ஐஸ் ஐஸ் ஐஸ் பால் ஜஸ் , சேமியா ஐஸ் 90ஸ் கிட்ஸோட பிடித்தமான சத்தம் அப்படினு சொல்லலாம். இப்பல்லாம் என்னதான் சாக்கோபார் வந்தாலும் கோனைஸ் கிரிம் வந்தாலும் கார்னடோஸ் வந்தாலும் எப்பவுமே குச்சி ஐஸ் பெஸ்ட் ஐஸ் தான். இதெல்லாம் வந்து எல்லாருக்குமே ரொம்ப ஃபேவரட்டான ஒரு ஐஸ். இப்போ அந்த ஐஸ் எல்லாம் ரொம்ப அரிதாக தான் கிடைக்குது. இருந்தாலும் இந்த மாதிரி ஐஸ்கிரீம்கள் அழிந்து வருவதை தடை பண்றதுக்காக வீட்டிலேயே சுவையான தேங்காய் சேமியா.ஐஸ் பண்ணி சாப்பிட போறோம்.
தேங்காய் சேமியா முழுக்க முழுக்க வெறும் நாலே நாள் பொருளை வைத்து செம்ம சுவையான ஐஸ் செய்து சாப்பிட போறோம். ஐஸ் அப்படின்னா 90ஸ் கிட்ஸ் மட்டும் கிடையாது எல்லாருக்குமே ரொம்ப ரொம்ப பிடிச்சமான ஒரு பொருள். இந்த ஐஸ் சாப்பிடும்போது மனசுல கிடைக்கிற சந்தோஷமும் திருப்தியும் வேற எது சாப்பிட்டாலும் கிடைக்காது. அப்படிப்பட்ட ஐஸ் வீட்ல சூப்பரா செஞ்சு சாப்பிடுவதற்காகத்தான்.
இது ரெடியா இருக்கு இந்த ஐஸ்ஸை நீங்க நைட் டைம்ல செஞ்சு ஃப்ரீசரில் வைத்துவிட்டீர்கள் என்றால் காலையில் எழுந்திருச்சு வெயில் வரும்போது எடுத்து சாப்பிடும்போது ரொம்ப அட்டகாசமா இருக்கும். தேங்காய் சேமியாவ ஐஸ் இப்படி செய்து சாப்பிட போறோம் அப்படின்னு பார்க்கலாம். இத நீங்க ஆல்ரெடி செய்து ஃப்ரீசர்ல வச்சிருந்தீங்கன்னா உங்க வீட்டுக்கு கெஸ்ட் வராங்க அப்படின்னா அவங்களுக்கு வந்த உடனே நீங்க அழகா எடுத்து கொடுத்து டேஸ்ட் பண்ண சொல்லலாம். இந்த குச்சி ஐஸ் எப்படி பண்றது அப்படின்னு பாக்க போறோம்.
குச்சி ஐஸ் | Milk Icecream Stick Recipe In Tamil
Equipment
- 1 பெரிய பவுள்
தேவையான பொருட்கள்
- 4 ஸ்பூன் பால் பவுடர்
- 4 ஸ்பூன் பொடித்த சக்கரை
- 1 மூடி தேங்காய்
- 1 ஸ்பூன் பால்
செய்முறை
- முதலில் தேங்காயை சில்லுகளாக கீறி எடுத்து கொள்ள வேண்டும்.தேங்காய் சில்லுகளுக்கு பின் புறம் இருக்கும் கருப்பு நிற தோலை நீக்கி விடவும்.
- தேங்காய் சில்லுகளை பொடியாக நறுக்கி எடுத்துகொள்ள வேண்டும்.நறுக்கிய தேங்காயை மிக்ஸி ஜாரில் சேர்த்து உடைத்த தேங்காயில் உள்ள நீரை சேர்த்து நன்றாக மாவு போல் அரைத்து கொள்ளவும்.
- பிறகு ஒரு பாத்திரத்தில் பால் பவுடர் பொடித்த சர்க்கரை சேர்க்கவும். சர்க்கரை அளவு உங்கள் விருப்பம் போல் சேர்த்து கொள்ளவும்.
- பின் 12 கப் பாலை சேர்த்து நன்றாக கட்டி இல்லாமல் கலந்து விடும்.பின் அரைத்து வைத்த தேங்காய் விழுதை சேர்த்து நன்றாக கட்டி இல்லாமல் கலந்துவிடும்.
- பின் ஐஸ் மோல்டுகளில் கலந்து வைத்துள்ள தேங்காய் பால் கலவையை ஊற்றி மோல்டுகளை மூடி ஃபிரீசரில் 7 முதல் 8 மணி நேரம் வைத்து எடுக்கவும்.
- இரவில் தயார் செய்து ஃபிரீசரில்வைத்தால் காலையில் எடுத்து சுவைக்க தாயாராக இருக்கும். குளு குளு குச்சி ஐஸ் தயார்.