ஜோதிடத்தில் கிரகங்களின் இயக்கம் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது. கிரகங்கள் குறிப்பிட்ட கால இடைவெளியில் தங்கள் ராசியை மாற்றுகின்றன. அந்த வரிசையில் ஜோதிடத்தில், சூரியன் கிரகங்களின் ராஜாவாகக் கருதப்படுகிறார். கிரகங்களின் அரசனான சூரியன் ஆற்றல், தைரியம், வீரம், தலைமைத்துவம், புகழ் மற்றும் தந்தையர் பதவியின் காரணியாகக் கருதப்படுகிறார். இவர் ஒவ்வொரு மாதமும் ஒரு குறிப்பிட்ட காலத்தில் ஒரு ராசியிலிருந்து மற்றொரு ராசிக்குப் பிரவேசிக்கிறார். அந்த வகையில் நவம்பர் 16 ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை சூரியன் துலாம் ராசியை விட்டு வெளியேறி செவ்வாய் கிரகத்தின் விருச்சிக ராசியில் பெயர்ச்சி ஆவார். இந்த சூரியன் பெயர்ச்சி யாருக்கெல்லாம் நன்மை பயக்கும் யாரெல்லாம் சற்று கவனமாக இருக்க வேண்டும் என்பது குறித்து இந்த ஆன்மிகப் பதிவில் பார்ப்போம்.
மேஷம்

மேஷ ராசிக்கு சூரியன் பெயர்ச்சி நல்ல நேரத்தை கொண்டு வரும். நிலுவையில் உள்ள உங்கல் வேலை வேலைகள் நிறைவடையும். நிதி நிலை வலுவடையும். வேலை தேடிக்கொண்டிருக்கும் மேஷ ராசிக்காரர்களுக்கு நல்ல வேலை கிடைக்கும். சமூகத்திலும் குடும்பத்திலும் மரியாதையை அதிகரிக்கும். நிதி ஆதாயத்திற்கு இது நல்ல நேரமாக இருக்கும். குழந்தைகள் தொடர்பான நற்செய்தி கிடைக்கும். காதல் வாழ்க்கையில் இனிமை ஏற்படும். வெளிநாட்டு வணிகம் செய்பவர்களுக்கு லாபம் கிடைக்கும்.
ரிஷபம்

சூரியன் பெயர்ச்சி இந்த நேரம் உங்களுக்கு சாதகமான மாற்றங்களை அளிக்கும். உங்கள் தொழிலில் நிலவும் மந்தநிலை முடிவுக்கு வருவது போல் தோன்றும். தன்னம்பிக்கை, தைரியம் அதிகரிக்கும். உங்கள் கடின உழைப்பின் மூலம் சமூகத்தில் ஒரு தனித்துவமான அடையாளத்தை நிலைநாட்டுவீர்கள். உங்கள் ஆதிக்கம் அதிகரிக்கும். ஆளுமை மேம்படும். குடும்ப உறுப்பினர்களுடனான உறவுகளும் மேம்படும். வாழ்க்கைத் துணையின் ஆதரவு கிடைக்கும். நண்பர்கள் மூலம் மகிழ்ச்சி தரும் செய்தி கிடைக்கும்.
மிதுனம்

சூரியன் பெயர்ச்சி மிதுன ராசிக்காரர்களுக்கு பணம் சம்பாதிக்க சிறந்த வாய்ப்புகளை உருவாக்குகிறது. பங்குச் சந்தையில் லாபம் அதிகரிக்கும். வீடு, வாகனம் வாங்கும் யோகம் உண்டாகும். சூரியன் பெயர்ச்சியின் தாக்கத்தால் நீண்ட நாள் ஆசைகள் இப்போது நிறைவடையும். உங்கள் உடல்நலம் நன்றாக இருக்கும். வருமானம் உயரும், புதிய வருமான வாய்ப்புகள் உருவாகும். திருமண வாழ்க்கையில் அமைதியும் மகிழ்ச்சியும் அதிகரிக்கும். நீண்ட நாட்களாக நிலுவையில் இருந்த வழக்குகள் முடிவுக்கு வரும்.
கடகம்

சூரியன் பெயர்ச்சி காலம் கடக ராசிக்காரர்களுக்கு சிரமங்கள் நிறைந்ததாக இருக்கலாம். உறவுகளில் அதிகரித்து வரும் பதட்டங்கள் மனதில் அமைதியின்மையை ஏற்படுத்தும். வணிகத்தில் மந்தநிலையையும் சந்திக்க நேரிடும். வேலை தேடுபவர்களுக்கு எதிர்பார்த்த வேலை அமைய தாமதம் ஏற்படும். எதிர்பார்த்த பொருளாதார முன்னேற்றம் இருக்காது. வீண் வழக்குகளில் ஈடுபடுவதால் தேவையற்ற பிரச்சினைகளை சந்திக்க நேரிடும். கடன் விஷயங்களில் கவனம் தேவை.
சிம்மம்

சூரியன் பெயர்ச்சி சிம்ம ராசிக்காரர்களுக்கு நன்மை பயக்கும். சூரியன் இந்த ராசியின் அதிபதியாக இருப்பதால், சூரியன் அவர்களுக்கு விரும்பிய நன்மைகளைத் தரக்கூடும். சூரியனின் செல்வாக்கு உங்கள் தந்தையுடனான உங்கள் உறவை வலுப்படுத்தும். முதலீடுகளில் இருந்து நல்ல லாபம் கிடைக்கும். வேலை தேடுபவர்களுக்கு உயர்ந்த சம்பள வேலை வாய்ப்பு கிடைக்கும். பூர்வீக சொத்து தொடர்பாக இருந்த பிரச்சனைகளில் இருந்து தீர்வு காண்பீர்கள். செலவுகளை சமாளிக்க போதுமான வருமானம் கிடைக்கும். புது மனை வாங்குவதற்கான வாய்ப்பு அதிகம்.
கன்னி

இந்த நேரம், மூதாதையர் சொத்து தொடர்பான தகராறுகளை நீங்கள் தீர்க்க வேண்டிய நேரமாக இருக்கும். இந்த நேரத்தில், வேலையில் நடந்து வரும் தகராறுகள் சுமுகமாக தீர்க்கப்படும். புதிய வேலைக்கான உங்கள் ஆசை நிறைவேறும். உங்கள் தன்னம்பிக்கை அதிகரிக்கும். இலக்குகளை எளிதாக அடைவீர்கள். குடும்பத்தில் மகிழ்ச்சியும் அமைதியும் இருக்கும். குழந்தைகள் மூலம் நல்ல செய்தி கிடைக்கும். வீடு, வாகனம் வாங்கும் வாய்ப்பு கிடைக்கும். பங்குச் சந்தை, லாட்டரி போன்றவற்றில் லாபம் கிடைக்கலாம்.
துலாம்

சூரிடன் பெயர்ச்சியால் வெளிநாட்டில் வேலை செய்வதற்கான துலாம் ராசிக்காரர்களின் ஆசை நிறைவேறும். இந்த நேரத்தில் நீங்கள் புதிய நபர்களையும் சந்திப்பீர்கள், இது உங்கள் தொழிலை விரிவுபடுத்த உதவும். தன்னம்பிக்கை மற்றும் தைரியம் உயரும். புதிய திட்டங்களில் பங்கேற்கும் வாய்ப்பும் கிடைக்கும். தொழிலில் முன்னேற்றமும் தன்னம்பிக்கையும் அதிகரிக்கும். சக ஊழியர்களிடமிருந்து உங்களுக்கு ஆதரவு கிடைக்கும். கடன் கொடுத்த இடத்தில் கேட்காமலேயே பணம் திரும்ப கிடைக்கும்.
விருச்சிகம்

விருச்சிகத்தில் தான் சூரியன் பெயர்ச்சி ஆகவுள்ளார். இதனால் வேலை கிடைப்பதில் உள்ள சிக்கல்கள் தீரும். வேலையில் மூத்தவர்கள் மற்றும் இளையவர்களிடமிருந்து உங்களுக்கு ஆதரவு கிடைக்கும். இருப்பினும், உங்கள் தொழிலில் புதிய நபர்களைச் சேர்ப்பது பாதகமாக இருக்கலாம். நிறைவேறாமல் நிலுவையில் இருக்கும் பணிகள் வெற்றிகரமாக நடந்துமுடியும். வேலையில் நல்ல பெயர் கிடைக்கும். பணியிடத்தில் உங்கள் செயல்திறன் மேம்பட்டு, மேலதிகாரிகளின் பாராட்டு கிடைக்கும்.
தனுசு

சூரியன் பெயர்ச்சியின் தாக்கத்தால் தனுசு ராசிக்கு நேரம் சாதாரணமாக இருக்கும். வேலையில் மன அழுத்தம் உங்கள் மனநிலையை பாதிக்கும். உங்கள் முயற்சிகள் புதிய வாய்ப்புகளுக்கு வழிவகுக்கும். மேல் அதிகாரிகளில் பாராட்டை பெறுவீர்கள். வணிகத்தில் புதிய ஒப்பந்தங்கள் கையெழுத்தாகும். தொழில் ரீதியாக இவர்களுக்கு மனதில் குழப்பங்கள் அவ்வப்போது தோன்றி மறையும். வார்த்தைகளில் கவனமாக இருக்க வேண்டும். தன்னம்பிக்கையுடன் சவால்களை எதிர்கொண்டால் வெற்றி நிச்சயம்.
மகரம்

சூரியன் பெயர்ச்சியின் தாக்கத்தால் மகர ராசிக்காரர்களுக்கு நீதிமன்ற வழக்குகள் தொடர்பாக பதட்டம் ஏற்படலாம். வேலை மாற்றத்தை நீங்கள் பரிசீலித்து கொண்டிருந்தால், அதற்கு அதிக முயற்சிகள் எடுக்க வேண்டியிருக்கும். உறவுகளில் கருத்து வேறுபாடுகள் இருக்கலாம். தொழில் ரீதியாக ஒரு சரியான முடிவை எடுக்க முடியாத ஒரு குழப்பத்தில் அவர்கள் இருக்கக்கூடிய நிலை வரலாம். யாரிடமும் வீண் வாக்குவாதமும் யாரிடமும் வாக்குறுதிகளை செய்யாமல் இருக்க வேண்டும்.
கும்பம்

இந்த ராசியில் பிறந்தவர்களுக்கு உடல்நலப் பிரச்சினைகள் ஏற்படலாம். பருவகால நோய்கள் குறிப்பாக தாக்கத்தை ஏற்படுத்தும், எனவே எச்சரிக்கையாக இருங்கள். மூத்த குடும்ப உறுப்பினர்கள் மற்றும் மூத்த சகோதரர்களுடன் அதிகரித்து வரும் வேறுபாடுகளைத் தவிர்க்கவும். வேலையில் எதிர்பாராத குழப்பங்களும், எதிர்பாராத எதிரிகள் தொல்லையால் அவதிக்கு செல்லக்கூடிய ஒரு நிலையும் உருவாகலாம். நண்பர்கள் இடையே சற்று கவனமாக இருக்க வேண்டும். பேச்சில் நிதானத்தை கடைபிடிப்பது மன நிம்மதியை உண்டாக்கும்.
மீனம்

சூரியன் பெயர்ச்சி மீன ராசிக்காரர்களுக்கு மகிழ்ச்சியை அளிக்கும். வாழ்க்கை துணையுடனான புரிதல் அதிகரிக்கும். இந்த காலத்தில் உங்கள் வருமானம் அதிகரிக்கும். வணிகத்தில் லாபம் பெருகும். வெளிநாடுகளுக்கும் பயணம் செல்ல வாய்ப்பு கிடைக்கும். வெளிநாட்டு விவகாரங்கள் நல்லபடியாக முடியும். வணிகத்தில் லாபம் அதிகரிக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சியும் அமைதியும் இருக்கும். திருமணமாகாதவர்களுக்கு நல்ல வரன் கிடைக்கும். சமூகத்தில் அந்தஸ்து உயரும். தொழிலில் வளர்ச்சி காணலாம்.
இதனையும் படியுங்கள் : நடக்கவிருக்கும் சுக்கிர பெயர்ச்சி இனி இந்த ராசிகளுக்கு ராஜயோகம் தான்!!


