Advertisement
அசைவம்

ருசியான ஈரல் வறுவல் ,ஒரு முறை இப்படி வித்தியாசமா செஞ்சு பாருங்க! இதன் ருசியே தனி!!

Advertisement

ஈரல் வறுவல் என்பது முழு மசாலாக்களுடன் மட்டன் கல்லீரலில் இருந்து தயாரிக்கப்படும் ஒரு காரமான உணவாகும். ஈரலை எப்படி சமைத்தாலும் அதன் ருசி அனைவருக்கும் பிடிக்கும். இது உங்கள் ஆரோக்கியத்திற்கு மிகவும் நல்லது. மட்டன் கல்லீரல் அதிக சத்து நிறைந்தது. இதில் வைட்டமின் ஏ, இரும்பு மற்றும் கால்சியம் நிறைந்துள்ளது. இது மிகவும் சுவையாக இருக்கும். அதே நேரத்தில் விதவிதமாக ஈரலை சமைத்து குடும்பத்தினரை அசத்துங்க… வாங்க இதை எப்படி செய்வது என்று இந்த பதிவில் பார்ப்போம். 

ஈரல் வறுவல் | Mutton Liver Fry Recipe In Tamil

Print Recipe
ஈரலை எப்படி சமைத்தாலும் அதன் ருசி அனைவருக்கும் பிடிக்கும். இது உங்கள் ஆரோக்கியத்திற்கு மிகவும் நல்லது. மட்டன் கல்லீரல் அதிக சத்து நிறைந்தது. வாங்க இதை எப்படி செய்வது என்று இந்த பதிவில் பார்ப்போம்.        
Course LUNCH
Cuisine tamilnadu
Keyword Mutton Liver Fry
Prep Time 10 minutes
Cook Time 20 minutes
Servings 4
Calories 351

Equipment

  • 1 கடாய்

Ingredients

  • 500 கிராம் ஆட்டு ஈரல்
  • 2  வெங்காயம்
  • 2 பச்சை மிளகாய்
  • 4 வர மிளகாய்
  • 1 டீஸ்பூன் இஞ்சி – பூண்டு விழுது
  • 1 டேபிள்ஸ்பூன் மிளகு
  • 1 டீஸ்பூன் சீரகம்
  • 1 டீஸ்பூன் சோம்பு
  • 1 டீஸ்பூன் மஞ்சள் பொடி
  • கறிவேப்பிலை தேவையான அளவு
  • பட்டை தாளிக்க
  • 3 டேபிள்ஸ்பூன் எண்ணை

Instructions

  • ஈரலை நன்கு கழுவி சிறிய துண்டுகளாக வெட்டி இருநூறு மி. லி. தண்ணீர் வீட்டு முக்கால் வேக்காடு வேக வைக்க வேண்டும்.
  • தண்ணீர் முழுவதும்
    Advertisement
    சுண்டி விட வேண்டும். மிளகு, சீரகம், சோம்பு, வர மிளகாய் நான்கையும்பத்து நிமிடம் ஊற வைத்து ஒருடேபிள் ஸ்பூன் உப்பு சேர்த்து விழுதாக அரைத்து ஈரலில் போட்டு பிசறி அரை மணி நேரம் வைக்க வேண்டும்.
  • வெங்காயத்தை நீள நீளமாகவும், பச்சை மிளகாயை சிறிது சிறிதாகவும் நறுக்கி வைக்க வேண்டும். அடுப்பில் கடாயை வைத்து எண்ணை ஊற்றி பட்டை, இலை தாளிக்க வேண்டும்.
  • வாசனை வந்ததும் வெங்காயம் போட்டு வதக்கி, சிவந்ததும் ப. மிளகாய், கறிவேப்பிலைபோட வேண்டும். இரண்டு நிமிடம் கழித்து இஞ்சி – பூண்டு விழுது, ம.பொடி, ஒருடீ ஸ்பூன் உப்பு மூன்றையும் சேர்த்து வதக்க வேண்டும்.
  • வதங்கியதும் ஈரல் கலவையைப் போட்டு ஐந்து நிமிடம் வதக்கி, அரை டம்ளர் தண்ணீர் ஊற்றி அடுப்பை சிம்மில் வைக்க வேண்டும். அடிக்கடி திறந்து கிளறி விட வேண்டும். தண்ணீர் வற்றியதும் இறக்க வேண்டும்.

Nutrition

Serving: 100g | Calories: 351kcal | Carbohydrates: 39g | Protein: 25g | Fat: 9.2g
Advertisement
Advertisement
Prem Kumar

Recent Posts

ருசியான சிக்கன் மஞ்சூரியன் ரெஸ்டாரெண்ட் ஸ்டைலில் இப்படி ட்ரை பண்ணி பாருங்க! இதன் ருசியே தனி ருசி!

தற்போது காலநிலை குளிர்ச்சியாக இருப்பதால், மாலை வேளையில் வீட்டில் இருப்போர் சூடாக ஏதாவது செய்து கொடுக்க கேட்பார்கள். அப்படிப்பட்ட சமயத்தில்…

3 மணி நேரங்கள் ago

வீட்டில் தங்கம் சேர, அடகு நகை திரும்ப பெற இந்த ஒரு‌ பொருளை மட்டும் நகையுடன் சேர்த்து வைத்து பாருங்கள்!

தங்கம், வெள்ளி போன்ற ஆபரணங்கள் மகாலட்சுமியின் அடையாளமாக கருதப்படுகிறது. வீட்டில் எப்போதும் மகாலட்சுமி இருந்து கொண்டே இருக்க வேண்டும் என்பதால்…

3 மணி நேரங்கள் ago

சுவையான அரிசி உப்புமா நீர்ருண்டை இப்படி செய்து பாருங்க! எளிமையான காலை மற்றும் இரவு உணவு!

நீர்ருண்டை அப்படின்னு சொன்னால் 90ஸ் கிட்ஸ் எல்லாருக்குமே ரொம்பவே பிடிச்ச ஒரு மாலை நேர சிற்றுண்டி. இது ரொம்ப பழைய…

4 மணி நேரங்கள் ago

தித்திக்கும் சுவையில் மாம்பழ ரவை அல்வா,இப்படி செய்து பாருங்க!

இனிப்பு உணவு என்றாலே அனைவருக்கும் பிடித்த உணவாக தான் இருக்கும். அதிலும் முதலிடம் பிடிப்பது அல்வா என்றே சொல்லலாம். அல்வா…

5 மணி நேரங்கள் ago

ருசியான ஆலு மேத்தி சப்ஜி ரெசிபி இப்படி செஞ்சி பாருங்க! உருளைக்கிழங்கு வறுவல்,குருமா வைப்பது போலவே ரொம்ப சுலபம்!!

பொதுவா இந்த சப்பாத்தி பூரி போன்ற டிபன் வகைகளுக்கு ஏதாவது காரசாரமான சைடு டிஷ் இருந்தால் சாப்பிட ரொம்பவே நல்லா…

9 மணி நேரங்கள் ago

டீ பிரியர்கள், மசாலா டீ இப்படி செய்து பாருங்க? சுவையும், மணமும் அசத்தலாக இருக்கும்!!

இப்பொழுதைய நாட்களில் சாப்பாடு சாப்பிடாமல் கூட ஆண்கள் இருந்து விடுவார்கள் ஆனால் டீ குடிக்காமல் அவர்களால் இருக்க முடியாது. ஏன்…

9 மணி நேரங்கள் ago