டக்குனு 10 நிமிஷத்தில் கமகமனு ருசியான நீர் தோசை இப்படி செய்து பாருங்க! ஹெல்தியான உணவும் ரெடி!!

- Advertisement -

தினமும் இட்லி சாப்பிடுவது வீட்டில் உள்ள அனைவருக்கும் சற்றுச் சலிப்பாகவே இருக்கும். எனவே அனைவரும் விரும்பி சாப்பிடும் வகையில் நினைத்தவுடனே சட்டென செய்யும் இந்த நீர் தோசை ஒரு முறை செய்து கொடுத்துப் பாருங்கள். நீர் தோசை செய்து கொடுத்தால் எவ்வளவு வேண்டுமானாலும் நாம் சாப்பிட்டுக் கொண்டே இருக்கலாம். அட்டகாசமான சுவையில் பத்தே நிமிடத்தில் ஆரோக்கியமான நீர் தோசை செய்து வாருங்கள் பதிவிற்குள் போகலாம். இதை எப்படி செய்வது என்று தான் இங்கு பார்க்க போகின்றோம்.

-விளம்பரம்-
Print
4.50 from 2 votes

நீர் தோசை | Neer Dosai Recipe In Tamil

தினமும் இட்லி சாப்பிடுவது வீட்டில் உள்ள அனைவருக்கும் சற்றுச் சலிப்பாகவே இருக்கும். எனவே அனைவரும் விரும்பி சாப்பிடும் வகையில் நினைத்தவுடனே சட்டென செய்யும் இந்த நீர் தோசை ஒரு முறை செய்து கொடுத்துப் பாருங்கள். நீர் தோசை செய்து கொடுத்தால் எவ்வளவு வேண்டுமானாலும் நாம் சாப்பிட்டுக் கொண்டே இருக்கலாம். அட்டகாசமான சுவையில் பத்தே நிமிடத்தில் ஆரோக்கியமானநீர் தோசை செய்து பாருங்கள். இதை எப்படி செய்வது என்று தான் இங்கு பார்க்க போகின்றோம்.
Prep Time10 minutes
Active Time10 minutes
Course: Breakfast
Cuisine: Kerala
Keyword: Neer Dosai
Yield: 4
Calories: 55kcal

Equipment

  • 1 தோசை கல்
  • 1 பெரிய பவுள்

தேவையான பொருட்கள்

  • 1 கப் பச்சரிசி
  • 1/2 கப் துருவிய தேங்காய்
  • உப்பு தேவையானஅளவு
  • எண்ணெய் சுட்டெடுக்க

செய்முறை

  • பச்சரிசியை முதல் நாள் இரவே ஊற வைத்து விடவும்அல்லது 5 மணி நேரமாவது ஊற வேண்டும். பின்பு அதை அரைக்கும்போது, துருவிய தேங்காயையும் அதனுடன் சேர்த்து, நன்கு மைய அரைத்துக்கொள்ளவும் உப்பு சேர்த்து விடவும்.
  • இப்போது அந்த மாவானது நல்ல நீர்க்க இருக்க வேண்டும் இது எப்படி என்றால், அந்த மாவைக் கரண்டியில் எடுத்து திரும்ப விட்டால், கரண்டியில் மாவு ஒட்டாத அளவு நீர்க்க இருத்தல் வேண்டும்.
  • இப்போது அந்த அரைத்த மாவை ஒரு கரண்டியில் எடுத்து, தோசைக் கல்லில் அப்படியே ஊற்ற வேண்டும் ஓரத்திலிருந்து நடுவில் ஊற்ற வேண்டும்.
  • அங்கங்கே இடைவெளி இருந்தால், அதில் மேலும் சிறிது மாவை விடவும் இதை ரெகுலர் தோசை ஊற்றுவது போல நடுவில் ஊற்றி, பெரிதாக ஆக்கக் கூடாது (முடியாது). சுற்றிலும் எண்ணெய் விட்டு, அந்த தோசைக் கல்லை, ஒரு மூடியால் மூடி அடுப்பை சிம்மில் வைக்கவும்.
  • ஒருநிமிடம் கழித்து, அந்த மூடியைத் திறந்து (தோசையைத் திருப்பிப் போடவேண்டாம்), அந்த தோசை அளவில் மிகவும் பெரியதாக இருப்பதால், தோசைத் திருப்பியால் அதை பாதியாக மடித்து, பின்பு அதையே முக்கோண வடிவில் மடித்து, எடுத்து தட்டில் வைத்து விடவும்.
  • நீங்கள் நான்ஸ்டிக் தவாவில் செய்தால், அந்த தோசையை ஒரு பெரிய தட்டின் முன் அப்படியே கவிழ்த்தாலும் அது தட்டில் விழுந்து விடும். பின்னர் அதை முக்கோண வடிவில் மடித்துக் கொள்ளலாம் நல்ல மெல்லியதாக இருக்கும் இந்த தோசை
  • இதைச் சூடாக சாப்பிட்டால் மிகவும் நன்றாக இருக்கும் எந்த ஒரு சட்னியும் தொட்டுக்கொண்டு சாப்பிடலாம்.

Nutrition

Serving: 1no | Calories: 55kcal | Carbohydrates: 12.5g | Protein: 1.1g | Fat: 0.1g | Sodium: 1.1mg | Potassium: 12.3mg | Fiber: 0.7g | Calcium: 1.6mg | Iron: 0.1mg
- Advertisement -