வாழ்க்கை என்பது கஷ்டங்களும் சந்தோஷங்களும் நிறைந்தது தான் அனைத்து சமயங்களிலும் நமக்கு கஷ்டமும் இருக்கப்போவதில்லை சந்தோஷமாக இருக்கப்போவதில்லை இரண்டுமே மாறி மாறி தான் வரும் அப்படி வாழ்க்கையில் நாம் ஒரு துன்பமான கஷ்டமான நிலைக்கு தள்ளப்படும் போது அதிலிருந்து வெளியேறி வர செய்ய வேண்டிய ஒரு அருமையான பரிகாரத்தை பற்றி பார்க்கலாம்
இறை நம்பிக்கை

நம் மனதிற்கு கஷ்டமாக இருக்கின்ற சில நேரங்களில் நாம் கடவுளை தான் நாடுவோம் நெருக்கடியான சூழ்நிலைகள் வந்தால் கடவுளுடைய பாதத்தில் சரணாகதி அடைந்து முழுவதுமாக தெய்வத்தையே நம்பி நம்முடைய கஷ்டங்களை கூறுவோம் என்னதான் கடவுள் நமக்கு கஷ்டங்களை கொடுத்தாலும் நம்மை முழுவதுமாக கைவிடமாட்டார் அதனால் முழுமையாக அவரை நம்பி நம்முடைய கஷ்டங்களை கூறும் போது நமக்கு நல்லது மட்டுமே நடக்கும்.
ஏற்ற வேண்டிய விளக்கு
நெருக்கடிக்கான சூழ்நிலைகள் வரும்போது அந்த நேரத்தில் உங்கள் மனதிற்கு பிடித்தமான ஏதாவது ஒரு கோவிலுக்கு ஏதாவது ஒரு கிழமையில் சென்று எந்த நேரத்தில் வேண்டுமானாலும் இந்த குறிப்பிட்ட பரிகாரத்தை செய்யலாம். அதற்கு 108 மண் அகல் விளக்குகளில் நெய் தீபம் ஏற்றி வழிபட வேண்டும் இந்த 108 நெய் தீபத்திற்கு மிகப்பெரிய சக்தி இருக்கிறது கஷ்டம் நிறைந்த நேரத்தில் இந்த தீபத்தை ஏற்றி இறைவனை முழுவதுமாக நம்பி வழிபட்டால் நிச்சயமாக கைகூடும். கஷ்டமான ஒரு சூழ்நிலையில் இருந்து எப்படி வெளியேறப் போகிறோம் என்று நினைத்துக் கொண்டே இருப்பதால் ஒன்றும் பலனில்லை இந்த 108 நெய் தீபத்தை ஏற்றி கந்த சஷ்டி கவசத்தையும் கோளறு பதிகத்தையும் படித்துவிட்டு நவகிரக தோஷங்களால் பிடிக்கப்பட்டவர்கள் நாள்தோறும் கோளறு பதிகத்தை படித்து வந்தால் நவகிரக தோஷங்களில் இருந்தும் விடுபட்டு துன்பங்களிலிருந்தும் மீண்டு வரலாம்
கந்த சஷ்டி கவசம்
நீங்கள் நெருக்கடியான சூழலில் இருக்கும் போது உங்களுக்கு ஒரு விதமான பயம் ஏற்படும். அந்த பயத்திலிருந்து உங்களை போக்கிக் கொள்ள கந்த சஷ்டி கவசத்தை படித்தால் உங்களுக்கு பயம் நீங்கி ஒரு புது தெம்பு கிடைக்கும் எதை வேண்டுமானாலும் எதிர்கொள்ளலாம் என்கின்ற தைரியமும் கிடைக்கும் 108 அகல்விளக்குகளை ஏற்றிவிட்டு இந்த இரண்டு பாடல்களையும் பாடி வந்தால் உங்களுக்கு பிரச்சனைகள் அனைத்தும் முடிவுக்கு வந்து மகிழ்ச்சியான சூழல் நிச்சயமாக ஏற்படும் எனவே முழு மனதோடு முழு நம்பிக்கையோடும் இதை செய்து பாருங்கள்.
இதனையும் படியுங்கள் : தீர்க்க முடியாத நோய்களையும் தீர்க்கும் ஆஞ்சநேயர் வழிபாடு





