தீபாவளி நேரத்தில் உருவாகும் நவபஞ்சம யோகத்தால் அதிர்ஷ்டம் பெற போகும் 3 ராசிக்காரர்கள் இவர்கள் தான்!

ஜோதிட சாஸ்திரப்படி, ஒவ்வொரு கிரகமும் குறிப்பிட்ட காலத்திற்குப் பிறகு தனது ராசியை மாற்றிக் கொள்கிறது. இந்த ராசி மாற்றம் அனைத்து ராசிக்காரர்களையும் பாதிக்கும். ராசி மாற்றம் சிலருக்கு சுபமாகவும், சிலருக்கு அசுபமாகவும் இருக்கும். சமீபத்தில் கிரகங்களின் ராஜாவான சூரியன் அக்டோபர் 17ம் த

By ·

ஜோதிட சாஸ்திரப்படி, ஒவ்வொரு கிரகமும் குறிப்பிட்ட காலத்திற்குப் பிறகு தனது ராசியை மாற்றிக் கொள்கிறது. இந்த ராசி மாற்றம் அனைத்து ராசிக்காரர்களையும் பாதிக்கும். ராசி மாற்றம் சிலருக்கு சுபமாகவும், சிலருக்கு அசுபமாகவும் இருக்கும். சமீபத்தில் கிரகங்களின் ராஜாவான சூரியன் அக்டோபர் 17ம் தேதி காலை 7.27 மணிக்கு துலாம் ராசியில் பிரவேசித்துள்ளார். இதில் கவனிக்க வேண்டிய விஷயம் என்னவென்றால், தீபாவளி நெருங்கும் நேரத்தில் இந்த நவபஞ்சம் யோகம் உருவாகியிருக்கிறது. இதனால் மேஷம், துலாம், ரிஷபம் ராசிக்காரர்கள் இதுவரை அனுபவித்து வந்த பிரச்சனைகளில் இருந்து முழுமையாக நிவாரணம் பெறப்போகிறார்கள்.

ரிஷபம்

பணிபுரியும் ரிஷபம் ராசிக்காரர்களுக்கு சம்பள உயர்வு, பதவி உயர்வும் கூடும். பொருளாதார நிலை முன்பை விட சிறப்பாக இருக்கும். முதலீடு செய்வதற்கும் நல்ல நேரம். புதிய வருமான ஆதாரங்கள் உருவாகி பொருளாதார நிலை மேம்படும். திருமண வாழ்வில் இருந்த பிரச்சனைகள் தீரும். பணியிடத்தில் மேலதிகாரியின் பாராட்டினை பெறுவீர்கள். குடும்பம் மகிழ்ச்சியாக இருக்கும். உறவினர்கள் மூலம், ஆதாயம் இருக்கும். கூட்டுத் தொழில் முழு பலனை அடைவீர்கள்.

துலாம்

துலாம் ராசிக்காரர்களுக்கு நல்ல நாட்கள் தொடங்கும். நீண்ட நாட்களாக நிலுவையில் இருந்த வேலையில் வெற்றி கிடைக்கும். நிதி பிரச்சனைகளில் இருந்து விடுதலை கிடைக்கும். நிதி ஆதாயத்திற்கான வாய்ப்புகள் இருக்கும். ஊதிய உயர்வு பதவி உயர்வு, கிடைக்கும் வாய்ப்பு உள்ளது. குடும்பத்தில் இணக்கமான சூழ்நிலையும் மகிழ்ச்சியும் நிலவும். சக ஊழியர்களின் ஆதரவால், திட்டமிட்டபடி பணியை முடித்து பாராட்டினை பெறுவீர்கள். புதிய வீடு, வாகனம் வாங்கும் வாய்ப்பு கிடைக்கும்.

மேஷம்

மேஷ ராசிக்காரர்கள் நவபஞ்சம் யோகத்தால் அனைத்து துறைகளிலும் வெற்றி பெறுவார்கள். உத்தியோகத்தில் புதிய வாய்ப்புகளைப் பெறுவீர்கள். நீங்கள் உங்களின் கடின உழைப்பின் பலனைப் பெறுவீர்கள். இது நாள் வரை சந்தித்து வந்த பிரச்சினைகள் எல்லாம் முடிவுக்கு வந்து, நிம்மதி பிறக்கும். வேலையில் தொழிலில் வெற்றியை காண்பீர்கள். உங்களின் வேலைகளை முடிப்பதில்லை நம்பிக்கையும், தைரியமும் உங்களை சிறப்பாக வழி நடத்தும்.

இதனையும் படியுங்கள் : சுக்கிர பகவானின் நட்சத்திர பெயர்ச்சியால் அதிர்ஷ்டத்தை பெறப்போகும் ராசிகள்

Recipes AMP · விரைவு பார்வை
முழுக் கட்டுரை