Advertisement
அசைவம்

வீடே கமகமக்கும் பஞ்சு போன்ற மிருதுவான ஈரல் வறுவல் செய்வது எப்படி ?

Advertisement

நாம் ஒவ்வொரு முறையும் ஆட்டின் கறியை வாங்கி நமக்கு பிடித்தார் போல் மட்டன் குழம்பு, மட்டன் கிரேவி அல்லது மட்டன் வறுவல் போன்ற உணவு வகைகளை சமைத்து சாப்பிடுவோம். ஆனால் அதையும் தாண்டி அதிக சத்துள்ள ருசியான ஆட்டின் உடல் உறுப்புகளும் இருக்கிறது. நீங்கள் இது போன்ற உணவுகளையும் மாதத்திற்கு ஒரு முறையாவது தயார் செய்து சாப்பிடுவதன் மூலம் உங்களின் உடல் ஆரோக்கியத்தை உங்களால் மேம்படுத்திக் கொள்ள முடியும். ஆம், இன்று ஆட்டின் ஈரல் பகுதி பற்றிதான் பார்க்க இருக்கிறோம்.

இதையும் படியுங்கள் : நாவில் எச்சி ஊறும் சுவையான சுவரொட்டி சமைப்பது எப்படி ?

Advertisement

ஆட்டு ஈரலில் அதிகப்படியான விட்டமின் பி12, விட்டமின் ஏ, காப்பர் இப்படி பல வகையான சத்துக்கள் அடங்கியுள்ளதால் ஆட்டு ஈரலை சமைத்து சாப்பிடுவதன் மூலம் இரும்பு சத்து குறைபாடு உள்ளவர்களுக்கு மற்றும் ஹீமோகுளோபின் குறைபாடு உள்ளவர்கள் இதை சாப்பிடுவதன் மூலம் உங்கள் உடல் ஆரோக்கியம் மேம்படும். இவ்வளவு சத்துள்ள ஆட்டு ஈரலை இன்று எப்படி எளிமையான முறையில் சமைப்பது, தேவையான பொருள்கள், செய்முறைகள் என அனைத்தையும் இந்த சமையல் குறித்த தொகுப்பில் நாம் காணலாம் வாருங்கள்.

மட்டன் ஈரல் வறுவல் | Mutton Eral Fry Recipe in Tamil

Print Recipe
ஆட்டு ஈரலில் அதிகப்படியான விட்டமின் பி12, விட்டமின் ஏ, காப்பர் இப்படி பல வகையான சத்துக்கள் அடங்கியுள்ளதால் ஆட்டு ஈரலை சமைத்து சாப்பிடுவதன் மூலம் இரும்பு சத்து குறைபாடு உள்ளவர்களுக்கு மற்றும் ஹீமோகுளோபின் குறைபாடு உள்ளவர்கள் இதை சாப்பிடுவதன் மூலம் உங்கள் உடல் ஆரோக்கியம் மேம்படும். இவ்வளவு சத்துள்ள ஆட்டு ஈரலை இன்று எப்படி எளிமையான முறையில் சமைப்பது, தேவையான பொருள்கள், செய்முறைகள் என அனைத்தையும் இந்த சமையல் குறித்த தொகுப்பில் நாம் காணலாம் வாருங்கள்.
Course Fry
Cuisine Indian, TAMIL
Keyword Mutton Eral Fry, மட்டன் ஈரல் வறுவல்
Prep Time 10 minutes
Cook Time 20 minutes
Total Time
Advertisement
30 minutes
Servings 4 People
Calories 135

Equipment

  • 1 கடாய்
  • 1 பவுள்

Ingredients

  • ½ kg மட்டன் ஈரல்
  • எண்ணெய் தேவையான அளவு
  • 10 சின்ன வெங்காயம் தோல் உரித்தது
  • 2 பல் பூண்டு
  • 2 tbsp மிளகாய் தூள்
  • ½ tbsp சீரகத்தூள்
  • 3 tbsp மிளகு தூள்
  • கருவேப்பிலை சிறிது
  • உப்பு தேவையான அளவு
  • 1 கப் தண்ணீர்

Instructions

  • முதலிலே ஈரலை இரண்டு முறை தண்ணீர் வைத்து நன்கு அலசி எடுத்துக் கொள்ளுங்கள். ஈரலை வெட்டிய பிறகு கழுவ கூடாது ஞாபகம் வைத்துக் கொள்ளுங்கள். பிறகு ஈரலை கழுவிய பின் சிறிது சிறிதாக வெட்டி கொள்ளுங்கள்.
  • பின்பு கடாயை அடுப்பில் வைத்து தீயை மிதமான அளவிலேயே வைத்துக்
    Advertisement
    கொள்ளுங்கள். பின் தேவையான அளவு எண்ணெய் ஊற்றி கொள்ளவும். எண்ணெய் சூடு ஏறும் வரை காத்திருங்கள்.
  • எண்ணெய் சூடு ஏறியதும் மிளகாய் தூள், சீரகத்தூள், மிளகுத்தூள், தேவையான அளவு உப்பு சேர்த்து வதக்கி கொள்ளுங்கள். பின் நாம் சிறிது சிறிதாக வெட்டி வைத்திருக்கும் ஈரலை சேர்த்து வதக்கி கொள்ளுங்கள்.
  • அதன் பின் ஈரல் நன்கு வெந்து வரும் சமயத்தில் நிறம் மாறியதும் நாம் வைத்திருக்கும் வெங்காயத்தையும் பூண்டையும் சேர்த்து நன்றாக கிளரி விட்டு வதக்கிக் கொள்ளவும்.
  • ஒரு ஐந்து நிமிடம் கழித்து வெங்காயம் நன்றாக வதங்கியதும் சிறிது தேவையான அளவு தண்ணீர் சேர்த்து வதக்கிக் கொள்ளவும். 15 நிமிடங்கள் ஈரல் வதங்கிய பின் தண்ணீர் நன்றாக வற்றி இருக்கும்.
  • இந்த சமயத்தில் மிளகுத்தூளை சேர்த்து அதனுடன் சேர்ந்து கருவேப்பிலையும் தூவி ஒரு ஐந்து நிமிடம் தண்ணீர் முழுவதுமாக வற்றும் வரை வதக்கிக் கொள்ளவும்.
  • எண்ணெயும், ஈரலும் தனியாக பிரிந்து வரும் நிலையில் கடாயை இறக்கிக் கொள்ளுங்கள் அவ்வளவுதான் ருசியான ஆட்டு ஈரல் வறுவல் இனிதே தயாராகி விட்டது.

Video

Nutrition

Calories: 135kcal | Carbohydrates: 3.1g | Protein: 20.4g | Fat: 3.6g | Saturated Fat: 2.1g | Cholesterol: 302mg | Potassium: 258mg

English Overview: mutton eral fry is one of the most important dishes in tamilnadu. mutton eral fry recipe or mutton eral fry seivathu eppadi recipe or mutton eral fry recipe in Tamil are a few important terms to describe this recipe in the tamil language.

Advertisement
Prem Kumar

Recent Posts

நம் வீட்டில் பண வரவு அதிகரிக்க உங்களிடம் இந்த 3 பொருட்கள் இருந்தால் மட்டும் போதும்!

பொதுவாக எல்லோருடைய வீட்டிலும் தன தானியங்கள் நிறைந்திருக்க வேண்டும் என்று கூறுவார்கள். தனம் என்றால் பணம் என்றும் தானியங்கள் என்றால்…

11 மணி நேரங்கள் ago

சப்பாத்திக்கு கிரேவி செய்ய உருளைக்கிழங்கு இல்லைனா இந்த மாதிரி பாம்பே சட்னி செஞ்சு பாருங்க

நம்ம வீட்ல எந்த காய்கறிகளும் இல்லாத சமயத்துல கடலை மாவு மட்டும் இருந்தாலே போதும் சூப்பரா சப்பாத்தி பூரி இட்லி…

11 மணி நேரங்கள் ago

காரசாரமான ருசியில் குண்டூர் ஸ்டைல் கார இட்லி ஒரு தரம் இப்படி செய்து சாப்பிட்டு பாருங்க!

பொடி இட்லி சாப்பிடணும் அப்படின்னு நீங்க ஆசைப்பட்டீங்கன்னா இந்த மாதிரி குண்டூர் ஸ்டைலில் சூப்பரான ஒரு காரப்பொடி ரெடி பண்ணி…

11 மணி நேரங்கள் ago

மாலை நேர ஸ்நாக்ஸாக சாப்பிட ருசியான மொறு மொறு வாழைக்காய் கட்லெட் இப்படி ட்ரை பண்ணி பாருங்க!

முக்கனிகளுள் ஒன்றாக வாழை உள்ளது. வாழையின் இலை முதல் பழம் வரை பல்வேறு மருத்துவ குணங்களையும் நன்மைகளையும் உள்ளடக்கிய ஒன்றாக…

12 மணி நேரங்கள் ago

மாலை நேர ஸ்நாக்ஸாக சாப்பிட ருசியான மொறு மொறு பலாக்கொட்டை கட்லெட் இப்படி ட்ரை பண்ணி பாருங்க!

சமோசா, பப்ஸ், பஜ்ஜி, போண்டா, மற்றும் வடை இந்த மாலை நேர சிற்றுண்டிகளின் வரிசையில் கட்லெட்க்கும் முக்கிய இடம் உண்டு.…

12 மணி நேரங்கள் ago

கையில் கயிறை எத்தனை நாட்கள் வரை கட்ட வேண்டும்

பொதுவாகவே நாம் அனைவரும் வாழ்வில் மகிழ்ச்சியாகவும் மன நிம்மதியுடனும் வாழ வேண்டும் என்று தான் விரும்புகின்றோம். இதனை அடிப்படையாக வைத்தே…

16 மணி நேரங்கள் ago