Advertisement
அசைவம்

அடுத்தமுறை ஆட்க்கறி வாங்கினால் உருண்டை கறி குழம்பு இப்படி ட்ரை பன்னி பாருங்க! ஒரு சட்டி குழம்பும் காலியாகும்!

Advertisement

கடலைப் பருப்பில் உருண்டை செய்து குழம்பு வைத்திருப்பீர்கள். இது கறி உருண்டைக் குழம்பு. மிகவும் ருசியானது. மதிய உணவிற்காக ஏதாவது அசைவ குழம்பு வகையை செய்து அதற்கு தொட்டுக்கொள்ள அசைவ வறுவல், பொரியல் எதையாவது செய்யவேண்டும்.உடனடியாக வீட்டில் இருக்கும் பொருளை வைத்தே குழும்பு மற்றும் பதார்த்தம் இவை இரண்டிற்கும் ஒன்று சேர்த்தார் போல் இந்த உருண்டைக் கறி குழம்பை உடனடியாக செய்துவிடலாம். ஒரு சிலருக்கு குழம்பில் போடும் கறி பிடிக்காமல் இருக்களாம். ஆனால் இந்த மசாலா சேர்த்து உருண்டை குழம்பு வைத்தால் . கண்டிப்பாக அனைவர்க்கும் புடிக்கும். .  குழம்பில் சேர்க்கும் உருண்டை உடையாமல் சரியான பதத்தில் வருவதற்கு இங்கு கூறப்பட்டுள்ள குறிப்புகளை சரியாக பின்பற்றி செய்து பாருங்கள்.

கறிக்குழம்பையே மிஞ்சும் சுவையில் ‘ உருண்டைக் கறி  குழம்பு’ செய்வது இவ்வளவு ஈஸியா? இது தெரியாம போச்சே!விதவிதமான குழம்பு வகைகள் செய்தாலும் தினமும் என்ன செய்வது? என்று ஒரு சமயத்தில் யோசிக்க தான் செய்வோம். அந்த சமயத்தில் புதிது புதிதாக எதையாவது செய்ய முனையும் பொழுது, இது போல வித்தியாசமான உருண்டைக் கறி குழம்பு வகைகளை செய்து அசத்தலாம். பருப்பைக் கொண்டு உருண்டை குழம்பு செய்வது போல, மட்டன் உருண்டை பிடித்து செய்யும் இந்த குழம்பு, கறி குழம்பையே மிஞ்சிவிடும் சுவையில் அசத்தலாக இருக்கும். இதை ‘உருண்டைக் கறி குழம்பு ’ என்று கூறுவார்கள். அதை எப்படி நம் கைகளால் சுலபமான முறையில் வைப்பது? என்பதை தெரிந்து கொள்ள தொடர்ந்து இந்த பதிவை நோக்கி பயணிப்போம்.

Advertisement

உருண்டைக் கறி குழம்பு | Mutton Urundai Kulambu In Tamil

Print Recipe
கறிக்குழம்பையே மிஞ்சும் சுவையில் ‘ உருண்டைக்கறி  குழம்பு’ செய்வது இவ்வளவு ஈஸியா? இது தெரியாம போச்சே!விதவிதமானகுழம்பு வகைகள் செய்தாலும் தினமும் என்ன செய்வது? என்று ஒரு சமயத்தில் யோசிக்க தான்செய்வோம். அந்த சமயத்தில் புதிது புதிதாக எதையாவது செய்ய முனையும் பொழுது, இது போலவித்தியாசமான உருண்டைக் கறி குழம்பு வகைகளை செய்து அசத்தலாம். மட்டன் பருப்பைக் கொண்டுஉருண்டை குழம்பு செய்வது போல, மட்டன் உருண்டை பிடித்து செய்யும் இந்த குழம்பு, கறிகுழம்பையே மிஞ்சிவிடும் சுவையில் அசத்தலாக இருக்கும்.
Advertisement
இதை ‘உருண்டைக் கறி குழம்பு’ என்று கூறுவார்கள். அதை எப்படி நம் கைகளால் சுலபமான முறையில் வைப்பது? என்பதை தெரிந்துகொள்ள தொடர்ந்து இந்த பதிவை நோக்கி பயணிப்போம்.
Course Gravy, Kulambu, LUNCH
Cuisine tamilnadu
Keyword mutton kulambu
Prep Time 10 minutes
Cook Time 15 minutes
Total Time 25 minutes
Servings 4
Calories 902

Equipment

  • 1 கடாய்
  • 1 மிக்ஸி

Ingredients

  • 1/2 கிலோ மட்டன் கொந்தியது
  • 1/4 முடி தேங்காய்
  • 3 வெங்காயம்
  • 2 தக்காளி
  • மிளகாய் தூள்
  • தனியா தூள்
  • மஞ்சள் தூள்
  • பட்டை
    Advertisement
  • லவுங்கம்
  • உப்பு
  • கொத்துமல்லி
  • கறிவேப்பிலை
  • உடைத்த கடலை
  • சோம்பு

Instructions

  • க‌றி‌த் து‌ண்டுகளை ந‌ன்கு அலசிமிக்ஸியில் போ‌ட்டு லேசாகஅரைத்து கொள்ள வேண்டும். தே‌ங்காயை ந‌ன்கு அரை‌த்து‌ எடு‌த்து‌க் கொ‌ள்ளவு‌ம்.
  • வெ‌ங்காய‌‌‌‌ம், கொ‌த்தும‌ல்‌லி, க‌றிவே‌ப்‌பிலையை பொடியாக நறு‌க்‌கி‌க் கொ‌ள்ள வேண்‌டு‌ம். இ‌ஞ்‌சி, பூ‌ண்டை ‌விழுதாக அரை‌த்து‌க் கொ‌ள்ளவு‌ம். உடைத்த கடலையை பொடி செ‌ய்து வை‌த்து‌க் கொ‌ள்ளவு‌ம்.
  • ஒரு பா‌த்‌திர‌த்‌தி‌ல் அரை‌த்த க‌றி‌த் து‌ண்டுகளை‌ப் போ‌ட்டுஅதனுட‌ன், வெங்காயம், மிளகாய் தூள், தனியா தூள், மஞ்சள் தூள் (இது எ‌ல்லாமே எடு‌த்து வை‌த்‌திரு‌ப்ப‌தி‌ல் பாதிஅளவு), உடைத்த கடலை தூள், தேவையான அளவு உப்பு, இஞ்சி, பூண்டு ‌விழு‌து, சிறிதளவு கொத்தமல்லி, கறிவேப்பிலை என அனை‌த்தையு‌ம் கலந்து கொ‌ள்ள வே‌ண்டு‌ம்.
  • இ‌ந்த கலவையை சிறிய உருண்டைகளாக செய்து ஆவியில் வேகவைத்து எடுத்து கொள்ளவும்.  குழ‌ம்பு வை‌க்கு‌ம்பா‌த்‌திர‌த்‌தி‌ல் எண்ணெய்விட்டு காய்ந்ததும் அ‌தி‌ல்பட்டை, லவுங்கம், சோம்பு, சேர்த்து பிறகு வெங்காயம் போ‌ட்டு வத‌க்கவு‌ம்.
  • வெ‌ங்காய‌ம் வத‌ங்‌கியதும் இஞ்சி, பூண்டு ‌விழுதையு‌ம், ‌பிறகு தக்காளி சேர்‌த்து வத‌க்க வேண்டும்.பிறகு மிளகாய் தூள், தனியா தூள், மஞ்சள் தூள் (‌மீ‌தி இரு‌ப்பது) சே‌ர்‌த்துவத‌க்கவு‌ம்.
  • ‌பி‌ன்ன‌ர் அரை‌த்து வை‌த்‌திரு‌க்கு‌ம் தேங்காயை சேர்த்துநன்கு வதக்கி, தேவையான அளவு த‌ண்‌ணீ‌ர் ‌விடவு‌ம். கொத்தமல்லி, கறிவேப்பிலை போடவும்.
  • கு‌ழ‌ம்பு நன்கு கொதித்தவுடன் ஆவியில் வேகவைத்த உருண்டைகளை போட்டு அனல் குறைத்து வைக்கவும். 5 நிமிடம் வைத்து பிறகு இறக்கிவிடவும். இது சா‌ப்‌பாட்டு‌க்கு ‌மிகவு‌ம் அருமையாக இரு‌க்கு‌ம். குழ‌ம்பு‌ம் தயா‌ர்,துணை உணவாக க‌றி உரு‌ண்டையு‌ம் தயா‌ர்.க‌றி உரு‌ண்டைகுழ‌ம்‌பி‌ன்வாசனை உ‌ங்களை ‌வி‌ட்டு‌ வை‌‌க்குமா எ‌ன்ன? ‌‌சமை‌த்து ரு‌சி பாரு‌ங்க‌ள்…

Notes

குழம்‌பி‌ல் உரு‌ண்டைகளை‌‌ப் போடு‌ம் போது ‌தீ குறைவாக இரு‌ந்தா‌ல் தா‌ன் உரு‌ண்டைக‌ள் உடையாம‌ல் வரு‌ம்.

Nutrition

Serving: 300g | Calories: 902kcal | Carbohydrates: 56g | Protein: 4.6g | Cholesterol: 7.8mg | Sodium: 1092mg | Potassium: 782mg | Sugar: 3.3g | Calcium: 34mg
Advertisement
Prem Kumar

Recent Posts

இன்றைய ராசிபலன் – 21 மே 2024!

மேஷம் புதிய பிரச்சினைகள் தோன்றி மன அழுத்தத்தை ஏற்படுத்தும். பணம் பற்றாக்குறையால் இன்று வீட்டில் வேற்றுமை காணப்படும். வேலையில் நல்ல…

2 மணி நேரங்கள் ago

மணமணக்கும் ருசியான கேரட் புலாவ் ஈஸியாக பதினைந்தே நிமிடத்தில் இப்படி செய்து பாருங்கள் மிகவும் ருசியாக இருக்கும்!!

புலாவ் உலகம் முழுவதும் பிரபலமடைந்து இருக்கும் ஒரு உணவு வகை. பொதுவாக வெரைட்டி ரைஸ் என்றாலே குழந்தைகள் அதிகம் விரும்பி…

21 மணி நேரங்கள் ago

காலை வேளையில் உடல் சூட்டை குறைக்கும் இந்த வெந்தய களியை ஒரு முறை செய்து கொடுங்கள் பின் அடிக்கடி கேட்டு வாங்கி சாப்பிடுவார்கள்!!!

அன்றாடம் சமையலுக்குப் பயன்படுத்தும் பல உணவு பொருள்கள், நமக்கு மருந்தாகவும் பயன்படக்கூடியவை. அதில் வெந்தயத்திற்கு மிக முக்கிய இடம் உண்டு.…

1 நாள் ago

விரதம் இருப்பதால் கிடைக்கும் நன்மைகள்

விரதம் என்ற சொல்லுக்கு பலவகையான அர்த்தங்கள் உள்ளது என்று சொல்லலாம். நோன்பு உபவாசம் உணவை தவிர்த்தல் என்று பல சொற்களால்…

2 நாட்கள் ago

ஒரு முறை சுவையான இந்த கறிவேப்பிலை மிளகு சிக்கன் செய்து பாருங்கள் இனி இப்படித்தான் செய்வீர்கள்!!

பொதுவாக அசைவம் என்றால் பெரும்பாலானவர்களுக்கு பிடிக்கும், அதுவும் வீக்கென்ட் என்றால் அசைவம் இல்லாமல் இருக்காது, வாரத்தில் ஒரு நாள் சாப்பிட்டே…

2 நாட்கள் ago

மொறு மொறுவென்று பச்சை பயறு அடை தோசை இனி இப்படி செய்து பாருங்கள் இரண்டு தோசை அதிகமாகவே சாப்பிடுவார்கள்!!!

இன்றைய காலகட்டத்தில் சாப்பிடும் உணவுப் பொருட்களில் உடலுக்கு தேவையான ஊட்டச்சத்து குறைவாகவே கிடைக்கிறது. எனவே உணவில் அதிகம் ஊட்டச்சத்துக்கள் நிறைந்த…

2 நாட்கள் ago