ராம நாமத்தை மனதார உச்சரித்து முழுமனதோடு ஆஞ்சநேயரே வேண்டுபவர்களை அவர் ஒருபோதும் கைவிடுவதில்லை. ராமருடைய தீவிர பக்தரான ஆஞ்சநேயர் தைரியம் ஆரோக்கியம் ஆகியவற்றை காத்துக் கொள்ளக் கூடியவர். அப்படிப்பட்ட ஆஞ்சநேயரை நாம் வழிபட்டு வந்தால் நமக்கு இருக்கும் அனைத்து பிரச்சனைகளும் தீர்ந்து வாழ்வில் மிகவும் மகிழ்ச்சியுடன் வாழ முடியும். தீமைகள் அவருடைய பக்தர்களை நெருங்காமல் அவர் மிகவும் பாதுகாப்பாக பக்தர்களை பார்த்துக் கொள்வார்.
தடைகளை நீக்கும் ஆஞ்சநேயர்

ஒரு சிலருக்கு எந்த காரியத்தை தொட்டாலும் அதில் பல தடைகள் வந்து கொண்டே இருக்கும். அப்படி காரியத்தடைகள் தொடர்ந்து வந்து கொண்டே இருந்தால் ஆஞ்சநேயரை தொடர்ந்து வழிபட்டு வர காரிய தடைகள் அனைத்தும் நீங்கிவிடும். நீண்ட வருடங்களாக நமக்கு இருக்கின்ற பிரச்சினைகள் நோய்கள் துன்பங்கள் அனைத்தும் தீர ஆஞ்சநேயரை வழிபடலாம் நம்முடைய வாழ்க்கையில் பொருளாதார ரீதியாக முன்னேற முடியவில்லை என்று நினைத்தால் கூட வியாபாரத்திலும் வேலை வாய்ப்பிலும் முன்னேறுவதற்கு ஆஞ்சநேயரை வழிபட்டு வரலாம்.
தோஷங்கள் விலக ஆஞ்சநேயர் வழிபாடு
ஆஞ்சநேயரை நாம் தொடர்ந்து வழிபட்டு வந்தால் அவருடைய அருள் மட்டும் இல்லாமல் ராமருடைய அருளும் நமக்கு முழுமையாக கிடைக்கும். ஆஞ்சநேயரையும் வழிபட்டு வர நம் வாழ்க்கைகளில் நமக்கு நடக்கவே நடக்காது என்று நினைத்த காரியங்கள் கூட வெற்றி பெறும். ஜாதகத்தில் நமக்கு ஏதாவது தோஷங்கள் இருந்தாலும் சனி பகவானால் ஏதேனும் தோஷங்கள் இருந்தாலும் ஆஞ்சநேயரை வழிபட்டு வர அனைத்தும் நீங்கும்.
வியாழக்கிழமை ஆஞ்சநேயர் வழிபாடு
பொதுவாக ஆஞ்சநேயரை சனிக்கிழமைகளில் வழிபட்டால் மிகவும் சிறந்தது என்று கூறுவார்கள் ஆனால் அதே போல் ஆஞ்சநேயரை வியாழக்கிழமைகளிலும் மூல நட்சத்திரத்திலும் வழிபட்டு வருவது மிகவும் சிறந்தது வாழ்க்கையில் உள்ள பிரச்சனைகளை தீர்ப்பதற்கும் சுபகாரிய தடைகள் நீங்குவதற்கும் ஆஞ்சநேயருக்கு வெற்றிலை மாலை சாற்றி வியாழக்கிழமைகளில் வழிபடுவது மிகவும் சிறந்தது. நீங்கள் வழிபடும் ஆஞ்சநேயர் சிலையின் அளவிற்கு ஏற்றவாறு 11 ,21, 27 ,54 ,108 போன்ற எண்ணிக்கைகளில் வெற்றிலையை எடுத்து அந்த வெற்றிலையில் மஞ்சள் குங்குமம் வைத்து மஞ்சள் நிற நூலால் கட்டி மாலையாக செய்து ஆஞ்சநேயருக்கு வியாழக்கிழமை தோறும் தொடர்ந்து ஒன்பது வாரங்கள் சாற்றி வர நாம் நினைத்த காரியங்கள் நிறைவேறும்.
வெற்றிலை வழிபாடு

வெற்றிலை வெற்றியை தரக்கூடியது எனவே வியாழக்கிழமைகளில் வெற்றிலை மாலையை அனுமனுக்கு சாற்றி நம்முடைய வேண்டுதல்களை அவரிடம் கூறி வழிபட்டு வந்தால் நாம் நினைத்த காரியங்கள் அனைத்தும் நிறைவேறியதில் வெற்றி கிடைக்கும். மேலும் நமக்கு நேரம் கிடைக்கும் பொழுதெல்லாம் ராம நாமத்தை சொல்லி ஆஞ்சநேயருடைய அருளுடன் சேர்த்து ராமருடைய அருளையும் பெறலாம் நாம் ராம நாமம் சொன்னாலே போதும் ஆஞ்சநேயர் ஓடோடி வந்து விடுவார் எனவே உங்கள் வாழ்க்கையில் உள்ள துன்பங்கள் அனைத்தும் நீங்கி வாழ்வில் முன்னேற்றமும் மகிழ்ச்சியும் வளர்ச்சியும் கிடைக்கும். எனவே உண்மையான பக்தியுடன் ஆஞ்சநேயரை வழிபட்டு வந்தால் அவருடைய அருளை நாம் சுலபமாக பெற முடியும்.
இதனையும் படியுங்கள் : இந்த வேரை மட்டும் பீரோ மற்றும் கல்லாப் பெட்டியில் வையுங்கள் பண மழை பொழிய தொடங்கி விடும்!





