மதிய உணவிற்கு சுட சுட ஒன் பாட் புதினா புலாவ் இப்படி ஒரு முறை செய்து பாருங்கள்!!

வேலைக்கு செல்கிறவர்களுக்கு மற்றும் பள்ளிக்கு செல்லும் குழந்தைகளுக்கு மதிய சாப்பாடு செய்து கொடுப்பார்கள். இதில் அதிகமாக செய்ய கூடிய உணவாக தயிர் சாதம், லெமன் சாதம், புளி குழம்பு சாதம் போன்றவை செய்து கொடுப்போம். ஆனால் இதையே சாப்பிட்டு வந்தால் போர் அடித்து விடும் அல்லவா. அதனால் அவ்வப

By Prem Kumar · 15/9/2025

வேலைக்கு செல்கிறவர்களுக்கு மற்றும் பள்ளிக்கு செல்லும் குழந்தைகளுக்கு மதிய சாப்பாடு செய்து கொடுப்பார்கள். இதில் அதிகமாக செய்ய கூடிய உணவாக தயிர் சாதம், லெமன் சாதம், புளி குழம்பு சாதம் போன்றவை செய்து கொடுப்போம். ஆனால் இதையே சாப்பிட்டு வந்தால் போர் அடித்து விடும் அல்லவா. அதனால் அவ்வப்போது நம் பிள்ளைகளுக்கு வழக்கமாக நாம் செய்து கொடுக்கும் லஞ்ச் பாக்ஸ் ரெசிபிகளுக்கு மாற்று உணவுக்கான நமது தேடல் தீராதது. பொதுவாகவே, தக்காளி சாதம், சாம்பார், சாதம், தயிர் சாதம் எல்லாம் அனைவரும் விரும்பி சாப்பிடும் ஒரு உணவு வகையாகும்.

இந்த சாதத்திற்கு எல்லாம் பெரிய சைடிஸ் எதுவும் தேவையில்லை. வெறும் அப்பளம் மட்டும் இருந்தாலே போதும். அந்த மாதிரி ஈசியான, நாவிற்கு ருசியான ஒன் பாட் புதினா புலாவ் எப்படி செய்வதென்று பற்றி தான் இந்த பதிவில் பார்க்கப்போறோம். புதினா நறுமனத்திற்கு மட்டும் சேர்த்து கொள்ளமால் அதை சாப்பிட்டால் உடலுக்கு மிகவும் நல்லது. குறிப்பாக கோடையில் வெப்பநிலை உயராமல் உங்கள் உடலைப் பாதுகாக்க இது பயன் உள்ளதாக இருக்கும்.

புதினாவில் மிக எளிதாக செரிமானமாகி, பசியை தூண்டும். புதினாவில் உள்ள ரோஸ்மரினிக் அமிலம் என்ற ஆன்டி-ஆக்ஸிடன்ட் ஆரோக்கியமான சருமத்தை மேம்படுத்துகிறது. புதினா சாப்பிடுவது உங்களுக்கு உடல் ரீதியாகவும் மன ரீதியாகவும் புத்துணர்ச்சி அளிக்கிறது. உங்கள் குழந்தைகளோட லஞ்ச் பாக்ஸ்க்கு ஒவ்வொரு நாளும் வித்தியாசமா கலவை சாதம் மாதிரி ஏதாவது செஞ்சி கொடுக்கனும் நினைத்தால் இவ்வளவு ஆரோக்கியம் நிறைந்த புதினாவில் சாதம் செய்து கொடுத்து விடுங்கள்.

குழந்தைகளும் டிபன் பாக்ஸ் காலி பண்ணிட்டு தான் வீட்டுக்கு கொண்டு வருவாங்க அந்த அளவுக்கு ஒரு சூப்பர் டேஸ்டான ரெசிபி. உங்க குழந்தைகளின் லஞ்ச் பாக்ஸ்க்கு கொடுத்துட்டு நீங்களும் சாப்பிட்டு பாருங்க உங்களுக்கும் ரொம்ப ரொம்ப பிடிக்கும். அவ்வப்போது சற்று வித்தியாசமாக குழந்தைகளுக்கு ஏதேனும் செய்து கொடுக்கலாம் என்று நினைத்தால் அதற்கு இது தான் சரியான ரெசிபி. இப்போது சுவையான ஒன் பாட் புதினா புலாவ் எப்படி செய்வதென்று பார்ப்போம்.

இதனையும் படியுங்கள் : மதிய உணவிற்கு சுட‌ சுட ஒன் பாட் கத்திரிக்காய் சாதம் இப்படி ஒரு முறை செய்து பாருங்கள்!!

Recipes AMP · Quick view
View full