Advertisement
அசைவம்

செட்டிநாடு ஆம்லெட் பிரியாணி செய்வது எப்படி ?

Advertisement

பொதுவாக யாரிடம் சென்று உங்களுக்கு பிடித்த உணவு எது என்று கேட்டால் நாம் கேட்கும் பாதி நபர்கள் அவர்களுக்கு பிடித்த உணவு பிரியாணி என்று தான் கூறுவார்கள். ஏனென்றால் அந்த அளவுக்கு பிரியாணி மிகவும் பிரபலமான ஒரு உணவாக இன்று காலகட்டங்களில் வலம் வருகிறது. இந்த பிரியாணியை பல வகையில் நாம் செய்து சாப்பிட்டு வருகிறோம். சிலர் பிரியாணிக்காக உயிரே விடும் அளவிற்கு அதை நேசிக்கவும் செய்கிறார்கள். அப்பட்ட பிரியாணியை இன்று நாம் ஒரு வித்தியாசமான முறையில் செய்ய இருக்கிறாம்.

இதையும் படியுங்கள் : தள்ளுவண்டி கடை காரசாரமான மூளை முட்டை பொரியல் செய்வது எப்படி ?

Advertisement

ஆம், இன்று ஆம்லெட் பிரியாணி செய்ய போகிறோம் இதை ஒரு முறை உங்க வீட்டில் உள்ளவர்களுக்கு நீங்கள் சமைத்து கொடுங்கள் உங்கள் வீட்டில் உள்ள சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவருமே இந்த ஆம்லெட் பிரியாணிக்கு முற்றிலும் அடிமையாக இருப்பவர்கள். அந்த அளவிற்கு தாருமாரான சுவையும், ருசியும் கொண்டிருக்கும் இந்த இந்த ஆம்லெட் பிரியாணியை எப்படி செய்வது, தேவையான பொருட்கள், செய்முறைகள் என அனைத்தையும் இந்த சமையல் குறித்த தொகுப்பில் நாம் காணலாம் வாருங்கள்.

ஆம்லெட் பிரியாணி | Omelette Biriyani Recipe in Tamil

Print Recipe
இன்று ஆம்லெட் பிரியாணி செய்ய போகிறோம் இதை ஒரு முறை உங்க வீட்டில் உள்ளவர்களுக்கு நீங்கள் சமைத்து கொடுங்கள் உங்கள் வீட்டில் உள்ள சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவருமே இந்த ஆம்லெட் பிரியாணிக்கு முற்றிலும் அடிமையாக இருப்பவர்கள். அந்த அளவிற்கு தாருமாரான சுவையும், ருசியும் கொண்டிருக்கும் இந்த இந்த ஆம்லெட் பிரியாணியை எப்படி செய்வது, தேவையான பொருட்கள், செய்முறைகள் என அனைத்தையும் இந்த சமையல் குறித்த தொகுப்பில் நாம் காணலாம் வாருங்கள்.
Course Main Course
Cuisine Indian, TAMIL
Keyword Omelette biriyani, ஆம்லெட் பிரியாணி
Prep Time 20 minutes
Cook Time 30 minutes
Total Time 50 minutes
Servings 3 People
Calories 120

Equipment

  • 1 கடாய்
  • 1 குக்கர்
  • 2 பவுள்

Ingredients

ஆம்லெட் செய்ய

  • 4 முட்டை
  • ½ பெரிய வெங்காயம் பொடியாக நறுக்கியது
  • 2 பச்சை மிளகாய்
  • கொத்த மல்லி சிறிது
  • உப்பு தேவையான அளவு

பிரியாணிக்கு

  • ஆம்லெட் மீடியம் சைஸ் துண்டு
  • 2 tbsp எண்ணெய்
  • 2 tbsp நெய்
  • 2 பிரியாணி இலை
  • 1 துண்டு பட்டை
  • 4 கிராம்பு
  • 3 ஏலக்காய்
  • 1 அன்னாச்சி பூ
  • 2 பெரிய வெங்காயம் நீள்வாக்கில் நறுக்கியது
  • 1 tbsp இஞ்சி பூண்டு விழுது
  • ¼ tbsp மஞ்சள் தூள்
  • ½ tbsp மல்லி தூள்
  • 1 tbsp கரம் மசாலா
  • 1 tbsp மிளகாய் தூள்
  • 1 தக்காளி நீள்வாக்கில் நறுக்கியது
  • 2 tbsp தயிர்
  • 1 கைப்பிடி புதினா
  • 1 கைப்பிடி கொத்த மல்லி
  • 2 பச்சை மிளகாய்

Instructions

  • முதலில் பிரியாணிக்கு நாம் எடுத்து வைத்துள்ள பாஸ்மதி அரிசியை இரண்டு முறை தண்ணீரில் அலசி கொண்டு 30 நிமிடம் தண்ணீரில் ஊற வைக்கவும். அதன்பின் பிரியாணிக்கு தேவையான ஆம்லெட் செய்ய வேண்டும்.
  • முட்டைகளை ஒரு பவுளில் உடைத்து ஊற்றி அதனுடன் பச்சை மிளகாய், பொடியாக நறுக்கி வெங்காயம், கொத்தமல்லி, மற்றும் உப்பு சேர்த்து நான்கு அடித்துக் கொண்டு அடுப்பில் ஒரு பேனை வைத்து சிறிதளவு எண்ணெய் ஊற்றி கொள்ளவும்.
    Advertisement
  • பின் எண்ணெய் காய்ந்தவுடன், முட்டையை ஊற்றி இரு பக்கமும் திருப்பி போட்டு ஆம்லெட் செய்து கொள்ளவும். பின் ஆம்லேட்டை மீடியம் சைஸ் வெட்டிக் கொள்ளவும். பின்பு குக்கரை அடுப்பில் வைத்து எண்ணெய் மற்றும் நெய் ஊற்றி கொள்ளவும்.
  • அதன் பின் எண்ணெய் சூடறியவுடன் அதில் பிரியாணி இலை, பட்டை, கிராம்பு, ஏலக்காய் மற்றும் அண்ணாச்சி பூ போன்ற பொருட்களை சேர்த்து விட்டு ஒரு 15 நொடி வதக்கி விட்டு இதனுடன் நீளவாக்கில் வெட்டி வைத்திருக்கும் வெங்காயம் மற்றும் இஞ்சி பூண்டு விழுது சேர்த்து நான்கு வதக்கிக் கொள்ளவும்.
  • வெங்காயம் பொன்னிறமாக வந்ததும் இதனுடன் மஞ்சள் தூள், மல்லி தூள், கரம் மசாலா மற்றும் மிளகாய் தூள் சேர்த்து கிளறி விடவும். அதன்பின் நீளவாக்கில் வெட்டி வைத்திருக்கும் தக்காளியும் இதனுடன் சேர்த்து நன்கு வதக்கிக் கொள்ளவும்.
  • தக்காளி மென்மையாக வெந்து மசிந்து வந்ததும் தயிர், புதினா இலை, கொத்தமல்லி மற்றும் பச்சை மிளகாய் சேர்த்து நன்கு வதக்கி கொள்ளவும். அனைத்து பொருட்களும் நன்றாக வதங்கியவுடன் நாம் வெட்டி வைத்திருக்கும் ஆம்லெட்டை இதனுடன் சேர்த்து இரண்டு முறை கிளறி விடவும்.
  • அதன் பின் நம் ஊறவைத்த பாஸ்மதி அரிசியும் இதனுடன் சேர்த்து தேவையான அளவு தண்ணீர் போற்றி அதன் பின் தேவையான அளவு உப்பு சேர்த்து ஒரு விசில் வரும் வரை மிதமான தீயில் அடுப்பில் வைத்துக் கொள்ளுங்கள்.
  • கடைசியாக ஒரு விசில் வந்ததும் குக்கரின் பிரெஷரை ரிலீஸ் செய்து மூடியை திறந்து கொண்டு பிரியாணியை மிக்ஸ் செய்து கொள்ளுங்கள் அவ்வளவுதான் சுவையான ஆம்லெட் பிரியாணி இனிதே தயாராகிவிட்டது.

Nutrition

Serving: 3people | Calories: 120kcal | Carbohydrates: 40g | Protein: 13g | Fat: 17.5g | Saturated Fat: 2.3g | Cholesterol: 21.2mg | Sodium: 128mg | Potassium: 67mg
Advertisement
Prem Kumar

Recent Posts

நம் வீட்டில் பண வரவு அதிகரிக்க உங்களிடம் இந்த 3 பொருட்கள் இருந்தால் மட்டும் போதும்!

பொதுவாக எல்லோருடைய வீட்டிலும் தன தானியங்கள் நிறைந்திருக்க வேண்டும் என்று கூறுவார்கள். தனம் என்றால் பணம் என்றும் தானியங்கள் என்றால்…

3 மணி நேரங்கள் ago

சப்பாத்திக்கு கிரேவி செய்ய உருளைக்கிழங்கு இல்லைனா இந்த மாதிரி பாம்பே சட்னி செஞ்சு பாருங்க

நம்ம வீட்ல எந்த காய்கறிகளும் இல்லாத சமயத்துல கடலை மாவு மட்டும் இருந்தாலே போதும் சூப்பரா சப்பாத்தி பூரி இட்லி…

4 மணி நேரங்கள் ago

காரசாரமான ருசியில் குண்டூர் ஸ்டைல் கார இட்லி ஒரு தரம் இப்படி செய்து சாப்பிட்டு பாருங்க!

பொடி இட்லி சாப்பிடணும் அப்படின்னு நீங்க ஆசைப்பட்டீங்கன்னா இந்த மாதிரி குண்டூர் ஸ்டைலில் சூப்பரான ஒரு காரப்பொடி ரெடி பண்ணி…

4 மணி நேரங்கள் ago

மாலை நேர ஸ்நாக்ஸாக சாப்பிட ருசியான மொறு மொறு வாழைக்காய் கட்லெட் இப்படி ட்ரை பண்ணி பாருங்க!

முக்கனிகளுள் ஒன்றாக வாழை உள்ளது. வாழையின் இலை முதல் பழம் வரை பல்வேறு மருத்துவ குணங்களையும் நன்மைகளையும் உள்ளடக்கிய ஒன்றாக…

5 மணி நேரங்கள் ago

மாலை நேர ஸ்நாக்ஸாக சாப்பிட ருசியான மொறு மொறு பலாக்கொட்டை கட்லெட் இப்படி ட்ரை பண்ணி பாருங்க!

சமோசா, பப்ஸ், பஜ்ஜி, போண்டா, மற்றும் வடை இந்த மாலை நேர சிற்றுண்டிகளின் வரிசையில் கட்லெட்க்கும் முக்கிய இடம் உண்டு.…

5 மணி நேரங்கள் ago

கையில் கயிறை எத்தனை நாட்கள் வரை கட்ட வேண்டும்

பொதுவாகவே நாம் அனைவரும் வாழ்வில் மகிழ்ச்சியாகவும் மன நிம்மதியுடனும் வாழ வேண்டும் என்று தான் விரும்புகின்றோம். இதனை அடிப்படையாக வைத்தே…

8 மணி நேரங்கள் ago