- Advertisement -
நெல்லூர் பொடி இட்லி இது போன்று ஒரு முறை செய்து சாப்பிட்டு பாருங்க. அப்புறம் மீண்டும் மீண்டும் சுவைக்க தோன்றும். இந்த பொடி இட்லி என்றாலே தனி சுவைத்தான் அதிலும் அந்த பொடி இட்லி மேல் போட்டு அதன் மேல் ணெய் ஊற்றி சாப்பிட்டால் சொல்வதற்கு வார்த்தையே இல்லை
-விளம்பரம்-
இதையும் படியுங்கள் : சுட சுட சோறுடன் பிசைந்து சாப்பிட பருப்பு பொடி இப்படி செய்து பாருங்க! அஹா இதன் சுவையே சுவை!
- Advertisement -
அவ்வளவு அற்புதமாக இருக்கும். இந்த பொடி அரைத்து இட்லி, மற்றும் சாதத்துடனும் சேர்த்து சாப்பிடலாம் சுவையாக இருக்கும். இந்த பொடி இட்லி எப்படி செய்வதென்று கீழே கொடுக்கப்பட்டுள்ள செய்முறை விளக்கங்களை நன்கு படித்து பார்த்து நீங்களும் ட்ரை பண்ணி பாருங்க.
நெல்லூர் பொடி இட்லி | Nellore Podi Idli Recipe In Tamil
நெல்லூர் பொடி இட்லி இது போன்று ஒரு முறை செய்து சாப்பிட்டு பாருங்க. அப்புறம் மீண்டும் மீண்டும் சுவைக்க தோன்றும். இந்த பொடி இட்லி என்றாலே தனி சுவைத்தான் அதிலும் அந்த பொடி இட்லி மேல் போட்டு அதன் மேல் ணெய் ஊற்றி சாப்பிட்டால் சொல்வதற்கு வார்த்தையே இல்லை அவ்வளவு அற்புதமாக இருக்கும். இந்த பொடி அரைத்து இட்லி, மற்றும் சாதத்துடனும் சேர்த்து சாப்பிடலாம் சுவையாக இருக்கும்.
Yield: 4 people
Calories: 60kcal
Equipment
- 1 கடாய்
- 1 மிக்ஸி
தேவையான பொருட்கள்
அரைப்பதற்கு:
- நல்லெண்ணெய் கொஞ்சம்
- ½ கப் கடலை பருப்பு
- ½ கப் உளுத்தம் பருப்பு
- 2 டேபிள் ஸ்பூன் தனியா
- 10 வர மிளகாய்
- 1 டேபிள் ஸ்பூன் சீரகம்
- கருவேப்பிலை ஒரு கைப்பிடி அளவு
- 4 பல் பூண்டு
- புளி கொஞ்சம்
- மஞ்சள் பொடி கொஞ்சம்
- உப்பு தேவையான அளவு
தாளிக்க:
- எண்ணெய் கொஞ்சம்
- 1 டீஸ்பூன் கடுகு
- கருவேப்பிலை கொஞ்சம்
செய்முறை
- முதலில் ஒரு கடாயில் நல்லெண்ணெய் ஊற்றி காய்ந்ததும் கடலை பருப்பு, உளுத்தம் பருப்பு, தனியா, வரமிளகாய், சீரகம், கருவேப்பிலை, பூண்டு, புளி, சேர்த்து நன்கு வதக்கி ஆறவிடவும்.
- ஆறியதும் மிக்சியில் சேர்த்து அத்துடன் கொஞ்சம் மஞ்சள் பொடி, தேவையான அளவு உப்பு சேர்த்து நன்கு கொர கொரப்பாக அரைத்துக்கொள்ளவும்.
- அடுத்து உங்கள் விருப்படி மினி இட்லி ஊற்றி வெந்ததும் தனியாக எடுத்துவைத்துக்கொள்ளவும்.
- தாளிக்க அடுத்து ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் கடுகு, கருவேப்பிலை சேர்த்து பொரிந்ததும் அரைத்து வைத்துள்ள பொடியை தேவையான அளவு சேர்த்து அத்துடன் வேக வைத்த இட்லியை சேர்த்து கிளறி பரிமாறவும்.
Nutrition
Serving: 350G | Calories: 60kcal | Carbohydrates: 45g | Protein: 10g | Fat: 0.2g | Sodium: 12mg | Potassium: 38mg | Sugar: 0.1g