Advertisement
சைவம்

நெல்லூர் பொடி இட்லி இப்படி செய்து பாருங்க! இனி இட்லிக்கு சாம்பார் சட்னி எதுவும் வேண்டாம்!

Advertisement

நெல்லூர் பொடி இட்லி இது போன்று ஒரு முறை செய்து சாப்பிட்டு பாருங்க. அப்புறம் மீண்டும் மீண்டும் சுவைக்க தோன்றும். இந்த பொடி இட்லி என்றாலே தனி சுவைத்தான் அதிலும் அந்த பொடி இட்லி மேல் போட்டு அதன் மேல் ணெய் ஊற்றி சாப்பிட்டால் சொல்வதற்கு வார்த்தையே இல்லை

இதையும் படியுங்கள் : சுட சுட சோறுடன் பிசைந்து சாப்பிட பருப்பு பொடி இப்படி செய்து பாருங்க! அஹா இதன் சுவையே சுவை!

Advertisement

அவ்வளவு அற்புதமாக இருக்கும். இந்த பொடி அரைத்து இட்லி, மற்றும் சாதத்துடனும் சேர்த்து சாப்பிடலாம் சுவையாக இருக்கும். இந்த பொடி இட்லி எப்படி செய்வதென்று கீழே கொடுக்கப்பட்டுள்ள செய்முறை விளக்கங்களை நன்கு படித்து பார்த்து நீங்களும் ட்ரை பண்ணி பாருங்க.

நெல்லூர் பொடி இட்லி | Nellore Podi Idli Recipe In Tamil

Print Recipe
நெல்லூர் பொடி இட்லி இது போன்று ஒரு முறை செய்து சாப்பிட்டு பாருங்க. அப்புறம் மீண்டும் மீண்டும் சுவைக்க தோன்றும். இந்த பொடி இட்லி என்றாலே தனி சுவைத்தான் அதிலும் அந்த பொடி இட்லி மேல் போட்டு அதன் மேல் ணெய் ஊற்றி சாப்பிட்டால் சொல்வதற்கு வார்த்தையே இல்லை அவ்வளவு அற்புதமாக இருக்கும். இந்த பொடி அரைத்து இட்லி, மற்றும் சாதத்துடனும் சேர்த்து சாப்பிடலாம் சுவையாக இருக்கும்.
Advertisement
Course Breakfast, dinner
Cuisine Indian, TAMIL
Keyword podi idli, பொடி இட்லி
Prep Time 10 minutes
Cook Time 5 minutes
Total Time 16 minutes
Servings 4 people
Calories 60

Equipment

  • 1 கடாய்
  • 1 மிக்ஸி

Ingredients

அரைப்பதற்கு:

  • நல்லெண்ணெய் கொஞ்சம்
  • ½ கப் கடலை பருப்பு
    Advertisement
  • ½ கப் உளுத்தம் பருப்பு
  • 2 டேபிள் ஸ்பூன் தனியா
  • 10 வர மிளகாய்
  • 1 டேபிள் ஸ்பூன் சீரகம்
  • கருவேப்பிலை ஒரு கைப்பிடி அளவு
  • 4 பல் பூண்டு
  • புளி கொஞ்சம்
  • மஞ்சள் பொடி கொஞ்சம்
  • உப்பு தேவையான அளவு

தாளிக்க:

  • எண்ணெய் கொஞ்சம்
  • 1 டீஸ்பூன் கடுகு
  • கருவேப்பிலை கொஞ்சம்

Instructions

  • முதலில் ஒரு கடாயில் நல்லெண்ணெய் ஊற்றி காய்ந்ததும் கடலை பருப்பு, உளுத்தம் பருப்பு, தனியா, வரமிளகாய், சீரகம், கருவேப்பிலை, பூண்டு, புளி, சேர்த்து நன்கு வதக்கி ஆறவிடவும்.
  • ஆறியதும் மிக்சியில் சேர்த்து அத்துடன் கொஞ்சம் மஞ்சள் பொடி, தேவையான அளவு உப்பு சேர்த்து நன்கு கொர கொரப்பாக அரைத்துக்கொள்ளவும்.
  • அடுத்து உங்கள் விருப்படி மினி இட்லி ஊற்றி வெந்ததும் தனியாக எடுத்துவைத்துக்கொள்ளவும்.
  • தாளிக்க அடுத்து ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் கடுகு, கருவேப்பிலை சேர்த்து பொரிந்ததும் அரைத்து வைத்துள்ள பொடியை தேவையான அளவு சேர்த்து அத்துடன் வேக வைத்த இட்லியை சேர்த்து கிளறி பரிமாறவும்.

Nutrition

Serving: 350G | Calories: 60kcal | Carbohydrates: 45g | Protein: 10g | Fat: 0.2g | Sodium: 12mg | Potassium: 38mg | Sugar: 0.1g
Advertisement
swetha

Recent Posts

காலை டிபனுக்கு ருசியான புதினா பூரி இப்படி ஒரு தரம் செய்து பாருங்கள்! 2 பூரி அதிகமாவே சாப்பிடுவாங்க!

பூரி இந்தியாவின் புகழ்பெற்ற மற்றும் சுவையான காலை உணவு அல்லது சிற்றுண்டி. பூரி தென்னிந்தியாவில் உருளைக்கிழங்கு மசாலாவுடன் மற்றும் வட…

4 மணி நேரங்கள் ago

இன்றைய ராசிபலன் – 08 மே 2024!

மேஷம் நிதி நிலைமை நிச்சயமாக உயரும்- ஆனால் அதே சமயம் செலவுகளும் அதிகரிக்கும். மற்றவர்கள் பற்றியும் அவர்களுடைய நோக்கங்கள் பற்றியும்…

7 மணி நேரங்கள் ago

காரசாரமான ருசியில் சிக்கன் சப்பாத்தி ரோல் இப்படி ட்ரை பண்ணி பாருங்க! அட்டகாசமான ஸ்நாக்ஸ் ரெசிபியும் கூட!

எல்லாருக்குமே சிக்கன் என்றாலும் புடிக்கும் சப்பாத்தி என்றாலும் ரொம்ப பிடிக்கும். இப்படி சிக்கனையும் சப்பாத்தியும் தனித்தனியா சாப்பிட்டு கவலைப்படாம சிக்கன்…

17 மணி நேரங்கள் ago

மே மாதத்தில் பிறந்தவர்களின் குணங்கள் பற்றிய சில சுவாரசியமான தகவல்கள்

ஒவ்வொரு மாதத்தில் பிறந்தவர்களுக்கும் ஒரு சில குணங்கள் இருக்கும். ஒரு சில நபர்களுக்கு அவர்களுடைய குணங்கள் ராசி நட்சத்திரத்தை பொருத்தும்…

18 மணி நேரங்கள் ago

ஸ்நாக்ஸாக சாப்பிட கேழ்வரகு மாவு வைத்து ராகி மெது பக்கோடா இப்படி செய்து பாருங்க!

குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைத்து வயதினரும் விரும்பி சாப்பிடும் ஸ்நாக்ஸ் என்றால் அது பக்கோடா தான். வெங்காயத்துடன் கடலை…

20 மணி நேரங்கள் ago

குழந்தைகளுக்கு புடிச்ச சூப்பரான சர்க்கரை வள்ளி கிழங்கு ரோஸ்ட் இப்படி ஒரு தடவை செஞ்சு கொடுத்து அசத்துங்க!

உங்களுக்கு சர்க்கரைவள்ளிக் கிழங்கு பிடிக்குமா? அதை எப்போதும் வேக வைத்து மட்டும் தான் சாப்பிடுவீர்களா? சற்று வித்தியாசமாக சாப்பிட விரும்புகிறீர்களா?…

23 மணி நேரங்கள் ago