- Prep
- 10 min
- Cook
- 10 min
- Total
- 20 min
- Serves
- 3
- Cuisine
- Indian
- Course
- LUNCH
நகர்ப்புறங்களில் ரோட்டுக்கடை உணவுகளுக்கு மிகப் பெரிய வரவேற்பு உள்ளது. அது சாம்பாரில் தொடங்கி சட்னி, குருமா, சால்னா என தொடர்கிறது. கையேந்தி பவன் என சொல்லப்படும் ரோட்டுக்கடை உணவுகளின் ருசி பிடித்துவிட்டால் போதும், மக்கள் அடுத்தமுறை தேடி சென்று அந்த கடையில் உணவை உண்பார்கள். பெரிய பெரிய ஹோட்டல்களை காட்டிலும் கையேந்தி பவன்களில் இருக்கும் ருசியும் தரமும் மக்களை கவர்கிறது. அந்த வகையில் இந்த பதிவில் ரோட்டுக்கடையில் பரிமாறப்படும் ஸ்பெஷல் ஈரல் தொக்கு எப்படி செய்வது என்பதை பற்றி பார்ப்போம்.
அசைவ உணவுகள் என்றாலே பெரும்பாலானோர் வெறும் இறைச்சியை மட்டுமே சாப்பிடுவார்கள். ஆனால் வெறும் இறைச்சியை விட விலங்குகளின் உள்ளுறுப்புகளில் தான் அதிக அளவு ஊட்டச்சத்துக்கள் இருக்கின்றன என்றும் அதிலும் குறிப்பாக ஈரல் வகைகளில் அதிக ஊட்டச்சத்துக்கள் இருக்கின்றன. ஆட்டு ஈரல் வைத்து குழம்பு, கிரேவி, ரோஸ்ட் என்று பல விதங்களில் சமைக்கலாம் .இன்று நாம் ஆட்டு ஈரல் வைத்து எளிமையான மற்றும் சுவையான ரோட்டுக்கடை ஈரல் தொக்கு ரெசிபியை செய்ய உள்ளோம். இதனை ரசம் சாதம், தயிர் சாதம் போன்றவற்றிற்கு வைத்து சாப்பிட்டால் சூப்பராக இருக்கும்.
ஆட்டு ஈரல் இரும்புச் சத்து குறைபாடு, ஹீமோகுளோபின் அளவு குறைபாடு இருந்தால் சாப்பிடச் சொல்லி பரிந்துரைப்பார்கள். அதோடு இதில் விட்டமின் பி12, விட்டமின் ஏ, காப்பர் இப்படி பல வகையான் ஊட்டச்சத்துகள் அடங்கியுள்ளன. இதை வாரத்தில் இரு நாள் வாங்கி சாப்பிட்டுப் பாருங்கள். அதுவும் இப்படி ஆட்டு ஈரல் தொக்கு வைத்து சாப்பிட்டால் சப்பாத்தி, தோசை, இட்லிக்கு சாப்பிடலாம். அதுமட்டுமல்லாமல் சாதத்திலும் பிசைந்து சாப்பிடலாம்.
இதனையும் படியுங்கள் : சுவையான ரோட்டுக்கடை ஸ்டைலில் சுவரொட்டி வறுவல் இப்படி செய்து பாருங்கள் மிகவும் ருசியாக இருக்கும்!!!
Ingredients
Method
முதலில் ஈரலை நன்கு சுத்தம் செய்து சிறிய துண்டுகளாக நறுக்கி வைத்துக் கொள்ளவும். வெங்காயம், தக்காளி, பச்சை மிளகாய் ஆகியவற்றை நறுக்கி வைத்துக் கொள்ளவும்.
ஒரு கடாயை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி சூடானதும் பட்டை, கிராம்பு, சோம்பு, கறிவேப்பிலை சேர்த்து தாளிக்கவும்.
பின் வெங்காயம் சேர்த்து நன்கு வதக்கவும். வெங்காயம் வதங்கியதும் இஞ்சி பூண்டு விழுது சேர்த்து நன்கு வதக்கவும்.
பின் இஞ்சி பூண்டு பச்சை வாசம் போனவுடன் தக்காளி மற்றும் உப்பு சேர்த்து தக்காளி நன்கு மசியும் வரை வதக்கவும்.
பின் கரம் மசாலா, மிளகாய் தூள், மஞ்சள் தூள் சேர்த்து நன்கு எண்ணெய் பிரிந்து வரும் வரை குறைந்த தீயில் வைத்து வதக்கவும்.
பின் ஈரலை சேர்த்து நன்கு கலந்து பத்து நிமிடங்கள் எண்ணையிலேயே மூடி வைத்து வேக விடவும். ஈரல் வதங்கியதும் சீரகத்தூள், மிளகு தூள், கொத்தமல்லி தழை தூவி அடுப்பை அணைத்து விடவும்.
அவ்வளவுதான் சுவையான மற்றும் ஆரோக்கியமான ரோட்டுக்கடை ஈரல் தொக்கு தயார். இதனை இட்லி, தோசை, சப்பாத்தி, பரோட்டா மற்றும் தயிர் சாதம், ரசம் சாதம் ஆகியவற்றுடன் சேர்த்து சாப்பிடலாம்.






