சுக்கிர பகவான் ஒரு ராசியில் இருந்து மற்றொரு ராசிக்கு இடம்பெயர்தல் மாதம் ஒருமுறை நடைபெறும் அடிக்கடி அவர் ராசியையும் நட்சத்திரத்தையும் மாற்றிக் கொண்டே இருப்பார். மனித வாழ்க்கையில் இன்பம் பாசம் காதல் அன்பு என அனைத்தையும் கொடுக்கக் கூடியவர் தான் சுக்கிர பகவான். சுக்கிர பகவானுக்கு உரிய நாளானது வெள்ளிக்கிழமை தான் சுக்கிர பகவான் என்றாலே பிரகாசம் என்று அர்த்தம். சுக்கிர பகவானுடைய அருளை பெற்றவர்கள் ஈர்க்கும் தோற்றத்துடன் இருப்பார்கள். சுக்கிர பகவான் விசாக நட்சத்திரத்தில் இருந்து அனுஷம் நட்சத்திரத்திற்கு மாறியதால் ஒரு சிலர் ஆசைகள் அதிர்ஷ்டத்தை பெற போகிறார்கள் அந்த ராசிக்காரர்களைப் பற்றி இந்த பதிவில் பார்க்கலாம்
மேஷ ராசி

மேஷ ராசிக்காரர்களுக்கு அனுஷ நட்சத்திரத்தில் சுக்கிர பகவான் இருப்பதால் புகழ் பிரபலம் அனைத்தும் கிடைக்கும் வாழ்க்கையில் நிம்மதி மகிழ்ச்சி என அனைத்துமே கிடைக்கும்
மிதுன ராசி

மிதுன ராசிக்காரர்களுக்கு அனுஷத்தில் சுக்கிர பகவான் சஞ்சரிப்பதால் இந்த காலகட்டம் நிம்மதியையும் மகிழ்ச்சியையும் கொடுக்கும் மேலும் ஆக்கபூர்வமான காலமாகவும் திகழும் எதிர்காலத்திற்கு தேவையான திட்டங்களை இப்பொழுதே தீட்டி அதற்கான செயல்பாடுகளை தொடங்குவீர்கள்
சிம்ம ராசி

சிம்ம ராசிக்காரர்களுக்கு அனுஷத்தில் சுக்கிர பகவான் சஞ்சரிக்க கூடிய இந்த காலமானது தங்கத்தையும் வெள்ளியையும் அள்ளிக் கொடுக்கும். சமூகத்தில் மரியாதை அதிகரித்து மனதில் கூடிய அனைத்து கவலைகளும் தீர்ந்து போகும்
துலாம் ராசி

வாழ்க்கையில் சுக்கிர பகவான் துலாம் ராசிக்காரர்களுக்கு பலவிதமான மகிழ்ச்சியான செய்திகளை கொண்டு வந்து சேர்ப்பார் இந்த காலகட்டம் மறக்க முடியாத பல நல்ல அனுபவங்களை துலாம் ராசிக்கு கொடுக்கும்
தனுசு ராசி

தனுசு ராசிக்காரர்களுக்கு விரும்பிய அனைத்துமே இந்த காலகட்டத்தில் கிடைக்கும் உணவு உடை என எது ஆசைப்பட்டாலும் அனைத்துமே உங்களுக்கு கிடைக்கும்
கும்ப ராசி

சுக்கிர பகவான் சஞ்சரிக்க கூடிய இந்த காலமானது கும்ப ராசிக்காரர்களுக்கு ஆசைப்பட்ட அனைத்து விஷயங்களையும் கொடுக்கும். அனைத்து விஷயங்களையும் சமாளிக்கும் தெம்பை கொடுக்கும். அதிர்ஷ்டத்தை மட்டுமே கொடுக்கக்கூடிய காலம் இது


