சுடு சோறுடன் நெய் ஊற்றி பிசைந்து சாப்பிட ருசியான கருவேப்பிலை நெல்லி பொடி இப்படி செய்து!

- Advertisement -

இரும்பு சத்து நிறைந்த கறிவேப்பிலை நெல்லிப் பொடி. இதை நாம் இப்போது எல்லாம் கண்டு கொள்வதே கிடையாது. ஆனால் வாரத்தில் ஒரு முறையாவது இந்த கறிவேப்பிலை மற்றும் நெல்லி நம் உணவோடு சேர்த்துக் கொள்ள வேண்டும். தினமும் ஒரு ஸ்பூன் கறிவேப்பிலை நெல்லிப் பொடியை உணவில் எடுத்துக் கொண்டாலும் தவறு கிடையாது. சரி இதை அப்படியே கொடுத்தால் குழந்தைகளும் சாப்பிட மாட்டாங்க. பெரியவர்களும் சாப்பிட மாட்டாங்க. கறிவேப்பிலை நெல்லிப் பொடி செய்து கொடுத்துப் பாருங்கள் தினமும்  இட்லி தோசைக்கு வைத்து தொட்டு சாப்பிட்டால் போதும்.,சுடச்சுட சாதத்தில் இந்த இட்லி பொடியை போட்டு 1 ஸ்பூன் நல்லெண்ணெய் அல்லது நெய் விட்டு பிசைந்து சாப்பிட்டாலும் உடலுக்கு ஆரோக்கியம் தான்.

-விளம்பரம்-

கறிவேப்பிலை நெல்லிப்  பொடியை மோரில் அளந்து குடித்தாலும் சுவையும் அருமையாக இருக்கும். ஒரு மாதமானாலும் கெட்டுப் போகாத இந்த ஒரு ஆரோக்கியமான நீங்களும் வீட்டில் தயார் செய்து வைத்துக் கொள்ளலாம். இதில் இருக்கும் இரும்புச்சத்து பெண்கள், குழந்தைகளுக்கு மிகவும் முக்கியமானது. அடிக்கடி கறிவேப்பிலையை உணவில் எடுத்துக் கொண்டால் உடல் சோர்வு தட்டாது, நல்ல ஒரு நோய் எதிர்ப்பாற்றலுடன் இருக்கும். ருசியான இந்த கறிவேப்பிலை நெல்லிப்  பொடியை எப்படி சுலபமாக நாமும் தயாரிப்பது? என்பதை தான் இந்த சமையல் குறிப்பு பதிவின் மூலம் இனி தொடர்ந்து காண இருக்கிறோம்.

- Advertisement -

அழகா இருக்கணும், தலை முடி கருகருன்னு இருக்கணும். உடல் ஆரோக்கியத்தில் எந்த குறைபாடும் ஏற்படக் கூடாது, என்பவர்கள் இந்த மாதிரி ஒரு கறிவேப்பிலை நெல்லிப் பொடியை அரைத்து வைத்துக்கொண்டு சாப்பிட்டால் போதும். முக்கியமாக உடல் மேனி அழகு ஆரோக்யமான உணவிலுருந்தே பெற முடியும்.உடலுக்கு ஆரோக்கியம் தரக்கூடிய கறிவேப்பிலை நெல்லிப் பொடியை சுலபமாக எப்படி அரைப்பது ரெசிபி இதோ உங்களுக்காக.

Print
No ratings yet

கறிவேப்பிலை நெல்லிப் பொடி | Curry Leaves Amla Powder

கறிவேப்பிலை நெல்லிப்  பொடியை மோரில் அளந்து குடித்தாலும் சுவையும் அருமையாகஇருக்கும். ஒரு மாதமானாலும் கெட்டுப் போகாத இந்த ஒரு ஆரோக்கியமான நீங்களும் வீட்டில்தயார் செய்து வைத்துக் கொள்ளலாம். இதில் இருக்கும் இரும்புச்சத்து பெண்கள், குழந்தைகளுக்குமிகவும் முக்கியமானது. அடிக்கடி கறிவேப்பிலையை உணவில் எடுத்துக் கொண்டால் உடல் சோர்வுதட்டாது, நல்ல ஒரு நோய் எதிர்ப்பாற்றலுடன் இருக்கும். ருசியான இந்த கறிவேப்பிலை நெல்லிப்  பொடியை எப்படி சுலபமாக நாமும் தயாரிப்பது? என்பதைதான் இந்த சமையல் குறிப்பு பதிவின் மூலம் இனி தொடர்ந்து காண இருக்கிறோம்.அழகா இருக்கணும், தலை முடி கருகருன்னுஇருக்கணும். உடல் ஆரோக்கியத்தில் எந்த குறைபாடும் ஏற்படக் கூடாது, என்பவர்கள் இந்தமாதிரி ஒரு கறிவேப்பிலை நெல்லிப் பொடியை அரைத்து வைத்துக்கொண்டு சாப்பிட்டால் போதும்.முக்கியமாக உடல் மேனி அழகு ஆரோக்யமான உணவிலுருந்தே பெற முடியும்.
 
Prep Time5 minutes
Active Time10 minutes
Course: LUNCH
Cuisine: tamilnadu
Keyword: Curry Leaves Amla Podi
Yield: 4
Calories: 66kcal

Equipment

  • 1 மிக்ஸி
  • 1 கடாய்

தேவையான பொருட்கள்

  • 10 நெல்லிக்காய்
  • 1/2 கப் கறிவேப்பிலை
  • 10 காய்ந்தமிளகாய்
  • 1/2 ஸ்பூன் பெருங்காயம்
  • உப்பு தேவையான அளவு
  • 2 ஸ்பூன் எண்ணெய்

செய்முறை

  • நெல்லிக்காய்களை கழுவித் துடைத்து, கொட்டைகளை நீக்கிவிட்டு நன்கு காயவைக்கவும்
  • எண்ணெயைக் காயவைத்து, பெருங்காயத்தைப் பொரியவிட்டு எடுக்கவும்
  • பிறகு,அதே எண்ணெயில் மிளகாயையும் வதக்கி, பின் அடுப்பை அணைத்துவிட்டு, கறிவேப்பிலையை அந்த சூட்டிலேயே போட்டுப் புரட்டி எடுத்துக்கொள்ளவும்.
  • காய்ந்திருக்கும் நெல்லியை மிக்ஸியில் போட்டு நன்கு அரைக்கவும்.
  • பிறகு, மிளகாய், உப்பு, பெருங்காயத்தைப் போட்டு அரைத்து, கடைசியாக கறிவேப்பிலையையும் போட்டு அரைத்தெடுக்கவும்
  • அருமையான வாசனையோடு இருக்கும் இந்தப் பொடியை, சூடான சாதத்தில்" கலந்தோ அல்லது மோரில் கலக்கியோ சாப்பிடலாம்.

செய்முறை குறிப்புகள்

 
அருமையான வாசனையோடு இருக்கும் இந்தப் பொடியை, சூடான சாதத்தில்” கலந்தோ அல்லது மோரில் கலக்கியோ சாப்பிடலாம்.
 
 

Nutrition

Serving: 500g | Calories: 66kcal | Carbohydrates: 15g | Protein: 1.3g | Fat: 0.9g | Potassium: 198mg | Fiber: 6.5g | Vitamin A: 290IU | Vitamin C: 27.7mg | Calcium: 25mg | Iron: 0.31mg