நாம் ஒவ்வொரு முறையும் ஆட்டின் கறியை வாங்கி நமக்கு பிடித்தார் போல் மட்டன் குழம்பு, மட்டன் கிரேவி அல்லது மட்டன் வறுவல் போன்ற உணவு வகைகளை சமைத்து சாப்பிடுவோம். ஆனால் அதையும் தாண்டி அதிக சத்துள்ள ருசியான ஆட்டின் உடல் உறுப்புகளும் இருக்கிறது. நீங்கள் இது போன்ற உணவுகளையும் மாதத்திற்கு ஒரு முறையாவது தயார் செய்து சாப்பிடுவதன் மூலம் உங்களின் உடல் ஆரோக்கியத்தை உங்களால் மேம்படுத்திக் கொள்ள முடியும். ஆம், இன்று ஆட்டின் ஈரல் பகுதி பற்றிதான் பார்க்க இருக்கிறோம்.
இதையும் படியுங்கள் : நாவில் எச்சி ஊறும் சுவையான சுவரொட்டி சமைப்பது எப்படி ?
ஆட்டு ஈரலில் அதிகப்படியான விட்டமின் பி12, விட்டமின் ஏ, காப்பர் இப்படி பல வகையான சத்துக்கள் அடங்கியுள்ளதால் ஆட்டு ஈரலை சமைத்து சாப்பிடுவதன் மூலம் இரும்பு சத்து குறைபாடு உள்ளவர்களுக்கு மற்றும் ஹீமோகுளோபின் குறைபாடு உள்ளவர்கள் இதை சாப்பிடுவதன் மூலம் உங்கள் உடல் ஆரோக்கியம் மேம்படும். இவ்வளவு சத்துள்ள ஆட்டு ஈரலை இன்று எப்படி எளிமையான முறையில் சமைப்பது, தேவையான பொருள்கள், செய்முறைகள் என அனைத்தையும் இந்த சமையல் குறித்த தொகுப்பில் நாம் காணலாம் வாருங்கள்.
மட்டன் ஈரல் வறுவல் | Mutton Eral Fry Recipe in Tamil
Equipment
- 1 கடாய்
- 1 பவுள்
தேவையான பொருட்கள்
- ½ kg மட்டன் ஈரல்
- எண்ணெய் தேவையான அளவு
- 10 சின்ன வெங்காயம் தோல் உரித்தது
- 2 பல் பூண்டு
- 2 tbsp மிளகாய் தூள்
- ½ tbsp சீரகத்தூள்
- 3 tbsp மிளகு தூள்
- கருவேப்பிலை சிறிது
- உப்பு தேவையான அளவு
- 1 கப் தண்ணீர்
செய்முறை
- முதலிலே ஈரலை இரண்டு முறை தண்ணீர் வைத்து நன்கு அலசி எடுத்துக் கொள்ளுங்கள். ஈரலை வெட்டிய பிறகு கழுவ கூடாது ஞாபகம் வைத்துக் கொள்ளுங்கள். பிறகு ஈரலை கழுவிய பின் சிறிது சிறிதாக வெட்டி கொள்ளுங்கள்.
- பின்பு கடாயை அடுப்பில் வைத்து தீயை மிதமான அளவிலேயே வைத்துக் கொள்ளுங்கள். பின் தேவையான அளவு எண்ணெய் ஊற்றி கொள்ளவும். எண்ணெய் சூடு ஏறும் வரை காத்திருங்கள்.
- எண்ணெய் சூடு ஏறியதும் மிளகாய் தூள், சீரகத்தூள், மிளகுத்தூள், தேவையான அளவு உப்பு சேர்த்து வதக்கி கொள்ளுங்கள். பின் நாம் சிறிது சிறிதாக வெட்டி வைத்திருக்கும் ஈரலை சேர்த்து வதக்கி கொள்ளுங்கள்.
- அதன் பின் ஈரல் நன்கு வெந்து வரும் சமயத்தில் நிறம் மாறியதும் நாம் வைத்திருக்கும் வெங்காயத்தையும் பூண்டையும் சேர்த்து நன்றாக கிளரி விட்டு வதக்கிக் கொள்ளவும்.
- ஒரு ஐந்து நிமிடம் கழித்து வெங்காயம் நன்றாக வதங்கியதும் சிறிது தேவையான அளவு தண்ணீர் சேர்த்து வதக்கிக் கொள்ளவும். 15 நிமிடங்கள் ஈரல் வதங்கிய பின் தண்ணீர் நன்றாக வற்றி இருக்கும்.
- இந்த சமயத்தில் மிளகுத்தூளை சேர்த்து அதனுடன் சேர்ந்து கருவேப்பிலையும் தூவி ஒரு ஐந்து நிமிடம் தண்ணீர் முழுவதுமாக வற்றும் வரை வதக்கிக் கொள்ளவும்.
- எண்ணெயும், ஈரலும் தனியாக பிரிந்து வரும் நிலையில் கடாயை இறக்கிக் கொள்ளுங்கள் அவ்வளவுதான் ருசியான ஆட்டு ஈரல் வறுவல் இனிதே தயாராகி விட்டது.
செய்முறை வீடியோ
Nutrition
English Overview: mutton eral fry is one of the most important dishes in tamilnadu. mutton eral fry recipe or mutton eral fry seivathu eppadi recipe or mutton eral fry recipe in Tamil are a few important terms to describe this recipe in the tamil language.