சுவையான நெல்லிக்காய் தக்காளி தொக்கு இப்படி செய்து பாருங்க! பின் அடிக்கடி நீங்களே செய்வீங்க!
தொக்கு என்றால் பெரும்பாலானவர்களுக்கு பிடித்த உணவாக இருக்கிறது. நெல்லிக்காயில் பலவிதமான மருத்துவ குணங்கள் இருக்கின்றன. இதை அப்படியே சாப்பிடுவதற்கு பதிலாக தொக்கு செய்து சாப்பிட்டால் சுவையாக இருக்கும். நெல்லிக்காயை கொண்டு ஜாம், தேன், நெல்லிக்காய் ஊறுகாய், நெல்லிக்காய் சாதம் என பல்வே
தொக்கு என்றால் பெரும்பாலானவர்களுக்கு பிடித்த உணவாக இருக்கிறது. நெல்லிக்காயில் பலவிதமான மருத்துவ குணங்கள் இருக்கின்றன. இதை அப்படியே சாப்பிடுவதற்கு பதிலாக தொக்கு செய்து சாப்பிட்டால் சுவையாக இருக்கும். நெல்லிக்காயை கொண்டு ஜாம், தேன், நெல்லிக்காய் ஊறுகாய், நெல்லிக்காய் சாதம் என பல்வேறு வித்தியாசமான ரெசிபிகளை செய்யலாம். இதுவரை நெல்லிக்காயில் பல்வேறு வகையான ரெசிபிகளை செய்திருப்பீர்கள் ஒரு முறை இந்த நெல்லிக்காய் தக்காளி தொக்கு செய்து பாருங்கள். நெல்லிக்காய் குடலியக்கத்தை சீராக வைக்கும்.
எனவே இதனை தினமும் சாப்பிட்டு வந்தால் மலச்சிக்கல் பிரச்சனையை சரி செய்து விடலாம். இந்த நெல்லிக்காய் தக்காளி தொக்கை வைத்து எந்த உணவுக்கு வேண்டுமானாலும் சாப்பிடலாம். அந்த அளவுக்கு இதனுடைய ருசி இருக்கும். நாம் எப்பொழுதும் சாப்பிடும் உணவின் அளவை விட இந்த நெல்லிக்காய் தக்காளி தொக்கு இருந்தால் கொஞ்சம் அதிகமாக சாப்பிடுவோம். சிறிதும் நேரமில்லாமல் நகர்புறங்களில் பணி செய்து கொண்டிருக்கும் நண்பர்கள் ஒருமுறை இந்த தொக்கை இந்த முறையில் செய்து பாருங்கள். மிகவும் குறைந்த நேரத்தில் எளிதில் தயாராகும் இந்த தொக்கை, மூன்று மாதங்கள் வரை ஃப்ரிட்ஜில் வைத்துப் பயன்படுத்தலாம்.
சுடச்சுட இட்லி, தோசை அல்லது சப்பாத்திக்கு இன்ஸ்டன்ட்டாக தேவைப்படும் நேரத்தில் இதனை சைடு டிஷ்ஷாக உபயோகிக்கலாம். இந்த தொக்கும் அப்பளமும் இருந்தால் போதும். அதுவே பலருக்கும் விருந்து சாப்பிட்டது போல் குஷி ஆகிவிடுவார்கள். இந்த தொக்கு செய்வது எளிமையான விஷயம் என்றாலும் அதன் சுவை செய்யும் பக்குவத்தில் தான் உள்ளது. இந்த புளிப்பும் துவர்ப்பும் கலந்த நெல்லிக்காயை கொண்டு தொக்கு செய்தால் படு ஜோராக இருக்கும். இதனை தயிர் சாதம், சாம்பார் சாதம், தோசை, சப்பாத்திக்கு தொட்டுகொள்ள அருமையாக இருக்கும்.
இதனையும் படியுங்கள் : நெல்லிக்காய் நிறைய இருந்தா ஒரு தடவை கொஞ்சம் டிஃபரண்டா இந்த நெல்லிக்காய் முராப்பா செஞ்சு பாருங்க!