சிம்பிளான ரோட்டுக்கடை ஸ்டைல் ஈரல் தொக்கு இப்படி செய்து கொடுங்கள் டேஸ்டாக இருக்கும்!!!
நகர்ப்புறங்களில் ரோட்டுக்கடை உணவுகளுக்கு மிகப் பெரிய வரவேற்பு உள்ளது. அது சாம்பாரில் தொடங்கி சட்னி, குருமா, சால்னா என தொடர்கிறது. கையேந்தி பவன் என சொல்லப்படும் ரோட்டுக்கடை உணவுகளின் ருசி பிடித்துவிட்டால் போதும், மக்கள் அடுத்தமுறை தேடி சென்று அந்த கடையில் உணவை உண்பார்கள். பெரிய பெ
நகர்ப்புறங்களில் ரோட்டுக்கடை உணவுகளுக்கு மிகப் பெரிய வரவேற்பு உள்ளது. அது சாம்பாரில் தொடங்கி சட்னி, குருமா, சால்னா என தொடர்கிறது. கையேந்தி பவன் என சொல்லப்படும் ரோட்டுக்கடை உணவுகளின் ருசி பிடித்துவிட்டால் போதும், மக்கள் அடுத்தமுறை தேடி சென்று அந்த கடையில் உணவை உண்பார்கள். பெரிய பெரிய ஹோட்டல்களை காட்டிலும் கையேந்தி பவன்களில் இருக்கும் ருசியும் தரமும் மக்களை கவர்கிறது. அந்த வகையில் இந்த பதிவில் ரோட்டுக்கடையில் பரிமாறப்படும் ஸ்பெஷல் ஈரல் தொக்கு எப்படி செய்வது என்பதை பற்றி பார்ப்போம்.
அசைவ உணவுகள் என்றாலே பெரும்பாலானோர் வெறும் இறைச்சியை மட்டுமே சாப்பிடுவார்கள். ஆனால் வெறும் இறைச்சியை விட விலங்குகளின் உள்ளுறுப்புகளில் தான் அதிக அளவு ஊட்டச்சத்துக்கள் இருக்கின்றன என்றும் அதிலும் குறிப்பாக ஈரல் வகைகளில் அதிக ஊட்டச்சத்துக்கள் இருக்கின்றன. ஆட்டு ஈரல் வைத்து குழம்பு, கிரேவி, ரோஸ்ட் என்று பல விதங்களில் சமைக்கலாம் .இன்று நாம் ஆட்டு ஈரல் வைத்து எளிமையான மற்றும் சுவையான ரோட்டுக்கடை ஈரல் தொக்கு ரெசிபியை செய்ய உள்ளோம். இதனை ரசம் சாதம், தயிர் சாதம் போன்றவற்றிற்கு வைத்து சாப்பிட்டால் சூப்பராக இருக்கும்.
ஆட்டு ஈரல் இரும்புச் சத்து குறைபாடு, ஹீமோகுளோபின் அளவு குறைபாடு இருந்தால் சாப்பிடச் சொல்லி பரிந்துரைப்பார்கள். அதோடு இதில் விட்டமின் பி12, விட்டமின் ஏ, காப்பர் இப்படி பல வகையான் ஊட்டச்சத்துகள் அடங்கியுள்ளன. இதை வாரத்தில் இரு நாள் வாங்கி சாப்பிட்டுப் பாருங்கள். அதுவும் இப்படி ஆட்டு ஈரல் தொக்கு வைத்து சாப்பிட்டால் சப்பாத்தி, தோசை, இட்லிக்கு சாப்பிடலாம். அதுமட்டுமல்லாமல் சாதத்திலும் பிசைந்து சாப்பிடலாம்.
இதனையும் படியுங்கள் : சுவையான ரோட்டுக்கடை ஸ்டைலில் சுவரொட்டி வறுவல் இப்படி செய்து பாருங்கள் மிகவும் ருசியாக இருக்கும்!!!