- Prep
- 10 min
- Cook
- 20 min
- Serves
- 4
- Cuisine
- tamilnadu
- Course
- LUNCH
ஈரல் வறுவல் என்பது முழு மசாலாக்களுடன் மட்டன் கல்லீரலில் இருந்து தயாரிக்கப்படும் ஒரு காரமான உணவாகும். ஈரலை எப்படி சமைத்தாலும் அதன் ருசி அனைவருக்கும் பிடிக்கும். இது உங்கள் ஆரோக்கியத்திற்கு மிகவும் நல்லது. மட்டன் கல்லீரல் அதிக சத்து நிறைந்தது. இதில் வைட்டமின் ஏ, இரும்பு மற்றும் கால்சியம் நிறைந்துள்ளது. இது மிகவும் சுவையாக இருக்கும். அதே நேரத்தில் விதவிதமாக ஈரலை சமைத்து குடும்பத்தினரை அசத்துங்க… வாங்க இதை எப்படி செய்வது என்று இந்த பதிவில் பார்ப்போம்.
Ingredients
Method
ஈரலை நன்கு கழுவி சிறிய துண்டுகளாக வெட்டி இருநூறு மி. லி. தண்ணீர் வீட்டு முக்கால் வேக்காடு வேக வைக்க வேண்டும்.
தண்ணீர் முழுவதும் சுண்டி விட வேண்டும். மிளகு, சீரகம், சோம்பு, வர மிளகாய் நான்கையும்பத்து நிமிடம் ஊற வைத்து ஒருடேபிள் ஸ்பூன் உப்பு சேர்த்து விழுதாக அரைத்து ஈரலில் போட்டு பிசறி அரை மணி நேரம் வைக்க வேண்டும்.
வெங்காயத்தை நீள நீளமாகவும், பச்சை மிளகாயை சிறிது சிறிதாகவும் நறுக்கி வைக்க வேண்டும். அடுப்பில் கடாயை வைத்து எண்ணை ஊற்றி பட்டை, இலை தாளிக்க வேண்டும்.
வாசனை வந்ததும் வெங்காயம் போட்டு வதக்கி, சிவந்ததும் ப. மிளகாய், கறிவேப்பிலைபோட வேண்டும். இரண்டு நிமிடம் கழித்து இஞ்சி - பூண்டு விழுது, ம.பொடி, ஒருடீ ஸ்பூன் உப்பு மூன்றையும் சேர்த்து வதக்க வேண்டும்.
வதங்கியதும் ஈரல் கலவையைப் போட்டு ஐந்து நிமிடம் வதக்கி, அரை டம்ளர் தண்ணீர் ஊற்றி அடுப்பை சிம்மில் வைக்க வேண்டும். அடிக்கடி திறந்து கிளறி விட வேண்டும். தண்ணீர் வற்றியதும் இறக்க வேண்டும்.






