நெல்லிக்காய் ஊறுகாய் கேள்விப்பட்டிருப்போம் தேன் நெல்லிக்காய் கேள்விப்பட்டிருப்போம் காரநெல்லிக்காய் கேள்விப்பட்டு இருப்போம் இது என்ன நெல்லிக்காய் முராப்பா அப்படின்னு யோசிக்கிறீங்களா. ஸ்வீட்டா கொஞ்சம் காரமா கொஞ்சம் துவர்ப்போட சாப்பிடுறதுக்கு ரொம்ப சூப்பரா இருக்கும். நீங்க இனிப்பாவும் துவர்ப்பாவும் தேன் நெல்லிக்காய் சாப்பிட்டிருப்பீங்க ஆனா இது எல்லா சுவையோடும் சாப்பிடுவதற்கு ரொம்பவே சூப்பரா இருக்கும்.
டெய்லி ஒரு நெல்லிக்காய் உங்களால சாப்பிட முடியல அப்படின்னா இந்த நெல்லிக்காய் முராபா செஞ்சு பாருங்க கண்டிப்பா ஒரு நாளைக்கு ஒரு நெல்லிக்காய் என்ன ரெண்டு நெல்லிக்காயே நீங்க சாப்பிட முடியும். உங்க குழந்தைங்க நெல்லிக்காய் சாப்பிட மாட்டோம் அப்படின்னு அடம்பிடிச்சாங்கன்னா அவங்களுக்கு இதை கண்டிப்பா செஞ்சு கொடுங்க ரொம்பவே ஹெல்தியா சாப்பிடுவதற்கும் ரொம்ப சூப்பரா இருக்கும்.
குழந்தைகள் எப்பவுமே ஒரு பொருளை சாப்பிட மாட்டேன் அப்படின்னா அடம் பிடிச்சவங்க நா அவங்களுக்கு கொஞ்சம் வித்தியாசமா ஏதாவது செஞ்சு கொடுங்க ரொம்பவே விரும்பி சாப்பிடுவாங்க. அதுலயும் இந்த நெல்லிக்காய் முராப்பா ரொம்பவே டேஸ்டான ஆரோக்கியமான ஒன்று. ரொம்பவே குறைவான பொருட்களை வைத்து ரொம்ப டேஸ்ட்டான இந்த நெல்லிக்காய் முராப்பா செய்யலாம். இப்ப வாங்க இந்த டேஸ்டான ஆரோக்கியமான சத்தான நெல்லிக்காய் முராப்பா எப்படி செய்வது என்று பார்க்கலாம்.
நெல்லிக்காய் முராப்பா | Amla Murappa Recipe In Tamil
Equipment
- 1 கடாய்
- 1 மிக்ஸி
தேவையான பொருட்கள்
- 5 நெல்லிக்காய்
- 4 டேபிள் ஸ்பூன் வெல்லம்
- 1 டீஸ்பூன் மிளகு தூள்
- 1 சிட்டிகை உப்பு
- 1 இஞ்சி
- 2 ஏலக்காய்
செய்முறை
- முதல் நெல்லிக்காயை ஆவியில் 10 நிமிடங்கள் வேகவைத்து எடுத்துக் கொள்ளவும்
- ஆறிய பிறகு அதனை நன்றாக துருவி வைத்துக் கொள்ளவும்.
- ஒரு அடி கனமான கடாயில் துருவிய நெல்லிக்காயை சேர்த்து வெல்லமும் சேர்த்து நன்றாக வேக வைக்கவும் பத்து நிமிடங்களுக்கு பிறகு இஞ்சியை துருவி சேர்த்துக் கொள்ளவும்.
- சிட்டிகை உப்பு சேர்த்து நன்றாக கிளறிய பிறகு ஏலக்காயை இடித்து சேர்த்துக் கொள்ளவும்.
- இரண்டு நிமிடங்களுக்கு பிறகு அடுப்பை அணைத்தால் சுவையான சத்தான ஆரோக்கியமான நெல்லிக்காய் முராப்பா தயார்
Nutrition
இதையும் படியுங்கள் : சுடு சோறுடன் நெய் ஊற்றி பிசைந்து சாப்பிட ருசியான கருவேப்பிலை நெல்லி பொடி இப்படி செய்து!