வாழ்க்கையில் உள்ள வேதனைகளை தீர்க்கக் கூடிய வேப்பிலை தீபம்!!

வேப்பிலை என்பது மருந்திற்காக மட்டுமில்லாமல் அது தெய்வமாகவும் பார்க்கப்படுகிறது இந்த தெய்வமாக பார்க்கப்படும் வேப்பிலையை வைத்து நாம் வேப்பிலை தீபத்தை ஏற்றுவது நடைமுறையான ஒன்று ஆனால் இப்பொழுது தான் இதனை யாரும் ஏற்றுவது கிடையாது. இந்த வேப்பிலை தீபத்தை நாம் ஏற்றி வந்தால் நம் வீட்டில்

By ·

வேப்பிலை என்பது மருந்திற்காக மட்டுமில்லாமல் அது தெய்வமாகவும் பார்க்கப்படுகிறது இந்த தெய்வமாக பார்க்கப்படும் வேப்பிலையை வைத்து நாம் வேப்பிலை தீபத்தை ஏற்றுவது நடைமுறையான ஒன்று ஆனால் இப்பொழுது தான் இதனை யாரும் ஏற்றுவது கிடையாது. இந்த வேப்பிலை தீபத்தை நாம் ஏற்றி வந்தால் நம் வீட்டில் உள்ள அனைவரும் நோய் நொடி இல்லாமல் ஆரோக்கியத்துடன் வாழ்வார்கள் சிறப்பு வாய்ந்த இந்த தீபத்தை எப்படி ஏற்ற வேண்டும் என்பதைப் பற்றி இந்த பதிவில் பார்க்கலாம்.

வேப்பிலை மரம்

வீட்டிற்கு ஒரு வேப்பிலை மரம் இருப்பது மிகவும் சிறப்பு வாய்ந்தது வேப்பிலை மரம் நிழலுக்காகவும் மருந்திற்காகவும் தெய்வமாகவும் பார்க்கப்படுகிறது ஆனால் இப்போதெல்லாம் வீடுகளில் மரம் செடி கொடி என்பதே கிடையாது மரங்களின் எண்ணிக்கையும் குறைந்து கொண்டே வருகிறது. அந்த வகையில் வேப்பிலை கிடைத்தால் வேப்பிலையை வைத்து இந்த வேப்பிலை தீபத்தை தலைவாசலில் ஏற்றினால் மிகவும் நல்லது

வேப்பிலை தீபம் ஏற்றும் முறை

தலைவாசலை சுத்தமாக வைத்துக் கொண்டால் வீட்டிற்குள் குலதெய்வம் பாசம் செய்வது ஐதீகம் அதனால் தினமும் மஞ்சளும் குங்குமமும் வைத்து விளக்கேற்றி வைத்தால் குலதெய்வம் வாசம் செய்யும். தலைவாசலை சுத்தம் செய்த பின்பு மஞ்சள் பொடியை கையில் எடுத்து அதனை வீட்டின் இரண்டு பக்கங்களிலும் சங்கடங்களை தீர்க்கக்கூடிய சிறிய சதுரத்தை வரைந்து கொள்ள வேண்டும்.
பிறகு ஒரு வேப்பிலை கொத்தை வைத்து அதன் நுனிப்பகுதி கிழக்கு அல்லது வடக்கு திசை நோக்கி இருக்கும்படி வைத்துக் கொள்ள வேண்டும். பிறகு ஒரு சிறிய மண் அகல் விளக்கை வைத்து மஞ்சள் குங்குமம் வைத்து அதில் நல்லெண்ணெய் ஊற்றி மஞ்சள் திரி போட்டு தீபம் ஏற்றி வந்தால் வீட்டில் இருக்கக்கூடிய பிரச்சனைகளும் வேதனைகளும் தீர்ந்துவிடும்

வேப்பிலை தீபத்தால் ஏற்படும் நன்மைகள்

இந்த வேப்பிலை தீபத்தை தினமும் மாலையில் வீட்டின் தலை வாசலில் ஏற்றி வைத்தால் குடும்பத்தில் உள்ள அனைவருக்கும் நோய் நொடி அண்டவே அண்டாது. குலதெய்வம் வீட்டிற்குள் குடிக்கிறோம் குடும்பம் சுபிட்ச நிலைக்கு உயரும். பொருளாதார ரீதியான சிக்கல்களும் சொந்த பந்தங்களுக்குள் இருக்கும் பிரச்சினைகளும் தீர்ந்து ஒற்றுமையாக வாழலாம். மேலும் வேப்பிலை மரம் வீட்டில் இருந்தால் அதற்கு மஞ்சள் குங்குமம் வைத்து தினமும் தீபம் ஏற்றி வைத்தால் கண் திருஷ்டிகள் கெட்ட சக்திகள் எதுவுமே நெருங்காது. உடல் வேதனைக்காகவும் மன வேதனைக்காகவும் இது வேப்பிலை தீபத்தை தினமும் தவறாமல் ஏற்றி வைத்தால் நல்லதே நடக்கும்.

இதனையும் படியுங்கள் : வாழ்க்கையில் நெருக்கடியான சூழல் வந்தால் அப்போது ஏற்ற வேண்டிய தீபம்!

Recipes AMP · விரைவு பார்வை
முழுக் கட்டுரை