ஸ்பெஷல் அரவை சேர்த்த நூக்கல் காய் குழம்பு இப்படி ருசியாக ட்ரை பண்ணி பாருங்க! ஒரு தட்டு சோறும் காலியாகும!

- Advertisement -

இப்படி ஒரு நூக்கல் காய் குழம்பை ஹோட்டலில் கூட இதுவரைக்கும் சாப்பிட்டு இருக்க மாட்டீங்க. பருப்பு சேர்க்காத, ஸ்பெஷல் அரவை சேர்த்த நூக்கல் காய் குழம்பு!!!

-விளம்பரம்-

நூக்கல் காய் குருமா, நூக்கல் காய் பருப்பு சேர்த்து சாம்பார் தானே நாம் சமைத்து இருக்கின்றோம். ஆனால் புடலங்காயில் ஒரு சூப்பரான வாசம் நிறைந்த குழம்பு வைக்கலாம். அதற்கு ஒரு ஸ்பெஷல் அரவை தயார் செய்யணும். வித்தியாசமான கம கம வாசத்தோடு இந்த குழம்பை எப்படி வைக்கப் போகின்றோம் என்பதை பற்றிய குறிப்பு இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்வோம் வாருங்கள். சுட சுட சாதத்தில் இந்த குழம்பை போட்டு பிசைந்து ஒரு அப்பளத்தை தொட்டு சாப்பிட்டால் அவ்வளவு அருமையாக இருக்கும். 

- Advertisement -

என்ன தான் சாதம் வடித்து அதற்கான சாம்பார் , காரா குழம்பு செய்து தொட்டுக்கொள்ள பதார்த்தம் செய்து கொடுத்தாலும். அசைவ வாசம் கொண்ட மசாலா அரைத்த இந்த  நூக்கல் காய் குழம்பு சுவைக்கு அது ஈடாகாது. சுட சுட சாஹம், பிரியாணி, பிரிஞ்சி, தக்காளி சாதம்,  இது போன்ற சாதங்களின் வரிசையில் சாம்பார் சாதம் மிகவும் சுவையானதாக இருக்கும். இந்த நூக்கல் காய் குழம்பு எவ்வாறு மிகவும் சுவையாக சமைப்பது என்பதனை தான் இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்ளப் போகின்றோம்.

Print
No ratings yet

நூக்கல் காய் குழம்பு | Nookal Kai Kulambu Recipe In Tamil

சுட சுட சாதத்தில் இந்த குழம்பை போட்டு பிசைந்து ஒரு அப்பளத்தை தொட்டு சாப்பிட்டால் அவ்வளவு அருமையாக இருக்கும். என்ன தான் சாதம் வடித்து அதற்கான சாம்பார், காரா குழம்பு செய்து தொட்டுக்கொள்ள பதார்த்தம் செய்து கொடுத்தாலும். அசைவ வாசம் கொண்டமசாலா அரைத்த இந்த  நூக்கல் காய் குழம்பு சுவைக்குஅது ஈடாகாது. சுட சுட சாஹம், பிரியாணி, பிரிஞ்சி, தக்காளி சாதம்,  இது போன்ற சாதங்களின் வரிசையில் சாம்பார் சாதம்மிகவும் சுவையானதாக இருக்கும். இந்த நூக்கல் காய் குழம்பு எவ்வாறு மிகவும் சுவையாகசமைப்பது என்பதனை தான் இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்ளப் போகின்றோம்.
Prep Time5 minutes
Active Time10 minutes
Course: Kulambu
Cuisine: tamil nadu
Keyword: Nookal Kai Kulambu
Yield: 4
Calories: 83kcal

Equipment

  • 1 கடாய்

தேவையான பொருட்கள்

  • 1 டீஸ்பூன்  இஞ்சி பூண்டு விழுது
  • உப்பு தேவைக் கேற்ப
  • எண்ணெய் தேவைக் கேற்ப
  • 3/4 கிலோ நூக்கல்
  • 1/2 கப் நறுக்கிய வெங்காயம்
  • 1 கொத்து கறிவேப்பிலை
  • 2 பச்சை மிளகாய்
  • புளி எலுமிச்சை அளவு
  • 1/4 டேபிள் ஸ்பூன் மிளகாய் தூள்
  • 1/4 டீஸ்பூன் மஞ்சள் தூள்
  • 1 டேபிள் ஸ்பூன். மல்லித்தூள்
  • 1 கைப்பிடி கொத்தமல்லி இலை
  • 1/2 கப் தேங்காய் துருவல்
  • 1/2 டீஸ்பூன் சோம்பு
  • 3/4 டீஸ்பூன் வேர்க்கடலை
  • 3/4 டீஸ்பூன் சீரகத்தூள்
  • 1 சிறிய தக்காளி
  • 2 டீஸ்பூன் எள்ளு

செய்முறை

  • கடாயில் எண்ணெய் ஊற்றி காய விட வேண்டும். அதில் கழுவி துடைத்து நறுக்கிய நூக்கல் துண்டுகளை சேர்க்க வேண்டும்.திருப்பி திருப்பி பொரிய விட வேண்டும்.
  • பொரித்த நூக்கல் தனியாக எடுத்து வைக்க வேண்டும்தக்காளியை மிக்ஸியில் போட்டு கூழாக அரைத்து வைக்க வேண்டும்.
  • கடாயில்தேங்காய், எள்ளு. வேர்க்கடலை லேசாக வறுத்து எடுக்க வேண்டும். ஆறிய பின் அத்துடன் தக்காளி சேர்த்து விழுதாக அரைத்து எடுக்க வேண்டும்,நூக்கல் பொரித்த அதே எண்ணெயில் பட்டை சோம்பு, கறிவேப்பிலை போட்டு தாளிக்க வேண்டும். அத்துடன் நறுக்கிய வெங்காயம், இஞ்சி பூண்டு விழுது சேர்த்து வதக்க வேண்டும். வதங்கியதும் மசாலா பொடிகளை சேர்த்து வதக்கி விட வேண்டும்.
  • பச்சை மிளகாய் சேர்க்க வேண்டும். புளித்தண்ணீர் சேர்த்து நன்கு கொதி வரவிட வேண்டும். கொதித்து மசாலாவில் புளி வாடை அடங்கியதும் பொரித்த நூக்கலில் உப்பு சேர்க்க வேண்டும்.
  • அரைத்த தேங்காய் விழுதை சேர்த்து தேவைப்பட்டால் தண்ணீர் சேர்க்க வேண்டும். நன்கு கொதித்த பிறகு அடுப்பை சிம்மில் வைக்க வேண்டும். தேங்காய் வாடை அடங்கி எண்ணெய் மேலெழும்பி வரும் பொழுது அடுப்பை அணைக்க வேண்டும். நறுக்கிய மல்லி இலை தூவ வேண்டும்.

Nutrition

Serving: 100g | Calories: 83kcal | Carbohydrates: 14.2g | Protein: 3.6g | Fiber: 3.6g