மதிய உணவிற்கு சுட சுட ஒன் பாட் ரசம் சாதம் இப்படி ஒரு முறை செய்து பாருங்கள்!!

வேலைக்கு செல்கிறவர்களுக்கு மற்றும் பள்ளிக்கு செல்லும் குழந்தைகளுக்கு மதிய சாப்பாடு செய்து கொடுப்பார்கள். இதில் அதிகமாக செய்ய கூடிய உணவாக தயிர் சாதம், லெமன் சாதம், புளி சாதம் போன்றவை செய்து கொடுப்போம். ஆனால் இதையே சாப்பிட்டு வந்தால் போர் அடித்து விடும் அல்லவா. அதனால் அவ்வப்போது சற

By Prem Kumar · 2/9/2025

வேலைக்கு செல்கிறவர்களுக்கு மற்றும் பள்ளிக்கு செல்லும் குழந்தைகளுக்கு மதிய சாப்பாடு செய்து கொடுப்பார்கள். இதில் அதிகமாக செய்ய கூடிய உணவாக தயிர் சாதம், லெமன் சாதம், புளி சாதம் போன்றவை செய்து கொடுப்போம். ஆனால் இதையே சாப்பிட்டு வந்தால் போர் அடித்து விடும் அல்லவா. அதனால் அவ்வப்போது சற்று வித்தியாசமாக அவர்களுக்கு ஏதேனும் செய்து கொடுக்கலாம். அந்த வவையில் சுவையான ஒன் பாட் ரசம் சாதம்‌ எப்படி செய்வதென்று இந்த பதிவில் பார்க்கலாம். அவ்வப்போது சற்று வித்தியாசமான ரெசிபியை செய்தால் தான் சமைப்பவருக்கும், சாப்பிடுபவர்களுக்கும் நன்றாக இருக்கும்.

உங்கள் வீட்டில் உள்ளோருக்கு ரசம் என்றால் பிடிக்குமா? ஆனால் நீங்கள் எப்போது ரசம் வைத்தாலும் அது சரியாக வராதா? அப்படியானால் அப்படிப்பட்ட வேளையில் ரசம் சாதத்தை குக்கரில் செய்யுங்கள். நம்முடைய அன்றாட உணவுகளுடன் ரசம் சேர்ப்பது மிகவும் நன்மை பயக்கும் என உணவியல் நிபுணர்கள் கூறுகிறார்கள். நமக்குத் தெரியாமலேயே நாம் தினமும் ரசம் என்ற பெயரில் மருத்துவ குணம் நிறைந்த மருந்தை உண்டு வருகின்றோம் என்பதை எத்தனை பேருக்கு தெரியும்.

ஆம்!…ரசத்தில் சேர்க்கப்படும் மிளகு, சீரகம், மஞ்சள், பூண்டு, பெருங்காயம் போன்றவை எல்லாமே பிரத்யேகமான மருத்துவ குணங்களை கொண்டவை. இந்த அற்புத ரசம் உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கவும், ஜுரம், சளி, கபம் போன்ற பிணிகளை அண்ட விடாமல் விரட்டி அடிக்கவும் உதவுகிறது. ரசத்தில் நாம் மிளகு சேர்ப்பதால், அவை இருமல், தலை சுற்றல் போன்ற பாக்டீரியாவால் ஏற்படும் பிரச்சனைகளுக்கு தீர்வு காண்கின்றது. பூண்டுகள் செரிமானத்திற்கு உதவுகிறது. இப்படி ஏராளமான பயன்களை கொண்டுள்ள ரசம் வைத்து எப்படி ஒன் பாட் ரசம் சாதம் தயார் செய்வது என்று பார்க்கலாம்.

இதனையும் படியுங்கள் : அவசர நேரத்தில் ஒன் பாட் அவரைக்காய் சாம்பார் இந்த மாதிரி செஞ்சு பாருங்க!

Recipes AMP · Quick view
View full