நம் அணைவரும் சம்பளம் வாங்கியவுடன் பணம் எந்த பக்கம் போகிறது என்று தெரியாமல் வருடம் முழுவதும் உழைத்து கொண்டே இருக்கின்றோம். இப்படி உழைத்தும் கூட வீட்டில் பணம் தாங்காமல் இருந்தால் ரொம்பவே கஷ்டப்படுவோம். இதற்கு என்ன தான் காரணம் என்று யோசித்து கொண்டே இருப்போம். கோவில் மற்றும் ஜோதிடரை நாடி செல்வோம். ஆனால் ஒரு பலனும் இருக்காது.
ஆனால் நாம் நிறைய பணக்காரர்களை பார்த்திருப்போம், அவர்கள் என்ன தொழில் செய்கிறார்கள், எந்த வேலை செய்ததால், அவர்களுக்கு இப்படி, எப்படி கோடி கோடியாக பணம் வருகிறது என்ற கேள்விக்கு பலருக்கும் விடை தெரியாது. பணக்காரர்கள் எப்போதும் அவர்களுக்கு எந்த வழியில் பணம் வருகிறது என்பதை வெளியில் தெரியாமல் பார்த்து கொள்வார்கள். நீங்களும் பணக்காரர்கள் ஆவதற்கு அருகம் புல் வைத்து ஒரு பரிகாரம் இருக்கிறது இந்த பரிகாரத்தை செய்தால் உங்களுக்கும் பணம் பல வழிகளில் வந்து பணப்பெட்டியை நிரப்பும். அது என்ன பரிகாரம் என்பதைப் பற்றி இந்த ஆன்மிகப் பதிவில் பார்க்கலாம்.
அருகம்புல்
அருகம்புல்லை பிள்ளையார் புல் என்று அழைப்பார்கள். அருகம்புல் வழிபாடு என்பது அல்லல்கள் தீர்க்கும் வழிபாடு. அருகம்புல்லுக்கு ஈடானது எதுவும் இல்லை. தன்னுடைய செல்வங்களுக்கு மேலானது அருகம்புல் என்று அந்த குபேரரே கூறியுள்ளார். நமக்கு தீராத கடன் பிரச்சினை ஏற்படுகிறது என்றால் ஏதோ ஒரு கெட்ட நேரம் நம்மை ஆட்டிப்படைத்துக் கொண்டிருக்கிறது என்பதுதான் அர்த்தம். அந்த விநாயகப் பெருமானுக்கு உகந்த அருகம் புல்லை வைத்து வழிபடுவதன் மூலம் தீர்க்க முடியாத கடன் பிரச்சனையும் தீர்ந்து விடும் என்பது முன்னோர்கள் கூற்று.
பரிகாரம் செய்யும் முறை
ஏழ்மை நிலை நீங்கி பணவரவு அதிகரிக்க முதலில் நம்முடைய வீட்டில் குபேரரை தங்க வைக்க வேண்டும். அப்படி குபேரரை நமது வீட்டில் தங்க வைக்க வேண்டும் என்றால் நமக்கு தேவையான ஒரே பொருள் அருகம்புல் மட்டும் தான். இந்த அருகம்புலானது எல்லா இடங்களிலும் காண முடிகிற ஒன்றுதான். இதனை நாம் வேருடன் பிடுங்கி வீட்டிற்கு கொண்டு வர வேண்டும். ஆனால் இதனை அப்படியே நம் வீட்டிற்கு பிடுங்கிக் கொண்டு வரக்கூடாது. இந்த வேரை பிடுங்குவதற்கு முன் சிறிதளவு மஞ்சள் நீரை அருகம்புல்லை சுற்றி தெளித்து விட்டு பிறகு தான் நாம் இதனை பிடுங்க வேண்டும். இல்லையென்றால் மூலிகை சாபம் நமக்கு ஏற்பட்டுவிடும். இது அருகம்புலுக்கு மட்டுமல்ல பொதுவாக நாம் எந்த மூலிகையோ அல்லது தாவரத்தையோ பிடுங்குவதாக இருந்தாலும் மஞ்சள் நீரை தெளித்து விட்ட பிறகுதான் பிடுங்க வேண்டும்.
மந்திரம்
இந்த அருகம்புல்லை பிடுங்கியவுடன் “நசி நசி மூலிகை சாபம் நசி” என்ற மந்திரத்தை சொல்ல வேண்டும். இந்த மந்திரத்தை சொல்வதற்கு முன் நான் இந்த வேரை ஒரு நல்ல காரணத்திற்காக தான் எடுக்கிறேன் என்று மூன்று முறை சொல்ல வேண்டும். அருகம்புல்லை பிடுங்கி வீட்டிற்கு கொண்டு வந்தவுடன் அதனை மஞ்சள் நீரில் நன்றாக கழுவி விட்டு, நிழலில் உலர்த்தி விடுங்கள். இந்த அருகம்புல் நன்கு காய்ந்தவுடன் அதனை எடுத்து ஒரு பிளாஸ்டிக் டப்பாவில் போட்டு விடுங்கள். அருகம்புலுடன் ஒரு துண்டு பச்சை கற்பூரமும் வைத்து உங்கள் பூஜை அறையில் வைத்து விடுங்கள். பின் 1008 முறை “ஓம் குபேராய வசிய” என்ற மந்திரத்தை கூறி குபேரரை மனதார வேண்டிக் கொள்ளுங்கள். பூஜை முடிந்தவுடன் இதனை எடுத்து உங்கள் வீட்டில் பீரோவிலோ அல்லது கல்லாப்பெட்டியலோ வைத்து விடுங்கள்.
இந்த அருகம்புலானது சில காலங்களுக்கு மட்டுமே நன்றாக இருக்கும். அதனால் இந்த அருகம்புல் முற்றிலும் காய்ந்து விட்டது என்று உங்களுக்கு எப்பொழுது தோன்றுகிறதோ அப்பொழுது இதனை எடுத்து கால் படாத இடத்தில் போட்டுவிட்டு இதற்கு பதில் புதிதாக அருகம்புல் வேரை வைத்து விடுங்கள். இப்படி தொடர்ந்து செய்து வருவதன் மூலம் உங்கள் வீட்டில் பணப் பிரச்சனைகள் படிப்படியாக குறைந்து வருவதை நீங்கள் காணலாம்.
இதனையும் படியுங்கள் : நல்ல சம்பளத்தில் நிரந்தரமான வேலை கிடைக்க வேண்டுமா ? இப்படி ஒரே ஒரு அகல் விளக்கு மட்டும் ஏற்றுங்கள் போதும்!