- Prep
- 10 min
- Cook
- 10 min
- Total
- 20 min
- Serves
- 4
- Cuisine
- Indian, TAMIL
- Course
- LUNCH
வேலைக்கு செல்கிறவர்களுக்கு மற்றும் பள்ளிக்கு செல்லும் குழந்தைகளுக்கு மதிய சாப்பாடு செய்து கொடுப்பார்கள். இதில் அதிகமாக செய்ய கூடிய உணவாக தயிர் சாதம், லெமன் சாதம், புளி சாதம் போன்றவை செய்து கொடுப்போம். ஆனால் இதையே சாப்பிட்டு வந்தால் போர் அடித்து விடும் அல்லவா. அதனால் அவ்வப்போது நம் பிள்ளைகளுக்கு வழக்கமாக நாம் செய்து கொடுக்கும் லஞ்ச் பாக்ஸ் ரெசிபிகளுக்கு மாற்று உணவுக்கான நமது தேடல் தீராதது. அந்த வகையில் நாம் இன்று இங்கு காண இருப்பது ஒரு வித்தியாசமான மற்றும் மிகவும் சுவையான லஞ்ச் பாக்ஸ் ரெசிபியான ஒன் பாட் கத்திரிக்காய் சாதம்.
பொதுவாகவே கத்தரிக்காய் குழம்பு, கூட்டு, பொரியல் என்று வைத்து தான் நீங்கள் சாப்பிட்டு இருப்பீர்கள். அப்படியானால் ஒன் பாட் கத்தரிக்காயில் சாதம் செய்து சாப்பிட்டு இருக்கிறீர்கள். கர்நாடகாவில் இதை வாங்கிப் பார்த்து என்று சொல்லுவார்களாம். ஒன் பாட் கத்திரிக்காய் சாதம் ரெசிபி செய்வது எவ்வளவு எளிது என்று தெரியுமா? கத்தரிக்காய் அதன் ஊட்டச்சத்து மதிப்பு மற்றும் ஆக்ஸிஜனேற்ற பண்புகளுக்கு பெயர் பெற்றது. இதில் உள்ள நீர்ச்சத்து, சருமத்தை மென்மையாக்கும். கத்திரிக்காயில் வைட்டமின் சி, மற்றும் இரும்புச் சத்து உள்ளது. கத்திரிக்காய் நரம்புகளுக்கு வலுவூட்டவும், சளி, இருமலைக் குறைக்கவும் செய்கிறது.
கதத்திரிக்காய் சாப்பிட்டால் இதயநோய், ரத்த நாளங்களில் ஏற்படும் நோய்கள் மற்றும் மாரடைப்பு இதையெல்லாம் தடுக்குகிறது. இதை அரிசியுடன் கலந்து சாப்பிடுவது வயிற்றுக்கும் ஆரோக்கியத்திற்கும் நல்லது. இந்த ரெசிபிக்காக பிரத்தியேகமாகப் பயன்படுத்தப்படும் அனைத்து இந்திய மசாலாப் பொருட்களின் வாசனையும் ஒன்றோடொன்று கலந்து அருமையான உணர்வை தரும். கத்திரிக்காய் பிடிக்கும் என்பவர்கள் நிச்சயம் இந்த ஒன் பாட் கத்திரிக்காய் சாதம் ரெசிபியை முயற்சி செய்ய வேண்டும். இதன் சுவை வேற லெவலில் இருக்கும். இப்போது இந்த சுவையான ஒன் பாட் கத்திரிக்காய் சாதம் எப்படி செய்வதென்று பார்ப்போம்.
இதனையும் படியுங்கள் : எண்ணெய் கத்திரிக்காய் குழம்பு
Ingredients
Method
முதலில் கத்தரிக்காயை வெட்டி விடாமல் நான்காக கீறி தண்ணீரில் போட்டு வைத்து கொள்ளவும்.
ஒரு கடாயை அடுப்பில் வைத்து சூடானதும் அரைக்க கொடுத்துள்ள பொருட்களை சேர்த்து பொன்னிறமாக வறுத்து அரைத்து எடுத்துக் கொள்ளவும்.
ஒரு குக்கரை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் கடுகு, உளுத்தம் பருப்பு, கடலைப்பருப்பு, கறிவேப்பிலை சேர்த்து பொரிந்ததும் கத்தரிக்காயை சேர்த்து வதக்கவும்.
பின் உப்பு, அரைத்து வைத்துள்ள மசாலா, மஞ்சள் தூள் சேர்த்து இரண்டு நிமிடங்கள் வதக்கவும். அதன்பிறகு அரிசியை சேர்த்து தேவையான அளவு தண்ணீர் மற்றும் உப்பு சேர்த்து இரண்டு விசில் விட்டு இறக்கவும்.
அதன்பிறகு குக்கரை திறந்து சிறிதளவு நெய் மற்றும் கொத்தமல்லி சேர்த்து நன்கு கலந்து பரிமாறவும். அவ்வளவுதான் சுவையான ஒன் பாட் கத்தரிக்காய் சாதம் தயார்.






