கடலைப் பருப்பில் உருண்டை செய்து குழம்பு வைத்திருப்பீர்கள். இது கறி உருண்டைக் குழம்பு. மிகவும் ருசியானது. மதிய உணவிற்காக ஏதாவது அசைவ குழம்பு வகையை செய்து அதற்கு தொட்டுக்கொள்ள அசைவ வறுவல், பொரியல் எதையாவது செய்யவேண்டும்.உடனடியாக வீட்டில் இருக்கும் பொருளை வைத்தே குழும்பு மற்றும் பதார்த்தம் இவை இரண்டிற்கும் ஒன்று சேர்த்தார் போல் இந்த உருண்டைக் கறி குழம்பை உடனடியாக செய்துவிடலாம். ஒரு சிலருக்கு குழம்பில் போடும் கறி பிடிக்காமல் இருக்களாம். ஆனால் இந்த மசாலா சேர்த்து உருண்டை குழம்பு வைத்தால் . கண்டிப்பாக அனைவர்க்கும் புடிக்கும். . குழம்பில் சேர்க்கும் உருண்டை உடையாமல் சரியான பதத்தில் வருவதற்கு இங்கு கூறப்பட்டுள்ள குறிப்புகளை சரியாக பின்பற்றி செய்து பாருங்கள்.
கறிக்குழம்பையே மிஞ்சும் சுவையில் ‘ உருண்டைக் கறி குழம்பு’ செய்வது இவ்வளவு ஈஸியா? இது தெரியாம போச்சே!விதவிதமான குழம்பு வகைகள் செய்தாலும் தினமும் என்ன செய்வது? என்று ஒரு சமயத்தில் யோசிக்க தான் செய்வோம். அந்த சமயத்தில் புதிது புதிதாக எதையாவது செய்ய முனையும் பொழுது, இது போல வித்தியாசமான உருண்டைக் கறி குழம்பு வகைகளை செய்து அசத்தலாம். பருப்பைக் கொண்டு உருண்டை குழம்பு செய்வது போல, மட்டன் உருண்டை பிடித்து செய்யும் இந்த குழம்பு, கறி குழம்பையே மிஞ்சிவிடும் சுவையில் அசத்தலாக இருக்கும். இதை ‘உருண்டைக் கறி குழம்பு ’ என்று கூறுவார்கள். அதை எப்படி நம் கைகளால் சுலபமான முறையில் வைப்பது? என்பதை தெரிந்து கொள்ள தொடர்ந்து இந்த பதிவை நோக்கி பயணிப்போம்.
உருண்டைக் கறி குழம்பு | Mutton Urundai Kulambu In Tamil
Equipment
- 1 கடாய்
- 1 மிக்ஸி
தேவையான பொருட்கள்
- 1/2 கிலோ மட்டன் கொந்தியது
- 1/4 முடி தேங்காய்
- 3 வெங்காயம்
- 2 தக்காளி
- மிளகாய் தூள்
- தனியா தூள்
- மஞ்சள் தூள்
- பட்டை
- லவுங்கம்
- உப்பு
- கொத்துமல்லி
- கறிவேப்பிலை
- உடைத்த கடலை
- சோம்பு
செய்முறை
- கறித் துண்டுகளை நன்கு அலசிமிக்ஸியில் போட்டு லேசாகஅரைத்து கொள்ள வேண்டும். தேங்காயை நன்கு அரைத்து எடுத்துக் கொள்ளவும்.
- வெங்காயம், கொத்துமல்லி, கறிவேப்பிலையை பொடியாக நறுக்கிக் கொள்ள வேண்டும். இஞ்சி, பூண்டை விழுதாக அரைத்துக் கொள்ளவும். உடைத்த கடலையை பொடி செய்து வைத்துக் கொள்ளவும்.
- ஒரு பாத்திரத்தில் அரைத்த கறித் துண்டுகளைப் போட்டுஅதனுடன், வெங்காயம், மிளகாய் தூள், தனியா தூள், மஞ்சள் தூள் (இது எல்லாமே எடுத்து வைத்திருப்பதில் பாதிஅளவு), உடைத்த கடலை தூள், தேவையான அளவு உப்பு, இஞ்சி, பூண்டு விழுது, சிறிதளவு கொத்தமல்லி, கறிவேப்பிலை என அனைத்தையும் கலந்து கொள்ள வேண்டும்.
- இந்த கலவையை சிறிய உருண்டைகளாக செய்து ஆவியில் வேகவைத்து எடுத்து கொள்ளவும். குழம்பு வைக்கும்பாத்திரத்தில் எண்ணெய்விட்டு காய்ந்ததும் அதில்பட்டை, லவுங்கம், சோம்பு, சேர்த்து பிறகு வெங்காயம் போட்டு வதக்கவும்.
- வெங்காயம் வதங்கியதும் இஞ்சி, பூண்டு விழுதையும், பிறகு தக்காளி சேர்த்து வதக்க வேண்டும்.பிறகு மிளகாய் தூள், தனியா தூள், மஞ்சள் தூள் (மீதி இருப்பது) சேர்த்துவதக்கவும்.
- பின்னர் அரைத்து வைத்திருக்கும் தேங்காயை சேர்த்துநன்கு வதக்கி, தேவையான அளவு தண்ணீர் விடவும். கொத்தமல்லி, கறிவேப்பிலை போடவும்.
- குழம்பு நன்கு கொதித்தவுடன் ஆவியில் வேகவைத்த உருண்டைகளை போட்டு அனல் குறைத்து வைக்கவும். 5 நிமிடம் வைத்து பிறகு இறக்கிவிடவும். இது சாப்பாட்டுக்கு மிகவும் அருமையாக இருக்கும். குழம்பும் தயார்,துணை உணவாக கறி உருண்டையும் தயார்.கறி உருண்டைகுழம்பின்வாசனை உங்களை விட்டு வைக்குமா என்ன? சமைத்து ருசி பாருங்கள்…