuisine: tamil nadu
Keyword: Mutton Bone Gravy
Yield: 4
Calories: 902kcal

Equipment

  • 1 கடாய்

தேவையான பொருட்கள்

  • 1 1/2 கிலோ மட்டன் எலும்பு கறி
  • 2 வெங்காயம்
  • 3 தக்காளி
  • 4 டேபிள் ஸ்பூன் இஞ்சி பூண்டு விழுது
  • 100 மில்லி கடலெண்ணெய்
  • 1 ஸ்பூன் கடுகு
  • கறிவேப்பிலை சிறிது
  • கொத்தமல்லி தழை சிறிது
  • கல் உப்பு தேவையானஅளவு
  • 1/2 ஸ்பூன் மஞ்சள் தூள்
  • 2 ஸ்பூன் மல்லித் தூள்
  • 2 ஸ்பூன் மிளகாய்த்தூள்
  • 1 ஸ்பூன் சீரகத்தூள்
  • 1 ஸ்பூன் கரம் மசாலா தூள்

மசாலா அரைக்க

  • 1/4 கிலோ சின்ன வெங்காயம்
  • 1 கைப்பிடி அளவு கறிவேப்பிலை
  • 1 மூடி தேங்காய் துருவல்
  • 1 ஸ்பூன் சோம்பு
  • 1 ஸ்பூன் கசகசா
  • 2 பட்டை
  • 2 லவங்கம்
  • 1 ஏலக்காய்
  • 1 அன்னாச்சி பூ
  • 1 கல் பாசி
  • 4 டேபிள் ஸ்பூன் எண்ணெய்

செய்முறை

  • முதலில்மட்டன் எலும்பு கறியை சுத்தம் செய்து நன்கு அலசி கொள்ளவும். வாணலியில் எண்ணெய் விட்டு சூடானதும், கடுகு சேர்த்து வெடித்ததும் நறுக்கிய வெங்காயம் சேர்த்து வதக்கவும்.
  • பின் இஞ்சி பூண்டு விழுது சேர்த்து வதக்கவும். பின் நறுக்கிய தக்காளி சேர்த்து வதக்கி கொள்ளவும்.
  • அரைக்க கொடுக்கப்பட்டுள்ள மசாலா பொருட்களை எண்ணெய் விட்டு வதக்கவும். பின் ஆறவிட்டு மிக்ஸியில் போட்டு அரைத்து எடுக்கவும்.
  • பின்னர் தக்காளி வதங்கியதும், கறிவேப்பிலை சேர்த்து வதக்கவும். பின் அலசிய மட்டனை சேர்த்து அதனுடன் சிறிது உப்பு, மஞ்சள் தூள் சேர்த்து நன்கு வதக்கவும். பின் மூடி வைத்து 15 நிமிடங்கள் வரை வேகவிடவும்.
  • பின் மிளகாய்த்தூள், சீரகத்தூள், மல்லித்தூள், கரம் மசாலா தூள், சேர்த்து நன்கு வதக்கவும். பின் தேவையான அளவு தண்ணீர் ஊற்றி நன்கு வேகவிடவும்.
  • பின் மட்டன் நன்கு வெந்ததும் அரைத்த விழுதை சேர்த்து தேவையான அளவு தண்ணீர் விட்டு நன்றாக கொதிக்க விடவும். 15 நிமிடங்கள் வரை நன்றாக கொதிக்க விட்டு கொத்தமல்லி தழை தூவி இறக்கவும்.
  • சுவையான, ஆரோக்கியமான கிராமத்து ஸ்டைல் மட்டன் எலும்பு குழம்பு ரெடி.

Nutrition

Serving: 600g | Calories: 902kcal | Carbohydrates: 56g | Protein: 4.6g | Cholesterol: 7.8mg | Sodium: 1092mg | Potassium: 782mg | Calcium: 34mg