இன்றைய காலகட்டத்தில் மிகவும் கடினமாக உழைத்த சம்பாதிக்கக்கூடிய பணத்தை மருத்துவமனைக்கு தான் அதிகமாக செலவு செய்கின்றோம். மருந்து மாத்திரைகள் வாங்கி தினமும் சாப்பிட்டு வருகிறோம். அந்த அளவிற்கு இன்றைய சூழலுக்கு நிறைய பேருக்கு நோய் நொடிகள் உள்ளது. தொடர்ந்து உடல்நிலை சரியில்லாமல் போகிறது ஆரோக்கியம் சுத்தமாக இல்லை என்று நினைப்பவர்கள் ஆஞ்சநேயருக்கு முன்பாக இந்த ஒரு தீபத்தை மட்டும் ஏற்றி பாருங்கள் அனைத்து விதமான நோய்களும் தீர்ந்து மருத்துவமனைக்கு செல்ல தேவை இல்லை என்ற நிலைமை வரும்.

தீராத கஷ்டங்களை தீர்க்கும் ஆஞ்சநேயர்
வீட்டில் பலவிதமான பிரச்சனைகள் கஷ்டங்கள் தீராமல் இருந்து கொண்டே இருக்கின்றது என்றால் ஆஞ்சநேயரிடம் சென்று முறையிட்டு வழிபட்டு பாருங்கள் ஆஞ்சநேயரை போலவே அனைவரும் பலசாலியாக மாறிவிடலாம். ஆஞ்சநேயர் கோவிலில் ஆஞ்சநேயர் மூலவராக இருக்கக்கூடிய கோவிலில் வெள்ளிக்கிழமையில் இந்த தீப வழிபாட்டை செய்ய வேண்டும். அப்படி நாம் செய்து வர இந்த வழிபாடு அதிக பலன்களை தரும். இந்த பரிகாரத்திற்கு நமக்கு கடுகு எண்ணெய் வெற்றிலை பஞ்சு திரி கற்கண்டு போன்றவை தேவைப்படும்.
பரிகாரம் செய்ய வேண்டிய முறை
ஆஞ்சநேயர் கோவிலுக்கு சென்று ஒரு வெற்றிலையை கீழே வைத்து அதன் மேல் அகல் விளக்கு வைத்து கடுகு எண்ணெயை ஊற்றி பஞ்சு திரி போட்டு தீபம் ஏற்றி வழிபடலாம் அந்த வெற்றிலையில் இரண்டு கற்கண்டு அல்லது சர்க்கரை அல்லது வெல்லம் ஏதாவது ஒன்றை நெய்வேதியமாக வைத்து ஆஞ்சநேயர் சன்னதி முன்பாக உங்கள் வீட்டில் இருக்கக்கூடியவர்களுக்கு ஆரோக்கியத்தை தர வேண்டும் எந்த நோயும் வரக்கூடாது என்று மனதார வழிபாடு செய்ய வேண்டும். இந்த விளக்கை காலை மாலை என எந்த வேலையில் வேண்டுமானாலும் ஏற்றலாம் ஆனால் முதல் நாள் எந்த நேரத்தில் விளக்கு ஏற்றுகிறீர்களோ அதே நேரத்தில் தான் 48 நாட்களும் தொடர்ந்து ஆஞ்சநேயருக்கு இந்த விளக்கை ஏற்ற வேண்டும்.
யார் இந்த விளக்கை ஏற்ற வேண்டும்
இந்த வழிபாட்டை செய்து வந்தால் 48 நாட்களுக்குள் உங்கள் வீட்டில் யாருக்காவது நோய் நொடிகள் தீவிரமாக தீவிராமல் இருந்தால் நிச்சயமாக தீர்ந்து விடும் ஆரோக்கியத்தில் படிப்படியாக முன்னேற்றம் இருக்கும். இந்த விளக்கை யாருக்கு உடல்நிலை சரியில்லையோ அவர்கள் கையால் மட்டுமே ஏற்ற வேண்டும் என்ற அவசியம் இல்லை அவர்களால் முடியவில்லை என்றால் கூட அவருக்கு பதிலாக அவர்களுடைய ரத்த சொந்தம் யார் வேண்டுமானாலும் இந்த விளக்கை ஏற்றலாம். கணவனுக்காக மனைவியும் மனைவிக்காக கணவனும் இந்த விளக்கை தொடர்ந்து 48 நாட்கள் ஏற்றி வரலாம் நம்பிக்கையோடு இந்த விளக்கை ஏற்றி வர வீட்டில் மருத்துவ செலவு குறையும். ஆஞ்சநேயரின் பாதங்களை நம்பிக்கையோடு பற்றிக்கொண்டு இந்த வழிபாட்டை செய்து வர குடும்பத்தில் படிப்படியாக ஆரோக்கியம் பெருகி மகிழ்ச்சியும் நிறையும். முழு நம்பிக்கையோடு இந்த தீபத்தை ஏற்றி வழிபட்டு தீராத நோய் நொடிகளை தீர்த்துக் கொள்ளலாம்.
இதனையும் படியுங்கள் : தீராத துன்பங்கள் அனைத்தும் தீர்ந்து போவதற்கு ஆஞ்சநேயரை வழிபட வேண்டிய முறை




