வார ராசிபலன் – 23 நவம்பர் 2025 முதல் 29 நவம்பர் 2025 வரை!!

மேஷம் இந்த வாரம் மேஷம் ராசியினரை விட்டு விலகிய உறவுகள் நாடி வரும். குரு, சுக்கிரன் ஆகியோரால் எதிர்பார்த்த சுபச் செய்திகள் வீடு வந்து சேரும். உத்தியோகஸ்தர்கள் அலுவலக சிக்கல்களில் சமாளித்து வெற்றி பெறுவர். மாணவர்கள் உறவினர் வீட்டு விஷேசங்களில் கலந்து கொண்டு மகிழ்வர். சுப காரியப் பே

By ·

மேஷம்

இந்த வாரம் மேஷம் ராசியினரை விட்டு விலகிய உறவுகள் நாடி வரும். குரு, சுக்கிரன் ஆகியோரால் எதிர்பார்த்த சுபச் செய்திகள் வீடு வந்து சேரும். உத்தியோகஸ்தர்கள் அலுவலக சிக்கல்களில் சமாளித்து வெற்றி பெறுவர். மாணவர்கள் உறவினர் வீட்டு விஷேசங்களில் கலந்து கொண்டு மகிழ்வர். சுப காரியப் பேச்சுக்கள் வெற்றிகரமாக நீங்கள் விரும்பியபடி சாதகமாகும். மனதில் தெய்வச் சிந்தனை அதிகரிக்கும். பதவி உயர்வு, சம்பள உயர்வு, இட மாற்றம் எதிர்பார்த்தவர்களுக்கு அவை அமையும். அதிகாரிகளோடு தேவையற்ற வாக்குவாதத்தைத் தவிர்க்கவும். நம்பி ஒப்படைத்த பொறுப்புக்கள் உங்களுக்கு மனக்கசப்பைத் தரலாம். எதிர்பார்த்த உதவி கிடைப்பதில் தாமதமாகும்.

ரிஷபம்

இந்த வாரம் ரிஷபம் ராசியினர் எதிர்கால நன்மைக்குரிய திட்டங்களை செயல்படுத்துவார்கள். ராசி அதிபதி சுக்கிரன் அந்தஸ்தையும், கௌரவத்தையும் உயர்த்துவார். உத்தியோகஸ்தர்கள் பணியிட சிக்கல் விலகி நன்மை அடைவர். மாணவர்கள் தேர்வில் நல்ல மதிப்பெண் பெற தேவையான ஆலோசனை பெறுவர். வேலைக்காக முயற்சி செய்பவர்களுக்கு விரும்பிய வேலை கிடைக்கும். பணி மாற்றம் விரும்பியவர்களுக்கும் பணி மாற்றம் கிடைக்கும் வாய்ப்பு உண்டு. நண்பர்கள் துணை புரிவார்கள். எதிர்பார்த்த முன்னேற்றம் எளிதில் வந்து சேரும். குழந்தைகள் சம்பந்தப்பட்ட விஷயங்களில் மனக்குழப்பம் இருக்கும். தேவையில்லாத பிரயாணங்கள் ஏற்படும்.

மிதுனம்

இந்த வாரம் மிதுனம் ராசியினர் குடும்ப, சமூக நற்காரியங்களில் ஈடுபட்டு பெயர் பெறுவர். ராசி அதிபதி புதன் மனதில் தைரியத்தை ஏற்படுத்துவார். சிந்தனை தெளிவாகும். உத்தியோகஸ்தர்கள் அலுவலகத்தில் நல்ல மாற்றங்களை சந்திப்பார்கள். மாணவர்கள் ஏ.ஐ., கணினி பயிற்சிகளில் பங்கு பெறுவார்கள். குடும்பத்தில் உற்சாகமான சூழ்நிலை உருவாகும். சுப காரிய முயற்சிகளில் வெற்றி கிடைக்கும். பழைய கடன்கள் அடைத்து நிம்மதிப் பெருமூச்சு விடுவீர்கள். அரசாங்க காரியங்கள் சாதகமாகும். பயணங்கள் சாதகமாக இருக்கும். வழக்குகள் இழுத்தடிக்கும். சக ஊழியர்களின் ஒத்துழைப்பு கிடைக்காது. மனதில் கசப்புணர்வும் சஞ்சலமும் இருக்கும்.

கடகம்

இந்த வாரம் கடகம் ராசியினர் நன்மை தரும் புதிய தொடர்புகளை பெறுவார்கள். சனி, சுக்கிரன் மனதில் புதிய நம்பிக்கையை உருவாக்குவார்கள். உத்தியோகஸ்தர்கள் உயர் அதிகாரிகள் மூலம் ஆதாயம் பெறுவர். மாணவர்கள் படிப்பில் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும். ஆன்மிக விஷயங்களில் கவனம் செலுத்தும் வாய்ப்பு உண்டு. பணப்பிரச்னைகள் கட்டுக்குள் இருக்கும் பெரிய அளவில் பற்றாக்குறை ஏற்படாது. வீட்டு முதலீடுகள் ஓரளவு லாபத்தைத் தரும். பொது வாழ்வில் உள்ளவர்களுக்கு எதிர்பாராத வகையில் சில பொறுப்புகள் கிடைக்கும். சில நேரங்களில் வேண்டாத செலவுகள் முன்னால் வந்து நிற்கும். ஆடம்பர விஷயங்களைக் குறைத்துக் கொள்ள வேண்டும். சில காரியங்களில் தவிர்க்க முடியாத தாமதங்கள் ஏற்படும்.

சிம்மம்

இந்த வாரம் சிம்மம் ராசியினருக்கு ஆடை, ஆபரணச் சேர்க்கை உண்டு. குரு தெளிவான சிந்தனையை ஏற்படுத்தி, காரிய வெற்றி தருவார். வியாபாரிகள் நீண்ட காலமாக மனதில் நினைத்த திட்டங்களை நிறைவேற்றுவார்கள். உத்தியோகஸ்தர்கள் நிர்வாகம் மூலம் எதிர்பாராத நன்மைகளை பெறுவர். மாணவர்கள் தங்கள் பாடங்களில் நல்ல மதிப்பெண் பெறுவர். ஆபரணச் சேர்க்கைகள் மற்றும் வாகன சேர்க்கைகள் உண்டாகும். குடும்பத்தில் அமைதி நிலவும். குடும்ப உறுப்பினர் களின் ஒத்துழைப்பு கிடைக்கும். வெளிநாட்டு வேலை மற்றும் வர்த்தக தொடர்புகளில் உள்ளவர்கள் மிகவும் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும். பிரயாணங்களில் கவனம் தேவை.

கன்னி

இந்த வாரம் கன்னி ராசியினர் தெய்வ வழிபாடுகளில் ஈடுபடுவர். சுக்கிரன், புதன் பேச்சில் இனிமை கூட்டி காரிய வெற்றி ஏற்படுத்துவார்கள். வியாபாரிகள் திட்டமிட்ட வகையில் தொழில் விருத்தி செய்யலாம். உத்தியோகஸ்தர்கள் நிதானமாகவும், சமயத்திற்கு ஏற்பவும் நடந்து கொள்ளவும். மாணவர்கள் உயர்கல்வி பெறுவதற்கான தொழில்நுட்ப ஆலோசனைகளை பெறுவார்கள். குடும்ப நிலைமை மேம்படும். செலவுகள் கட்டுக்கடங்கி இருக்கும். சுபகாரியப் பேச்சுக்கள் நல்ல முடிவுக்கு வரும். புதிய தொழிலை நடத்த நினைப்பவர்களுக்கு அதற்கான வழி பிறக்கும். பிறருடன் பேசும் பொழுது கவனம் தேவை வேலை பார்க்கும் இடத்தில் அஜாக்கிரதையாக இருக்கக் கூடாது.

துலாம்

இந்த வாரம் துலாம் ராசியினருக்கு நண்பர்கள் மூலம் நன்மைகள் ஏற்படும். சுக்கிரன், சந்திரன் ஆகிய கிரகங்கள் நல்ல, புதிய தொடர்புகளை ஏற்படுத்துவார்கள். பணி உயர்வை எதிர்பார்த்த உத்தியோகஸ்தர்களுக்கு அது கிடைக்கும். மாணவர்கள் கல்விச் சுற்றுலா சென்று அறிவு விருத்தி அடைவர். தொழிலில் புதுமையான மாற்றங்கள் ஏற்பட்டு உத்வேகத் தோடு செயல்படும். தேவையற்ற செலவுகள் வந்து முக்கியமான விஷயத்திற்காக வைத்திருந்த பணத்தை இழக்க வைக்கும். கலைத்துறையில் உள்ளவர்கள் கவனத்தோடு செயல்பட வேண்டும். அவசரத்தால் சில வாய்ப்புகளை இழக்க நேரிடலாம்.

விருச்சிகம்

இந்த வாரம் விருச்சிகம் ராசியினர் மனதில் உற்சாகமாக செயல்பட்டு காரிய வெற்றி பெறுவார்கள். ராசி அதிபதியும், சுப கிரகங்களும் வலுவாக இருப்பது நன்மை தரும். உத்தியோகஸ்தர்கள் தங்கள் பணிகளை மற்றவர்களிடம் ஒப்படைப்பது கூடாது. மாணவர்கள் விளையாட்டு மற்றும் படிப்பில் சம அளவு கவனம் செலுத்த வேண்டும். இதுவரை மன அமைதியை இழந்தவர்கள் இனி புதிய செய்திகளால் உற்சாகம் பெறுவார்கள். இந்த வாரம் புதிய முயற்சிகளில் ஈடுபடலாம். பிரமுகர்களின் நட்பு கிடைக்கும். பொது வாழ்வில் உள்ளவர்களுக்கு சிறப்பான பதவிகள் கிடைக்கும். சுப காரியமுயற்சிகள் தடைகள் ஏற்பட்டு பலனளிக்கும். முயற்சியை விட்டு விட வேண்டாம்.

தனுசு

இந்த வாரம் தனுசு ராசியினர் எதிர்பார்த்த தன வரவை பெறுவர். சுக்கிரன், சந்திரன் ஆகிய கிரகங்கள் மனதில் எழுந்த விருப்பத்தை பூர்த்தி செய்வார்கள். தொழில் விரிவாக்கத்தில் கவனமாக செயல்பட வேண்டும். உத்தியோகஸ்தர்கள் மனநிம்மதி பெறுவார்கள். மாணவர்கள் புதிய நண்பர்கள் மூலம் எதிர்கால நலனுக்கான செய்திகளை பெறுவார்கள். உறவினர்களிடையே கலந்து பழகும் சந்தர்ப்பங்களும் உண்டாகும். ஒன்றுக்கும் மேற்பட்ட வருமான வாய்ப்பு உண்டு. உறவுகளை அலட்சியப்படுத்த வேண்டாம். கணவன் மனைவியிடையே சில பிரச்சினைகள் வந்து செல்லலாம். வேலைச் சுமையும் மேலதி காரிகளின் அழுத்தமும் சில சமயங்களில் நிதானம் இழக்க வைக்கும்.

மகரம்

இந்த வாரம் மகரம் ராசியினருக்கு மகிழ்ச்சியான சம்பவங்கள் நடந்தேறும். சுக்கிரன், செவ்வாய் பல நல்ல விஷயங்களை கொண்டு வந்து சேர்ப்பார்கள். உத்தியோகஸ்தர்களுக்கு உயர் அதிகாரிகள் அல்லது நிர்வாகத்தின் சார்பில் பாராட்டு கிடைக்கும். மாணவர்கள் வெளிநாட்டு கல்வி பெறுவதற்கான கூடுதல் தகவல்களை பெறுவார்கள். பழைய வாகனங்களைக் கொடுத்துவிட்டு புதிய வாகனங்களை வாங்குவீர்கள். சிறிய மகிழ்ச்சிக்குரிய பிரயாணங்கள் ஏற்படும். கடன் பிரச்னையால் சில பிரச்னைகள் ஏற்படலாம். சிலருக்கு தங்கள் உணவு பழக்கத்தால் சில தவிர்க்க முடியாத உடல்நல பிரச்னைகள் ஏற்படும். வேலை செய்யும் இடத்தில் மற்றவர்களை அனுசரித்து நடந்து கொள்ளவும்.

கும்பம்

இந்த வாரம் கும்பம் ராசியினருக்கு பல சிக்கல்கள் அகன்று மனதில் நம்பிக்கை உருவாகும். குரு, சுக்கிரன் இல்லத்தில் மகிழ்ச்சியை ஏற்படுத்துவார்கள். உத்தியோகஸ்தர்கள் புதிய தொழில்நுட்பங்களை கற்கும் சூழல் ஏற்படும். மாணவர்கள் பெற்றோர் சொல் கேட்டு நடப்பது நல்லது. அனாவசியமான செலவுகள் குறையும். யோசனை செய்து செலவு செய்தால் பொருளாதாரப் பிரச்னைகள் வராது. குடும்பத்தில் யாருக்கேனும் ஒருவருக்கு உடல் நலப் பிரச்னைகள் ஏற்படலாம். மற்றவர்களுடன் தேவையில்லாத வாக்குவாதங்களை ஏற்படுத்த வேண்டாம். வேலைச்சுமை அதிகமாக இருக்கும். வழக்குகள் சாதகமாக முடிவாவதில் தாமதம் ஏற்படும்.

மீனம்

இந்த வாரம் மீனம் ராசியினர் மனதில் தெளிவான சிந்தனை ஏற்படும். ராசி அதிபதி வலுவாக இருப்பதால் நினைத்த காரியங்களில் வெற்றி கிடைக்கும். வியாபாரிகள் தொழில் விரிவாக்க பணியை செய்யலாம். குழந்தைகளால் மகிழ்ச்சி உண்டு. கலைத்துறை வாய்ப்புகள் அதிகரிக்கும் வருமானமும் அதிகரிக்கும். உத்தியோகஸ்தர்களுக்கு சக ஊழியர் உதவியால் நன்மை உண்டு. மாணவர்கள் விளையாட்டில் திறமைகளை வெளிப்படுத்தி வெற்றி பெறுவர். கூர்மையான சிந்தனையும் முன்யோசனையும் வழிநடத்தும். சிலருக்கு எந்தப் பிரச்னையிலும் அவசரப்பட்டு முடிவெடுக்க வேண்டாம். சில விஷயங்களில் நீங்களாக கருத்து சொல்ல வேண்டாம்.

இதனையும் படியுங்கள் : விருச்சிக ராசிக்கு பெயர்ச்சியாகும் சூரிய பகவான், உங்கள் ராசிக்கான பலன் இதோ!!

Recipes AMP · விரைவு பார்வை
முழுக் கட்டுரை