Home அசைவம் சுட சுட சாதத்துடன் சாப்பிட ருசியான மட்டன் குடைமிளகாய் பிரட்டல் இப்படி ஒரு தரம் செய்து...

சுட சுட சாதத்துடன் சாப்பிட ருசியான மட்டன் குடைமிளகாய் பிரட்டல் இப்படி ஒரு தரம் செய்து பாருங்க!

மட்டன் மேல விருப்பமுள்ளவங்க அதிகமாவே இருப்பாங்க காரணம் மட்டன் சாப்பிடறது உடலுக்கு ரொம்பவே நல்லது அது மட்டுமல்ல சுவையும் சூப்பரா இருக்கும். இதுல மட்டன் அதிக அளவு இரும்பு சத்து நிறைந்திருக்கு. மட்டனில் சூப்பரா ஒரு பிரட்டல் பண்ணி சாப்பிட்டால் எப்படி இருக்கும். அதுவும் சாதத்துக்கு கூட சேர்த்து சாப்பிடும்போது அவ்வளவு சுவையாக இருக்கும். இந்த சுவையான மட்டன் பிரட்டல் கூட குடைமிளகாயை சேர்த்து போட்டு செஞ்சா எவ்வளவு ருசியா இருக்கும் அதுதான் பண்ண போறோம். மட்டன் பிடிக்காதவர்களும் கூட மட்டனை விரும்பி சாப்பிடும் அளவிற்கு நாம் செய்து கொடுத்தால் அவர்கள் நன்றாக சாப்பிடுவார்கள்.

-விளம்பரம்-

ரத்த சிவப்பணுக்கள் குறைவாக உள்ளவர்கள் இந்த ஆட்டினுடைய ஈரல் சாப்பிட்டு வந்தால் மிகவும் நல்லது. கர்ப்பிணி பெண்கள் ஈரலை அடிக்கடி எடுத்துக் கொண்டால் அவர்களுக்கும் குழந்தைகளுக்கும் மிகவும் ஆரோக்கியமானதாக இருக்கும். நோய் எதிர்ப்பு சக்தி குறைவாக இருப்பவர்களும் ஆட்டின் ஈரலை சாப்பிட்டால் நோய் எதிர்ப்பு சக்தி விரைவில் அதிகரிக்கும். எனவே ரத்த சிவப்பணுக்கள் குறைவாக இருப்பவர்களும் நோய் எதிர்ப்பு சக்தி குறைவாக இருப்பவர்களும் ஆட்டின் ஈரலை வாரம் ஒரு முறை  சேர்த்துக் கொண்டால் மிகவும் நல்லது. மட்டனை பிடிக்காதவர்கள் ஒரு முறை இந்த மட்டன் குடைமிளகாய் பிரட்டல் சாப்பிட்டால் அவர்களுக்கு  மிகவும் பிடித்துவிடும்.

அந்த அளவிற்கு இந்த பிரட்டல் மிகவும் சுவையாகவும் மணமாகவும் இருக்கும். அந்த அளவிற்கு இந்த மட்டன் குடைமிளகாய் பிரட்டல் விரும்பி சாப்பிடுவார்கள். மிகவும் எளிமையான முறையில் சுலபமாக செய்யக்கூடிய இந்த பிரட்டலை நாம் சாதத்தோடு சேர்த்து பிசைந்து சாப்பிடலாம். இந்த பிரட்டலை  இட்லி தோசை சப்பாத்தி என அனைத்திற்கும் சேர்த்து சாப்பிடலாம். சுவை அருமையாக இருக்கும் காம்பினேஷனும் சூப்பராக இருக்கும். இந்த அருமையான மட்டன் குடைமிளகாய் பிரட்டல் எப்படி எளிமையாக செய்வது என்று பார்க்கலாம் வாங்க.

Print
3 from 1 vote

மட்டன் குடைமிளகாய் பிரட்டல் | Mutton capsicum pirattal recipe in tamil

அந்த அளவிற்கு இந்த பிரட்டல் மிகவும் சுவையாகவும் மணமாகவும் இருக்கும். அந்த அளவிற்கு இந்த மட்டன் குடைமிளகாய் பிரட்டல் விரும்பி சாப்பிடுவார்கள். மிகவும் எளிமையான முறையில் சுலபமாக செய்யக்கூடிய இந்த பிரட்டலை நாம் சாதத்தோடு சேர்த்து பிசைந்து சாப்பிடலாம். இந்த பிரட்டலை  இட்லி தோசை சப்பாத்தி என அனைத்திற்கும் சேர்த்து சாப்பிடலாம். சுவை அருமையாக இருக்கும் காம்பினேஷனும் சூப்பராக இருக்கும். இந்த அருமையான மட்டன் குடைமிளகாய் பிரட்டல் எப்படி எளிமையாக செய்வது என்று பார்க்கலாம் வாங்க.
Prep Time15 minutes
Active Time20 minutes
Total Time35 minutes
Course: Gravy
Cuisine: tamilnadu
Keyword: | Panneer Katlat Sanwich, andhra Mutton Curry, Araithuvitta Mutton Kulambu, chettinadu mutton kulambu, Chettinadu Mutton Pepper Roast
Calories: 269kcal
Cost: 300

Equipment

  • 1 கடாய்
  • 1 மிக்ஸி
  • 1 கரண்டி

தேவையான பொருட்கள்

  • 1/2 கிலோ மட்டன்
  • 1 கப் குடைமிளகாய்
  • 2  வெங்காயம்
  • 2 தக்காளி                      
  • 2 ஸ்பூன் இஞ்சி பூண்டு விழுது
  • 1 1/2 ஸ்பூன் மிளகு தூள்
  • 1 ஸ்பூன் மஞ்சள் தூள்  
  • 2 பட்டை, கிராம்பு, ஏலக்காய்
  • 1 கொத்து கறிவேப்பிலை
  • கொத்த மல்லி சிறிதளவு
  • எண்ணெய் தேவையான அளவு
  • உப்பு தேவையான அளவு

செய்முறை

  • முதலில் மட்டனை நான்கு கழுவி சுத்தம் செய்து அதனுடன் மஞ்சள் தூள் மற்றும் உப்பு சேர்த்து நன்றாக வேக வைத்துக் கொள்ளவும்.
  • பிறகு ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி பட்டை , லவங்கம்  சேர்த்து  தாளித்துக் கொள்ளவும்.
  • தாளித்த பின்னர் நறுக்கிய  வெங்காயம், குடைமிளகாயை போட்டு கண்ணாடி பதம் வரும் வரை வதக்கிக் கொள்ள வேண்டும்
  • இரண்டும் வதங்கியவுடன் சிறிதளவு கருவேப்பிலையை சேர்க்க வேண்டும். தக்காளியை சேர்த்து நன்றாக வதக்கிக் கொள்ள வேண்டும்.
  • அனைத்தும் நன்றாக வதங்கிய பின்னர் இஞ்சி பூண்டு விழுது சேர்த்து பச்சை வாசனை போகும் வரை வதக்க வேண்டும்.
  • பிறகு வேகவைத்த எடுத்து வைத்துள்ள மட்டன் மற்றும் வேக வைத்த நீரை அதனுடன் சேர்த்து கிளறவும்.
  • மிளகு தூள் மற்றும் தேவையான அளவிற்கு உப்பு கொத்தமல்லி இலைகள் சேர்த்து இறக்கினால் மட்டன் குடைமிளகாய் பிரட்டல் சுடச்சுட தயார்.

Nutrition

Calories: 269kcal | Carbohydrates: 15g | Protein: 20g | Fat: 19g